இந்த வார ராசிபலன் 29/09/2025 முதல் 05/10/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 29/09/2025 முதல் 05/10/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!



மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் திறமையாக செயல்படுவீர்கள். உங்களுடைய வேலைகளை எல்லாம் திறமையாக செய்து முடிப்பீர்கள். பேச்சாற்றல் வெளிப்படக்கூடிய வாரம் இது. சாதுரியம் உங்களுடைய பிரச்சினைகளை சரி செய்யும். தொலைநோக்குப் பார்வை இருக்கும். எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை கணித்து முன்கூட்டியே, சில பிரச்சனைகளுக்கான முடிவுகளை எடுப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானத்தோடும் நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கவனம் தேவை. செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது சிறப்பு.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் காரிய தடை விலகக் கூடிய வாரமாக இருக்கும். வேலை வியாபாரத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அதை சரி செய்ய முயற்சிகளை மேற்கொள்ளலாம். குடும்பத்தில் நிதி நிலைமை சீர்படும். தேவைக்கு ஏற்ப வருமானம் இருக்கும். பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாக கூடிய வாரம் இது. வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு போடுங்கள் நல்லது நடக்கும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பான வாரமாக இருக்கப் போகிறது. வீட்டில் இருக்கும் பெண்கள் பிசியாக இருப்பீர்கள். ஆன்மீக வழிபாட்டு முறைகள் சிறப்பாக நடந்து முடியும். தேவையற்ற பிரச்சனைகள் தானாக விளக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். புது முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முதலீட்டில் கொஞ்சம் கவனம் தேவை. அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பு.கடகம்கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த வாரம் கொஞ்சம் சுப செலவுகள் அதிகரிக்கும். சில பேருக்கு கொஞ்சம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். எதுவாக இருந்தாலும் அகல கால் வைக்காதீர்கள். தகுதிக்கு ஏற்ப நிதி நிலைமையை சரி செய்து கொள்ளுங்கள். மற்றபடி வேலை வியாபாரத்தில் சுறுசுறுப்பு தேவை. நேரத்தை வீணடிக்க கூடாது. சோசியல் மீடியாவில் அதிக நேரம் செலவு செய்யக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். தினமும் சிவன் கோவிலுக்கு சென்று ஈசனை வழிபாடு செய்தாலும் தவறு இல்லை. – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் துணிச்சல் வெளிப்படக்கூடிய வாரமாக இருக்கும். எதிரிகளை பந்தாடுவீர்கள். வேலை வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகளை சரி செய்ய நேர்வழியில் நடப்பீர்கள். யாரைக் கண்டும் அஞ்ச மாட்டீங்க. இருக்கும் எதிரிகள் போக புது எதிரிகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் நிதானம் தேவை. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் முன்கோபத்தை குறைத்து, பேச்சை குறைத்து நடப்பது நல்லது. வரக்கூடிய சரஸ்வதி பூஜைக்கு உங்களால் இயன்ற உதவியை ஏழை குழந்தைகளுக்கு செய்யுங்கள் நல்லது நடக்கும்.கன்னிகன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த வாரம் நிறைய நல்லது நடக்கும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். யாரெல்லாம் உங்களை ஒதுக்கி வைத்து அவமானப்படுத்தினார்களோ, அவர்களெல்லாம் உங்களுடன் வந்து சேர்ந்து கொள்வார்கள். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். நல்லது நடக்கும். எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கெடுதல் நடக்கும் போது கவனமாக இருந்தால், அதிகமாக நல்லது நடக்கும் போது கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. தினமும் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். இக்காலத்தைக் கொண்டும் மனதை அலைபாய விடாதீர். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த வாரம் நிதானம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் எதற்காகவும் அவசரப்படக்கூடாது. முன்பின் தெரியாத மனிதர்களை நம்பாதீங்க. புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடப்பது நல்லது. எனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்று அடம் பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்க வேண்டாம். குறிப்பாக நடுத்தர வயதினர் இளைஞர்கள் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும். உங்களால் இயன்ற உதவியை ஏழை எளிய மக்களுக்கு செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கான நல்லது உங்களை தேடி வரும்.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுசரணை தேவை. வேலை வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் நீங்கள் யாரையும் எடுத்துறிந்து பேசாமல் இருப்பது நல்லது. வீட்டில் இருக்கும் பெண்கள் ஆண்கள் குடும்ப உறவுகளை அனுசரிக்க வேண்டும். பிள்ளைகளை அனுசரிக்க வேண்டும்‌. நண்பர்களை அனுசரிக்க வேண்டும். ரொம்பவும் ஸ்டிட் ஆஃபிஸரா இருக்காதீங்க. இறை வழிபாட்டில் ஆர்வம் செலுத்துங்கள். எதிர்கால சேமிப்புக்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். ஹனுமன் வழிபாடு உங்கள் மன தைரியத்தை அதிகரிக்கும்.தனுசுதனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த வாரம் வரவு நிறைந்த வாரமாக இருக்கும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். புத்தாடைகள் எடுப்பது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பண்டிகையை கொண்டாட தேவையான நீங்கள் மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளும் வெற்றி அடையும். ஆனால் வேலையும் வியாபாரமும் முக்கியம் தானே‌. அங்கேயும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.மகரம்மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் பலவிதமான சிக்கல்களில் இருந்து விடுபட்டு, பெருமூச்சு விடுவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை அடைவீர்கள். ஆக இருந்து வந்த அத்தனை பிரச்சனைகளும் உங்களை விட்டு நீங்கிவிடும். நிம்மதி கிடைக்கக்கூடிய வாரம். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள். உங்களை சுற்றி நடக்கக்கூடிய சூழ்ச்சிகளை எல்லாம் உடைந்து விடும். கவலைப்படாதீங்க, நீண்ட நாள் பண பிரச்சனையிலிருந்து வெளி வருவீர்கள். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். ஆரோக்கியம் அடைவீர்கள். தினமும் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய வாரமாக இருக்கும். எதிலும் உங்கள் பெயர் முன்னிலையில் இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது. சிலபேர் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பவும் வாய்ப்புகள் இருக்கிறது. நிதி நிலமை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு காணப்படும். செலவுகள் அதிகரிக்க கூடிய வாரமாக இருக்கும். இருந்தாலும் உற்சாகமும் சந்தோஷமும் குறையாது. வாய் பேசுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். நிறைய நல்லது நடக்கும். சனிக்கிழமை பெருமாள் வழிபாடு உங்கள் சங்கடங்களை தீர்க்கும்.மீனம்மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் நிறைய நல்ல அனுபவத்தை பெறப்போகிறீர்கள். நீங்கள் நினைத்த நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை நன்றாக உணருவீர்கள். இவ்வளவு நாள் செய்த தவறை எண்ணி வருத்தப்படுவீர்கள். வேலையில் உங்களுக்கு ஆதரவாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வியாபாரத்தை பொறுத்தவரை நிதானத்தோடு இருக்க வேண்டும். பெரிய அளவில் லாபமும் வராது. பெரிய அளவில் நஷ்டமும் இருக்காது. வரும் வருமானத்திலிருந்து ஒரு சின்ன தொகையை ஆதரவற்ற குழந்தைக்காக செலவு செய்து பாருங்கள் நல்லது நடக்கும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top