இந்த வார ராசிபலன் 27/01/2025 முதல் 02/02/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 27/01/2025 முதல் 02/02/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் நிற்பதற்கு கூட நேரம் இருக்காது. உங்களுடைய வேலை தலைக்கு மேல் கொட்டிக் கிடக்கும். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் இந்த வாரம் கூடிக் கொண்டே செல்லும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இப்படி பல நன்மைகள் உங்களைத் தேடி வரும். இந்த வாரம் தினம் தினம் குல தெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நினைத்த நல்லது எல்லாம் ஒவ்வொன்றாக நடக்கும். அதேசமயம் நல்லதை நடத்திக் காட்ட கொஞ்சம் உழைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். அவ்வளவு எளிதில் நன்மை உங்கள் கையை வந்து சேராது. ஆனால் எந்த தோல்வியும் எந்த கெட்டதும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. கடின உழைப்பை முதலீடாக போட்டால் நினைத்துவிட நல்லது நடக்க துவங்கிவிடும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். வியாபாரம் செய்பவர்கள் தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் உழைப்பவர்களாக இருந்தால், 10 மணி நேரம் உழைக்கும் போது பல நன்மைகள் கிடைக்கும். தினமும் வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையாரை கும்பிடுங்கள் போதும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனது தெளிவு இருக்கும். அடுத்தவர்கள் போட்டு உங்களை குழப்பி விட்டாலும், எந்த தேவையில்லாத விஷயத்திற்கும் போக மாட்டீர்கள். இது நமக்கு நன்மை தரும். இதை செய்யலாம், என்று உங்களுக்கு தெளிவாக புரியும். இந்த பக்கம் போனால் நமக்கு பிரச்சனை. இதை செய்யவே கூடாது என்பதும் உங்கள் புத்திக்கு தெளிவாக தெரியும். ஆக மொத்தத்தில் இந்த வாரம் அந்தந்த வேலைகளை அந்தந்த நேரத்தில் பொறுப்போடு செய்து முடிக்க போகிறீர்கள். உற்சாகம் இருக்கும். அடுத்தவர்களுடைய தொந்தரவு இருக்காது. எதிரி தொல்லை இருக்காது. நன்மையே நடக்கும். வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களுடைய ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். தினமும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மையை தரும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் நேரமே இருக்காது. எல்லா வேலைகளையும் எவ்வளவு சுறுசுறுப்பாக செய்தாலும் கடைசியில் இன்னும் கொஞ்சம் வேலையை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். உடல் சோர்வு இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளுடைய ஆதரவை பெற வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது. பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த லாபத்தை பெறுவீர்கள். சிவன் கோவிலில் இருக்கும் நந்தி தேவர் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் நிறைந்த வாரமாக இருக்கும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் இழுபறியாக இருக்கும். கைக்கு வந்து சேர வேண்டிய பணம் வராமல் கொஞ்சம் பிரச்சனையை கொடுக்கும். உறவுகளோடு கவனமாக பேசி பழக வேண்டும். மற்றபடி வியாபாரம் தொழிலில் எல்லாம் கூடுதல் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து நடக்கவும். தினமும் முருகர் வழிபாடு நன்மையை தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தேவையற்ற பிரச்சனைகள் தானாக விலகிவிடும். தேவையற்ற எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவுகளோடு இருந்து வந்த சண்டைகள் எல்லாம் சரியாகிவிடும். வேலையிலும் வியாபாரத்திலும் அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வீர்கள். