
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் துணிச்சல் நிறைந்த வாரமாக தான் இருக்கும். உங்களுடைய வேலையில் நீங்கள் அதிக அக்கறையோடு செயல்படுவீர்கள். ஆனால் தேவையில்லாமல் யாராவது உங்களை பிரச்சனைக்குள் இழுத்து விட்டால் அதை சும்மா விடமாட்டீங்க. எதிரிகள் உங்களைப் பார்த்தாலே நடுங்கும் அளவுக்கு சில பல சம்பவங்களை செஞ்சுருவீங்க. இதனால் வேலை செய்யும் இடத்திலும் சரி வியாபாரம் செய்யும் இடத்திலும் சரி, இந்த வாரம் உங்களை பார்க்கும் போது எல்லோருமே கொஞ்சம் உள் மனதில் நடுக்கத்தோடு தான் இருப்பார்கள். இந்த வாரம் துணிச்சல் வெளிப்படும் வாரம். அதிரடியான சம்பவங்கள் நடக்கும் வாரம். என்ஜாய் பண்ணுவீங்க. எதிரிகளை சமாளிக்க இந்த வாரம் வாராஹியை கும்பிடுங்கள் கூடுதல் தைரியம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையான வாரமாக இருக்கும். எல்லா முடிவுகளையும் பொறுமையாக சிந்தித்து எடுப்பீர்கள். அவசரப்பட மாட்டீர்கள். இதனாலேயே உங்களுக்கு நடக்கக்கூடிய நல்லது அந்தந்த நேரத்தில் நடந்து விடும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் நிறைய இருக்கிறது. புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள். உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்வீர்கள். வியாபாரம் நல்ல முன்னேற்ற பாதையில் செல்லும். லாபங்கள் அதிகரிக்கும். தொடர் வெற்றிகள் உங்களுக்கு வந்து குவியும். தினமும் விநாயகரை கும்பிட்டால் மேலும் நன்மைகளை அடையலாம்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் நிறைந்த வாரமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து சரி செய்து விடுவீர்கள். உங்களோடு சண்டை போட்டுக் கொண்டிருந்த சக ஊழியர்களையும் சரிகட்டி உங்களோடு சேர்த்துக் கொள்வீர்கள். வேலையில் நிம்மதி கிடைக்கும். வியாபாரத்தை பொருத்தவரை கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக தான் இருக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வர வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்குள் எந்த ஒலிவும் மறைவும் வேண்டாம். வெளிப்படையாக பேசுங்கள். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் வீட்டில் இருப்பவர்கள் பொய் சொல்லக்கூடாது. தினமும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மையை செய்யும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் சுறுசுறுப்பு வேலை பளு அதிகமாக இருக்கும். கண்ணை மூடி ஓய்வு எடுக்க கூட நேரம் இருக்காது. இருந்தாலும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று உங்களுடைய வாழ்க்கையை நீங்களே ஒரு வரைமுறைக்குள் கொண்டு வருவீர்கள். இந்த வாரம் நீங்கள் வேறு ஒரு அவதாரம் எடுக்க போகிறீர்கள். படு சுறுசுறுப்பு உங்கள் இடத்திலிருந்து வெளிப்படும். பார்ப்பவர்களுக்கு உங்கள் மீது ஒரு பொறாமை குணமே வரும். அந்த அளவுக்கு உங்களுடைய உழைப்பு இருக்கும். கவலைப்படாதீங்க எல்லாம் நல்லபடியாக நடக்கும். உங்களுக்கு துணையாக அந்த அம்பாளை கூடவே வச்சுக்கோங்க. அம்பாள் வழிபாடு இந்த வாரம் அமோகமான வெற்றியை கொடுக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையாக இருக்க வேண்டும். எல்லா விஷயத்திற்கும் அவசரப்படக்கூடாது. முன்கோபடக்கூடாது, எவ்வளவு கோபம் அதிகரிக்கிறதோ அவ்வளவு உங்களுடைய வாழ்க்கையில் நன்மைகளும் குறைந்து கொண்டே வரும். உறவுகளோடு பிள்ளைகளோடு வாழ்க்கை துணையோடு விட்டுக் கொடுத்து நடந்து பாருங்கள். இந்த வாரம் அத்தனை சந்தோஷங்கள் உங்களுக்கு கிடைக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பொறுமை காக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானமாக செயல்பட வேண்டும். தினமும் ஈசனை நினைத்து ஐந்து நிமிடம் தியானம் செய்யுங்கள். நன்மை நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் தந்திர வேலைகளை செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். அடுத்தவர்களை பற்றி பேசக்கூடாது. அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடக்கூடாது. அடுத்தவர்கள் வீட்டை எட்டிப் பார்க்கக் கூடாது இது எல்லாம் சரிதான். இருந்தாலும் நமக்கு பின்னால் யார் குழி தோண்டுகிறார்கள் என்பதை நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா. அதற்கான ஆராய்ச்சிகளை இந்த வாரம் நீங்கள் செய்ய வேண்டும். அப்போதுதான் வரும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடியும். வேலை வியாபாரம் எல்லாவற்றிலும் திறமை வெளிப்பட்டால் மட்டுமே இந்த வாரம் உங்கள் பிழைப்பு ஓடும். மற்றபடி வீட்டில் சந்தோஷம் இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். தினமும் அனுமனை வழிபாடு செய்யுங்கள் நன்மை நடக்கும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுப காரிய தடைகள் விடுபடக்கூடிய வாரமாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சுப காரிய செலவுகளை சமாளிக்க சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வேலைக்கு அடிக்கடி லீவு போடாதீங்க. வேலையில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அவர்கள் எதிர்பார்த்த மேல்படிப்புக்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம். மற்றபடி இந்த வாரம் பெருசாக எந்த பிரச்சனையும் கிடையாது. தினமும் உங்கள் கையால் பசு மாட்டிற்கு வாழைப்பழம் வாங்கி கொடுத்தால் மேலும் நன்மைகள் நடக்கும்.
