
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகிவிடும். கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. மொத்தத்தில் இந்த வாரம் அமோகமான அதிர்ஷ்டம் நிறைந்த வாரம் தான். ஆனால் கொடுக்கல் வாங்கல் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. உடல் உபாதைகள் ஏதாவது இருந்தால் உடனடியாக மருத்துவரை பாருங்கள். தினமும் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் யாரையும் அவ்வளவு எளிதில் முழுசாக நம்பி விடக் கூடாது. கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய வேலையை நீங்கள் தான் பார்க்க வேண்டும். பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைத்துவிட்டு, நீங்கள் ஜாலியாக திரியக்கூடாது. பிரச்சனைகள் பெரிதாகிவிடும் பார்த்துக்கோங்க. செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். வீட்டில் சில பல பிரச்சனைகள் வரலாம். ஜாக்கிரதை, மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. தினமும் விநாயகரை கும்பிடுங்கள். வரும் பிரச்சனைகள் சரியாக இதுதான் ஒரே வழி.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். துணிச்சல் அதிகமாக இருக்கும். எதற்கெடுத்தாலும் தனிநபர் சுதந்திரம் என்று சொல்லி உங்கள் இஷ்டத்திற்கு நிறைய வேலைகளை கண்மூடித்தனமாக செய்வீர்கள். இதனால் வரும் நல்லது அதிகமாக இருந்தாலும், இதன் மூலம் வரும் பின் விளைவுகளை உங்களுக்கு அதிகமாக இருக்கும். அதனால் கவனமாக இருக்க வேண்டும். என்னதான் தன்னம்பிக்கை தைரியம் இருந்தாலும் விழிப்புணர்வு கட்டாயம் தேவை. பெரியவர்களின் ஆலோசனை கட்டாயம் தேவை. தலைகனம் இந்த வாரம் கூடவே கூடாது. ஆரோக்கியத்திலும் கவனம் இருக்க வேண்டும். உங்களுடைய உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். நிதானம் பொறுமை தேவை என்றால் சிவன் கோவிலில் அமர்த்து தியானம் செய்யுங்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் பொறுப்புகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். நேரத்திற்கு சாப்பிடுங்கள். நேரத்திற்கு அந்தந்த வேலையை செய்து முடித்து விடுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சோம்பேறித்தனத்தோடு இருக்கக் கூடாது. உங்களை நீங்கள் பார்த்துக் கொள்வது மட்டுமல்லாமல், உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அதிகமாக இருக்கும். மற்றபடி வேலை செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள் எல்லாம் உங்களுடைய கடமையில் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். நேர்வழியில் செல்ல வேண்டும். குறுக்கு பாதையை தேர்ந்தெடுக்க கூடாது. ஏதாவது இறைவனுக்காக செய்ய வேண்டும் என்றால் தினமும் ஒரு மணி நேரம் மௌன விரதம் இருங்கள். மனது உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கும். உங்கள் கையை விட்டு சென்ற பொருட்கள் எல்லாம் மீண்டும் உங்கள் கையை வந்து சேரும். கடன் சுமை வசூல் ஆகும். அடமானத்தில் இருந்த சொத்து நகை மீண்டும் உங்கள் கையை வந்து சேரும். வியாபாரத்திலும் வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகள் விலகி நிற்பார்கள். நண்பர்கள் தானாக ஒன்று சேர்ந்து நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். மாணவர்கள் கல்வியில் கவனமாக இருக்க வேண்டும். நேரத்தை அனாவசியமாக வீண் அடிக்கக்கூடிய எந்த வேலையிலும் உங்களுடைய மனது போகக்கூடாது. கெட்ட பழக்க வழக்கத்திற்கு அருமையாகி விடக் கூடாது. இந்த வாரம் துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தூங்க கூட நேரம் இருக்காது என்று வைத்துக்கொள்ளுங்கள். அத்தனை வேலை சுமை, அதிகமாக இருக்கும். ஆனால் கவலைப்படாதீங்க. இறைவனின் அருளும் உங்களிடத்தில் இருக்கிறது. எவ்வளவு கஷ்டங்களை அந்த கடவுள் உங்களுக்கு கொடுக்கின்றானோ, அதே அளவுக்கு பலத்தையும் தைரியத்தையும், உங்களுக்கு கொடுத்திருப்பான். பிரச்சனைகளை சமாளித்து எதிர்நீச்சல் போட்டு எல்லா விஷயத்தில் இருந்தும் நீங்கள் மீண்டு வந்து விடுவீர்கள். வேலை தொழிலில் வெற்றிக்காக அயராது உழைப்பீர்கள். நல்ல பலன் கிடைக்கும். தினமும் அனுமன் வழிபாடு செய்யுங்கள் மேலும் பலமும் தைரியமும் உங்கள் மனதை உறுதி செய்யும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய அனுபவ பாடங்கள் கிடைக்கும். நிறைய பேருடைய முகத்திரை கிழியும். நல்லவர்கள் என்று நம்பி, நீங்கள் பழகி ஏமாறுவீர்கள். ஆனால் இப்போதாவது இப்படிப்பட்ட நட்பு கூடாது என்று புரிந்து கொண்டீர்களே. அதுவே போதும். தீமை உங்களை விட்டு விலகக்கூடிய காலம் வந்து விட்டது. வேலையிலும் வியாபாரத்திலும் நம்பி மோசம் போனதை நன்றாக புரிந்து கொள்வீர்கள். இனிமேலாவது கண் விழித்த செயல்பட வேண்டும் என்று உங்களுடைய அறிவுக்கண் திறந்து