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். தினமும் அனுமன் வழிபாடு உங்களுக்கு மன தைரியத்தை கொடுக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய சிந்தனை இருக்கும். குழந்தைகளை பற்றி சிந்திப்பீர்கள். குடும்பத்தை பற்றி சிந்திப்பீர்கள். எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பீர்கள். எதிர்கால சேமிப்பை அதிகரிக்க வேண்டும் என்று சில பல முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இப்படி பலவகையில் சிந்திக்கும்போது நீங்கள் செய்த தவறுகளை நீங்களே உணருவீர்கள். இனி அந்த தவறை செய்யக்கூடாது என்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்வீர்கள். ஆக மொத்தத்தில் எதிர்காலத்திற்கு தேவையான அத்தனை நன்மைகளும் இந்த வாரம் நடக்கும். புது நண்பர்களின் அறிமுகம் புது அனுபவத்தை கொடுக்கும். வியாபாரம் வேலையில் எல்லாம் நிறைய புது விஷயங்களை கற்றுக் கொள்ள வாய்ப்புகளும் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை இருக்கிறது. மகாலட்சுமி வழிபாடு உங்கள் பண பிரச்சனையை தீர்க்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி கிடைக்கக்கூடிய வாரமாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய வேலை தேடலாம். புது வீடு வாடகைக்கு கிடைக்க வேண்டும் என்று, எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாடகை வீடு கிடைக்கும். சொந்தமாக இடம் வீடு வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்றாலும், அந்த நல்ல காரியங்கள் எல்லாம் கை கோடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்களும் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் வெற்றி காண்பீர்கள். தினமும் பைரவர் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் மனது மகிழ்ச்சியாகவே இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் உண்டு. பெற்றவர்களுடைய மனது நோகும் படி நடந்து கொள்ள மாட்டீர்கள். எல்லா விஷயத்திலும் அனுசரணை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெற்றியும் காண்பீர்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். திட்டிக் கொண்டே இருந்த மேலதிகாரிகள் கூட, ஒரு நல்ல வழிக்கு வந்து விடுவார்கள். தினமும் விநாயகர் வழிபாடு செய்யுங்கள். நல்லதே நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் நிறைந்த வாரமாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அடுத்த நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை கூட இன்றே செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். இறைவழிபாட்டை நிறைவோடு செய்வீர்கள். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். வியாபாரத்திலும் தொழிலிலும் நிறைய முன்னேற்றம் இருக்கும். வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கும். நீண்ட தூர பயணங்கள் வெற்றியை கொடுக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். தினமும் சிவன் வழிபாடு நன்மையை தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பெரிய அளவில் இருக்கக்கூடிய சிக்கல்கள் கூட சுலபமாக நீங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. பொருளாதார பிரச்சனை நீங்கும். வீட்டிலிருந்த சண்டை சச்சரவுகள் விலகும். புரியாமல் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த ஈகோ பிரச்சனைகள் சரியாகும். பிரிந்து கணவன் மனைவி ஒன்று சேரவும் வாய்ப்புகள் இருக்கிறது. வேலையில் கொஞ்சம் அமைதி காக்கவும். மேல் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். தலைகனம் இருக்க வேண்டாம். ஜெயித்து விட்டோம், என்ற சந்தோஷத்தில் தவறாக எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது. எதிலும் நிதானமாக இருக்கவும். தினம்தோறும் மனதை ஒருநிலைப்படுத்த பத்து நிமிடங்கள் கண்களை மூடி “ஓம் நமசிவாய” மந்திரம் சொல்லுங்கள் அல்லது இஷ்ட தெய்வத்தின் நாமத்தை சொல்லுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பல வகையான சிந்தனைகள் தோன்றும். நிதிநிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். அன்றாட செலவுக்கு கூட சில பேர் கடன் வாங்க வேண்டியது சூழ்நிலையில் இருப்பீர்கள். கவலைப்படாதீர்கள். பிப்ரவரி மாதம் பிறந்ததும் உங்களுக்கான நல்ல காலமும் பிறந்து விடும். இந்த மாத இறுதிக்கட்டத்தை நகர்த்திச் செல்வதில் சிரமம் இருக்கத்தான் செய்யும். இறைவனின் மீது பாரத்தை போட்டு விடுங்கள். இருக்கும் வேலையை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். யார் மனதும் புண்படும்படி பேசவே கூடாது. உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டை கடலை மாலை போட்டு விளக்கு போடுங்கள். மஞ்சள் நிற ஆடை போடுங்கள் நல்லது நடக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top