இந்த வார ராசிபலன் 20/01/2025 முதல் 26/01/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 20/01/2025 முதல் 26/01/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ரொம்பவும் சிறப்பான வாரமாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். நீங்கள் வேண்டவே வேண்டாம் என்று உதறி சென்ற உறவுகள் உங்களைத் தேடி வரும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். மன நிம்மதி கிடைக்கும். நிதி நிலைமையை பொருத்தவரை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு தான் காணப்படும். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். வருவாய் கொஞ்சம் குறைவாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. மூன்றாவது நபர் பேச்சை கேட்டு கண்மூடித்தனமாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. பெரிய அளவில் எந்த முதலிடும் செய்ய வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். யாரேனும் முதியவருக்கு, உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு தேவையான மருத்துவ உதவியை செய்யுங்கள். நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அலட்சியமான மனநிலை இருக்கும். எந்த வேலையை எடுத்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தட்டி கழித்து விட்டு செல்வீர்கள். ஆனால் வார இறுதியில் எல்லா வேலையையும் தலைமேல் போட்டுக்கொண்டு, பாரம் தாங்க முடியாமல் திணறுவீர்கள். ஜாக்கிரதை. இந்த வாரம் முதல் கட்டத்தில், நேரத்தை வீணடிக்க கூடாது. அன்றன்று செய்ய வேண்டிய வேலையை, அன்றைக்கே முடிக்க வேண்டும். வியாபாரத்திலும் வேலையிலும் முழு கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியிடங்களில் அதிகம் சாப்பிடக்கூடாது. ஆரோக்கியம் இல்லாத உணவு பண்டங்களையும் சாப்பிடக்கூடாது. பெரியவர்களுடைய பேச்சை அலட்சியப்படுத்தக் கூடாது. தினமும் 10 நிமிடம் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவில் அமைத்து மனதை ஒரு நிலைப்படுத்தி விட்டு வேலைக்கு செல்வது நல்லது.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமைகள் வெளிப்படும். நீங்கள் எதிர்பார்த்ததை விட பெயர் புகழ் அந்தஸ்து கூடி வரும். தலைநிமிர்ந்து வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொள்வீர்கள். சமூகத்தில் நீங்களும் உயர்ந்த மனிதராக மாறுவீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சொத்து சுகம் வாங்குவதில் இருந்த வந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். உங்கள் கைக்கு வர வேண்டிய பணம் சொத்து வந்து சேரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரியவர்களின் ஆசி, இறைவனின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். தினமும் அம்மன் கோவிலுக்கு செல்வது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் நடக்கக் கூடிய வாரமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கைக்கு வரும் பணம் பல மடங்காக விருத்தி அடையும். தொழிலில் முதலீடு செய்தாலும் நிறைய லாபத்தை எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். தேவையில்லாமல் உறவுகளோடு அதிகமாக நெருங்கி பழக வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. குழந்தைகளோடு கொஞ்சம் நேரத்தை அதிகமாக செலவு செய்வது மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். தினமும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள். நன்மை நடக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் அடுத்தவர்களுடைய எண்ணங்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். ஒரு புது ஆடையை அணிந்து கொண்டாலும் அடுத்தவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் அடுத்தவர்கள் பாராட்ட வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்களுடைய சந்தோஷத்தை விட, அடுத்தவர்கள் முன்பு ஆடம்பரத்தை காண்பிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஆனால் இதன் மூலம் நிறைய கண்திருஷ்டி விழ வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை, வேலையிலும் வியாபாரத்திலும் நிறைய நன்மைகள் நடக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். கைநிறைய லாபத்தை சம்பாதிப்பீர்கள். ஆனால் அடக்கத்தோடு இருப்பவர்களுக்கு இந்த வாரம் நல்லது. அடக்கத்தை தாண்டி எல்லை மீறுபவர்களுக்கு பிரச்சினைகள் வரும். ஜாக்கிரதை அங்காளம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது கண்திருஷ்டியை விளக்கி வைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்ற மனப்பக்குவம் இருக்கும். எல்லா பிரச்சனைகளையும், எல்லா பாரத்தையும் இறைவனின் மீது போட்டுவிட்டு, உங்களுடைய வேலைகளை கடமைகளை செய்ய துவங்கி விடுவீர்கள். ஒன்றை மட்டும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எதுவாக இருந்தாலும் நேர்வழியில் நடக்க வேண்டும். பொய் சொல்லக்கூடாது, குறுக்கு வழியில் செல்லக்கூடாது, அடுத்தவர்களுடைய லாபத்தையோ, அடுத்தவர்களுக்கு கிடைக்கக்கூடிய பட்டம் பதவியையும் நீங்கள் தட்டிப் பறிக்கக் கூடாது. சிந்தனையில் எப்போதும் தெளிவு தேவை. அடுத்தவர்கள் பேச்சில் மனம் குழம்பி எந்த முடிவையும் எடுக்காதீங்க. உங்களுக்கு உண்மையாக இருப்பவர், உங்கள் வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடப்பது நல்லது. முருகர் வழிபாடு செய்யுங்கள். மன தெளிவு கிடைக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக இருக்கும். நீண்ட நாள் பண பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். வராத பணம் கையை வந்து சேரும். உங்களுக்கு இருக்கும் பண பிரச்சனையை சரி செய்து விடுவீர்கள். தேவைக்கு ஏற்ப சேமிப்பையும் உயர்த்திக் கொள்வீர்கள். வாழ்க்கை துணைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். சுபச செலவுகள் ஏற்படும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய பேச்சுக்கள் மீண்டும் தொடங்கும். வியாபாரத்திலும் வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சண்டை போட்டுக் கொண்டிருந்த எதிரிகள் கூட சமாதானம் ஆவார்கள். குலதெய்வத்திற்கு நன்றி செல்லுங்கள். முடிந்தால் குலதெய்வ வழிபாட்டை இந்த தை மாதத்தில் ஒரு நாள் வீட்டில் செய்யுங்கள்.
விருச்சிகம்
விருச்சக ராசிக்காரர்கள் இந்த வாரம் புது நண்பர்களோடு புது உறவுகளோடு பழகும் போது, கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். புது மனிதர்களிடம் உங்களுடைய சொந்த விஷயங்களை எல்லாம் அப்படியே சொல்லக்கூடாது. சில ஒளிவு மறைவுகள் தேவை. வேலை செய்யும் இடத்தில் யாராவது புதுசாக வேலைக்கு சேர்ந்தாலோ, அல்லது முதலாளிகள் நெருங்கி பழகினாலும் கொஞ்சம் ஒதுங்கியே இருங்கள். அளவோடு பழகும் போது ஆபத்து கிடையாது. குறிப்பாக எதிர்ப்பாலின நட்போடு கவனமாக இருக்க வேண்டும். வேலை தொழில் எல்லாம் சீராக நல்லபடியாக நடக்கும். பிரச்சனை கிடையாது. ஆரோக்கியத்திலும் நல்ல மேம்பாடு இருக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டு. தினமும் துர்க்கை அம்மனை வழிபடுங்கள். நல்லது கெட்டதை உங்களுக்கு அவள் காண்பித்துக் கொடுப்பாள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் நிறைந்த வாரமாக இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாக கூடிய வாரமாக இருக்கும். நீண்ட நாள் முன்பு செய்த முதலீட்டில், ஒரு தொகை கையை வந்து சேரும். அதன் மூலம் சந்தோஷம் அதிகரிக்கும். கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து மனநிம்மதி அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரமோஷனுக்கு முயற்சி செய்யலாம், புது வேலை தேட முயற்சி செய்யலாம், வெளிநாட்டு வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள். வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு நெய் தானம் செய்வது சிறப்பு.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் செலவுகள் அதிகரிக்கும். செலவை சமாளிக்க முடியாமல் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் சில பேருக்கு உண்டாகும். இதனால் குடும்ப தலைவனுக்கும், தலைவிக்கும் கூடுதல் டென்ஷன் இருக்கலாம். அதை எல்லாம் குழந்தைகள் மீது காட்டக்கூடாது. பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். வெறும் பணத்திற்காக சந்தோஷத்தை இழக்காதீர்கள். அதை மனதில் ஆழ பதிய வைத்துக் கொள்ளுங்கள். மற்றபடி வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்திலும் தேவையில்லாமல் இருந்து வந்த டென்ஷன்கள் குறையும். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள் கூட நிம்மதியோடு உங்களுடைய அன்றாட வியாபாரத்தை கவனிக்க செல்வீர்கள். பசியோடு இருக்கும் இரண்டு பேருக்கு, இந்த வாரம் இரண்டு நாள் சாப்பாடு வாங்கி கொடுங்கள். உங்களுடைய நிதி நிலைமை தானாக சரியாகிவிடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன உறுதியான வாரமாக இருக்கும். எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அதில் நிலையாக நிற்பீர்கள். உங்களுடைய முடிவை நீங்கள் யாருக்காகவும் எதற்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டீர்கள். இதனாலேயே வம்பு வழக்குகள் உங்களைத் தேடி வரும். வேளையில் சின்ன சின்ன சங்கடங்கள் வரும். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். மேலதிகாரிகளுடன் சண்டை, மேனேஜரோடு சண்டை போட்டு போட்டு, இந்த வாரம் அப்படியே ஓடிப் போய்விடும். நேரம் எப்படி போகுது என்று தெரியவே தெரியாது. ஆனால் உங்களைப் பற்றிய சர்ச்சை பேச்சுக்களை, உங்களை சுற்றி இருப்பவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். எதற்கும் செவி சாய்க்காதீர்கள். நேர்மையும் உண்மையும் இருப்பவர்கள் வழியில் எந்த பயமும் இருக்காது. தினமும் அம்பாளை வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் இருக்கும். வேலைகளை சுறுசுறுப்பாக துவங்குவார்கள். நிலுவையில் இருந்த வேலைகளை எல்லாம் இழுத்து போட்டு செய்து விடுவீர்கள். தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் மேல் அதிகாரிகளை, சரிகட்ட நல்ல காலம் பிறக்கும். எதிரிகள் தானாக விலகுவார்கள். நிதி நிலைமை இந்த வார இறுதியில் கொஞ்சம் சீராகும். நிம்மதியாக மூச்சு விடும் அளவுக்கு வருமானம் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நன்றாக பசித்த பின்பு அளவோடு சாப்பிட்டால் போதும். எளிதில் ஜீரணமாக கூடிய பொருட்களை மட்டும் சாப்பிடுங்கள். உங்களால் முடிந்தால் இயலாதவர்களுக்கு, ஊனமுற்றவர்களுக்கு முதியவர்களுக்கு இரண்டு வேலை சாப்பாடு வாங்கி கொடுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top