விடும். கவலைப்படாதீங்க பிரச்சனைகள் வந்தாலும் கடவுள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பான். இத்தனை நாள் செய்த தவறில் இருந்து வெளிவந்து புது வாழ்க்கையை ஆரம்பிக்க பிள்ளையார் சுழி போடுவீர்கள். மகாலட்சுமியை அம்பாளை தினமும் கும்பிடுங்கள் நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் வேலையில் முழு மூச்சோடு ஈடுபடுவீர்கள். கடினமான வேலைகளை கொடுத்தாலும், அதில் உங்களுடைய பங்கு அதிகமாக இருக்கும். கஷ்டம் என்று எந்த வேலையையும் விட்டு ஒதுங்கி விட மாட்டீர்கள். வியர்வை சிந்தி உழைப்பீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெறுவீர்கள். மனநிறைவை பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வை கொடுப்பீர்கள். சுப காரியங்கள் வீட்டில் நடக்க துவங்கும். உடல் உபாதைகள் நீங்கும். பெரியவர்களின் ஆசிர்வாதமும் இறைவனின் ஆசிர்வாதமும் ஒருசேர கிடைக்க பெற்று, இந்த வாரம் சந்தோஷமாக இருக்கும். ஜாலியாக நேரத்தை கழிப்பது மட்டும் சந்தோஷம் அல்ல. வியர்வையில் உழைத்து விட்டு இரவு நிம்மதியான தூக்கத்தை பெற்றாலும், அதில் ஒரு இன்பம் இருக்கும். அது உங்களுக்கு இந்த வாரம் கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை நிதானம் அமைதி தேவை. முன்கோபம் கூடாது. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு பேசி விடக்கூடாது. ஒன்றுக்கு பலமுறை சிந்தித்த பிறகுதான் ஒரு வார்த்தை வாயிலிருந்து வரவேண்டும். குடும்ப பிரச்சினையாக இருந்தாலும் சரி, வியாபார பிரச்சனை அலுவலக பிரச்சனை எந்த பிரச்சினையாக இருந்தாலும் அமைதியை முதலில் ஆயுதமாக எடுத்துக் கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை அடுத்த வாரம் தள்ளி வையுங்கள். புதிய முதலீடுகளை செய்யாதீர்கள். பெரியவர்களுக்கு மதிப்பு மரியாதையும் கொடுத்து நடக்க வேண்டும். இரண்டு அனுபவ சாலிகளை கூடவே வைத்துக் கொள்ளுங்கள். முருகனை வழிபடுங்கள் நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் படு சுறுசுறுப்பான வாரமாக இருக்கும். சனிக்கிழமை செய்ய வேண்டிய வேலையை திங்கட்கிழமை முடித்து விடுவீர்கள். ஆனால் திங்கட்கிழமை செய்யும் வேலையை சரியாக செய்ய மாட்டீர்கள். எதிர்காலத்தை பற்றியும் அடுத்த நாளை பற்றியும் சிந்திப்பதில் உள்ள அக்கறையை, அன்றைய நாளின் மீது வையுங்கள். ஆர்வக்கோளாறில் சில பல தவறுகளை செய்வீர்கள். அப்படி கிடையாது. எந்த வேலையை முதலில் செய்ய வேண்டும் எந்த வேலையை பின்பு செய்ய வேண்டும் எந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். எதிலும் ஒரு பிளான் வேணும். இல்லையென்றால் பிரச்சனை தான் பார்த்துக்கோங்க. இந்த வார இறுதியில் டென்ஷன் அதிகமாகிவிடும். எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். தினமும் பைரவர் வழிபாடு செய்யுங்கள். பிரச்சனைகள் விலகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பிரச்சனைகள் நிறைந்த வாரமாக தான் இருக்கும். காரிய தடைகள் இருக்கும். வேலையில் பயங்கரமான பிரஷர் இருக்கும். மேலதிகாரிகளை சமாளிக்க முடியாது. உடல் ஆரோக்கியத்தையும் பிரச்சினை இருக்கும். அலுவலக பிரச்சனையை வீட்டில் சொன்னால் நிச்சயம் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்களும் இந்த பக்கம் ஒரு இடி இடிப்பார்கள். எல்லா பிரச்சனைகளையும் தலைமையில் போட்டு சுமக்க வேண்டிய சூழ்நிலைதான் உண்டாகும். வேறு வழி கிடையாது அட்ஜஸ்ட் செய்து இந்த வாரத்தை மெதுவாக நகர்த்திச் செல்ல வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தேர்வுகளை சூப்பராக எழுதுவீங்க பிரச்சனை கிடையாது. ரொம்பவும் உடல் உபாதையில் உள்ளவர்களுக்கு உங்களால் முடிந்த மருத்துவ செலவை உதவியாக செய்யுங்கள். உங்கள் கஷ்டத்தில் பாதி சரியாகிவிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வராது. அது வந்தாலே பிரச்சனைகளை சமாளித்து விடலாம். பணம் வாசல் வரைக்கும் வந்தாலும் வேறு செலவுக்கு வெளியே செல்லுமே தவிர, கையில் சேமிப்பு தாங்காது. இதனாலே பெரிய பிரச்சனை குடும்பத்தில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பேலன்ஸ் செய்யுங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புது முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்திலும் டார்கெட்டை சரியாக முடிப்பீங்க. உங்கள் கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். குடும்பத்தை சமாளிப்பது தான் சிக்கல். சிவன் பார்வதி முருகர் பிள்ளையார் இப்படி குடும்பத்தோடு இருக்கும் தெய்வங்களை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருங்கள். மனது நிம்மதி அடையும். குடும்பத்தில் சந்தோஷமும் கிடைக்கும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam