இந்த வார ராசிபலன் 22/09/2025 முதல் 28/09/2025 வரை – 28 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 22/09/2025 முதல் 28/09/2025 வரை – 28 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!



மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுபம். வீட்டில் தடைப்பட்டு வந்த நல்ல காரியங்கள் எல்லாம் மீண்டும் நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வீட்டில் ஆன்மீக ரீதியாக நிறைய நல்ல விஷயங்களை செய்யலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள், எதிர்காலத்தில் நல்ல லாபத்தை கொடுக்கும். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். நிதிநிலைமை சீராகும். அடமானத்தில் இருக்கும் பொருட்களை மீட்பதற்கு வாய்ப்புகள் அமையும். நவராத்திரி நாளில் ஏதாவது ஒரு நாள், அம்பாள் கோவிலில் சுண்டல் தானம் செய்யுங்கள் நன்மை நடக்கும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை நடக்கும். எதிர்காலத்தின் முன்னேற்றத்துக்கு தேவையான நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வியாபாரத்தை முன்னேற்ற வங்கி கடன்கள் முயற்சி செய்யலாம். பாசிட்டிவ்வான ரிசல்ட் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உறவுகளோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வாக்குவாதம் செய்யாதீங்க. விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். இந்த நவராத்திரி நாட்களில் ஏதாவது ஒரு நாள், 10 பென்சில், 10 நோட்டு புத்தகம் வாங்கி ஏழை குழந்தைகளுக்கு தானம் கொடுங்கள் நன்மை நடக்கும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பெயர் புகழ் அந்தஸ்து கூடும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் உங்களைத் தேடி வரும். கைநிறைய வருமானம் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருளை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் நீங்கும். பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்கு சேமிப்பை துவங்கலாம். அவமானப்படுத்தியவர்கள் முன்பு சாதனை படைப்பீர்கள். தலைகுனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். நவராத்திரி நாளில் ஏதாவது ஒரு நாள் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு குங்குமம் வாங்கி தானம் கொடுங்க நல்லது.கடகம்கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதி கிடைக்கும். தேவையற்ற மன சஞ்சலங்களில் இருந்து விடுபடுவீர்கள். எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக பிரச்சனை தந்து வந்த விஷயங்களை பேசி, ஒரு முடிவுக்கு கொண்டு வருவீர்கள். வேலையில் அதிக அக்கறை காட்ட வேண்டும். நேரத்தை வீணடிக்க கூடாது. நிதானம் தேவை. வாடிக்கையாளரையோ அல்லது பார்ட்னரையோ பகைத்துக் கொள்ள வேண்டாம். மனைவி வழி சொந்தத்தோடு கவனமாக பேசவும். இந்த நவராத்திரி தினத்தில் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய அம்மன் கோவிலுக்கு விளக்கு ஏற்ற நல்லெண்ணெய் வாங்கி கொடுங்க நல்லது நடக்கும். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பொறுமை தேவை. கையில் இருக்கும் பணத்தை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது நபரிடம் ஒரு விஷயத்தைப் பற்றி பேசும்போது, ஒன்றுக்கு பலமுறை சிந்திக்க வேண்டும். உடன் இருக்கும் நண்பர்களே உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். முதலீட்டில் நிதானம் தேவை. வேலையிலும் வியாபாரத்திலும் அனுசரணை தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கோபப்பட வேண்டாம். நவராத்திரி ஒன்பது நாளும் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று அம்பாளை வழிபடுங்கள் மனது ஒருநிலைப்படும்.கன்னிகன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த வாரம் கொஞ்சம் அதிரடியான வாரமாகத்தான் இருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு கூட உங்களுக்கு முன்கோபம் வரும். சின்ன சின்ன விஷயத்தை கூட பேசிப்பேசியே பெருசாக மாத்திடுவீங்க. இதனால் இருக்கும் வேலை செய்யும் தொழிலுக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. மனதை அமைதிப்படுத்துங்கள். தினமும் சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு இருக்கும் துர்க்கையின் முன்பு அமர்ந்து 9 நிமிடம் தியானம் செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கான நல்லது உங்களைத் தேடி வரும். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த வாரம் நன்மை நடக்கும் வாரம்தான். புது முயற்சிகள் வெற்றியைத் தரும். நல்ல வாய்ப்புகள் உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக பிரச்சனைகள் வராது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உறவுகளை நம்பி எந்த ஒரு விஷயத்தையும் சொல்லாதீங்க. அவர்கள் சொல்கிறார்கள் இவர்கள் சொல்கிறார்கள் என்று நம்பிக்கையானவர்களை சந்தேகமும் படாதீங்க. குறிப்பாக கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்க வேண்டும். நவராத்திரி நாளில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு போட்டு வழிபாடு செய்யுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த வாரம் இனிமையான வாரமாக இருக்கும். பல நாள் பிரிந்த நண்பர்கள் அல்லது மனதிற்கு பிடித்த நபரை சந்திக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும். பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் அளவுக்கு சில சம்பவங்கள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக பிரச்சனைகள் இல்லை. உங்களுடைய கடமைகளை சரியாக செய்து கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இந்த நவராத்திரி நாளில் வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி தானம் கொடுங்கள்.தனுசுதனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த வாரம் மன தைரியம் அதிகரிக்கும். உங்களுடைய விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்ள முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதிற்கு பிடிக்காத விஷயங்களை செய்ய மாட்டீர்கள். நேர்வழியில் நடந்து கொள்வீர்கள். இதனால் சில எதிர்ப்புகள் உண்டாகும். எதிர்ப்புகளை சமாளிக்கும் அளவுக்கு தைரியமும் உங்களிடத்தில் இருக்கும். பிரச்சினை கிடையாது. சொந்தபந்தங்களோடு சின்ன வாக்குவாதம் வந்து விலகும். பணத்தடை நீங்கும். பிள்ளைகளுடைய எதிர்காலம் சிறப்பாக அமையும். இந்த நவராத்திரி நாளில் மாலை நேரத்தில் உங்கள் கையால் கோவிலுக்கு வரும் குழந்தைகளுக்கு முடிந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுங்கள். நல்லது நடக்கும்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமை வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் வரும் பெரிய பெரிய பிரச்சனைகளை கூட சுலபமாக தீர்த்து வைத்து விடுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். வீட்டில் இருக்கும் பெண்கள் குடும்ப நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். வண்டி வாகனம் ஓட்டும்போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும். இது புரட்டாசி மாதம். பெருமாள் கோவிலுக்கு விளக்கு ஏற்ற நல்லெண்ணெய் தானம் கொடுப்பது சிறப்பு.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன உறுதி வெளிப்படும் வாரமாக இருக்கும். உங்களுடைய வியாபாரம் வேலை எல்லா விஷயத்திலும் நம்பிக்கையோடு செயல்படுவீங்க. வரக்கூடிய பிரச்சினைகளை எதிர்த்துப் போராடி ஜெயிப்பீர்கள். கஷ்டம் வந்து விட்டதே என்பதற்காக உடைந்து உட்கார மாட்டீர்கள். மனசு உடைந்த அடுத்த நிமிடமே, தைரியத்தை வர வைத்துக் கொள்வீர்கள். இதனால் பல இழப்புகளிலிருந்து தப்பித்து வருவீர்கள். பிரச்சனை வரும். போராடுவீர்கள். ஆனால் கடைசியில் வெற்றி உங்களுக்கே. இறைவன் மீது பாரத்தை போட்டு தொடர்ந்து உங்கள் சவால்களை எதிர்கொள்ளுங்கள் நல்லது நடக்கும். புரட்டாசி மாதம் ஹனுமனை வழிபடுங்கள் மேலும் தைரியம் அதிகரிக்கும்.மீனம்மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த வாரம் சிந்தனை அதிகமாக இருக்கும். நடந்து முடிந்த பழைய விஷயங்களை யோசித்து எந்த பிரயோஜனமும் இல்லை. ஆகவே சிந்திப்பதற்காக தனியாக நேரத்தை ஒதுக்கி வைத்து விடுங்கள். வேலை நேரத்திலும், வியாபார நேரத்திலும் மனதை போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. நாம் உழைத்தால் தான் நமக்கு சோறு. நாம் நன்றாக இருந்தால் தான் நம்முடைய குடும்பத்திற்கு நல்லது என்று எண்ணி வேலையில் ஆர்வம் காட்டினால் மட்டுமே நல்லது. தேவையில்லாத விஷயங்களை சிந்திக்கும் போது நேரம் வீணாகும். வேலையிலும் வியாபாரத்திலும் குழப்பம் வந்துவிடும். பார்த்துக்கோங்க, வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு தினமும் போய்டு வாங்க மனது தெளிவு அடையும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top