விருச்சிகம்
விருச்சக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை உண்டாகும். குடும்பத்திற்கு கொஞ்சம் சுப செலவுகளை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா செல்வதற்கு கூட சில குடும்பங்களில் வாய்ப்புகள் இருக்கிறது. வெளியிடங்களுக்கு சென்று எந்த அளவுக்கு சந்தோஷத்தை அனுபவிக்கிறீர்களோ, அதே அளவுக்கு பாதுகாப்புமா முக்கியம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதிக வெயிலில் வெளியே போக வேண்டாம். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிட வேண்டும். அதே சமயம் வேலை, வியாபாரத்தில் அக்கறை காட்ட வேண்டும். பயணங்களின் போது கூடுதல் கவனம் தேவை. உடைமைகளை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். தினமும் முருகர் வழிபாடு உங்களுக்கு நல்ல வழியை காட்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. எதிர்வாராத பண வரவு மன திருப்தியை கொடுக்கும். அந்த பணவரவின் மூலம் சொத்து சுகம் வண்டி வாகனம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். என்னதான் பணம் வந்தாலும் கவுரவம் வந்தாலும் நம்முடைய வாழ்க்கைத் துணையோடு அனுசரணையாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையோடு இந்த வாரம் கவனமாக இருங்க. ஈகோ வெளிப்படுத்தாதீங்க. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் மட்டுமே குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பேசுவதை இந்த வாரம் குறைத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும். மகாலட்சுமி வழிபாடு இந்த வாரம் மனதிற்கு அமைதியை தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் நிறைந்த வாரமாக இருக்கும். பிரச்சனையாக இருந்த நிதி நிலைமையை உங்கள் வாழ்க்கையில் சீர் செய்து விடுவீர்கள். கடன் சுமை குறையும். மன நிம்மதி கிடைக்கும். வட்டி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். நிச்சயம் இந்த வாரம் இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் பொறுப்பு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டாம். பார்ட்னரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். வண்டி வாகனம் ஓட்டும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தினமும் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு போய் விளக்கு போட்டு சாமி கும்பிடுங்க நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பெருமை பேசக்கூடிய வாரமாக இருக்கும். உங்கள் பெருமையை நீங்களே பேசுப்பீங்க. தற்பெருமை ரொம்பவும் ஆபத்து. அதை கண்ட்ரோல் பண்ண பாருங்க. வெளியூரில் இருப்பவர்கள் சொந்த நாடு திரும்புவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தில் பிரச்சனை இருக்காது. வேலையிலும் பிரச்சனை இருக்காது. கடன் பிரச்சனை கொஞ்சம் கழுத்தை நெறிக்கும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க கையில் பணம் இருக்காது. இதையெல்லாம் சரி கட்டுவதற்குள் கொஞ்சம் கோபம் அதிகரிக்கும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். கூடுமானவரை உங்களுடைய பேச்சை குறைத்தாலே இந்த வாரம் வரும் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஜாக்கிரதை தினமும் குலதெய்வத்தை கும்பிடுங்கள் நன்மை நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி நிறைந்த வாரமாக இருக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் மேம்பாடு இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் அமோகமான வரவேற்பு காத்துக் கொண்டிருக்கிறது. வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை உங்களுக்கு அதிகமாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் வெற்றியை அடையும். சோசியல் மீடியாவில் அதிகம் இருக்காதீங்க. அடுத்தவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி விமர்சனம் பேச வேண்டாம். மீனாட்சி அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam