– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் வெற்றி அடையக்கூடிய வாரமாக தான் இருக்கும். சோம்பேறித்தனம் ஒரு துளி கூட இருக்காது. வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மேல் அதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். நல்ல சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான அத்தனை முயற்சிகளையும் இந்த வாரம் மேற்கொள்ளலாம். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நேரத்திற்கு சாப்பிட வேண்டும். வெளியிடங்களில் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம். தினமும் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லுங்கள் நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பேச்சுக்கே இடமில்லை. எல்லாம் செயலில் தெரியும். மனதில் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் முயற்சிகள் இந்த வாரம் வெற்றியடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனால் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உறவுகளோடு பேசும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அக்கம் பக்கம் வீட்டாரிடம் அளவோடு பழக வேண்டும். நீண்ட தூர பயணம் கொஞ்சம் அலைச்சலை கொடுக்கும். சில பேருக்கு சளி தொல்லை, காய்ச்சல் தொல்லை வரவும் வாய்ப்பு இருக்கிறது ஜாக்கிரதை. தினமும் துர்கை அம்மன் வழிபாடு உங்களுக்கு நல்லதை செய்யும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் அழகில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுடைய தோற்றத்தை பார்த்தே அடுத்தவர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்து விடும். உங்களை அழகு படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். வியாபாரத்தில் பார்ட்னரோடு இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும். சின்ன சின்ன பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் கூட, இந்த வாரம் நிறைய லாபத்தை சம்பாதிப்பீர்கள். பிள்ளைகளுக்கு குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். நீண்ட தூர பயணம் நன்மையை தரும். உங்களுடைய உடைமைகளை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் தகாத நண்பர்களை விட்டு விடுவது எதிர்காலத்திற்கு நல்லது. தினமும் அனுமன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நான்கு பேர் மத்தியில் தலை நிமிர்ந்து வாழ்வீர்கள். வியாபாரத்தில் உங்களுடைய உயர்வு அடுத்தவர்களை பொறாமைப்பட செய்யும். அந்தஸ்து உயரும். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தோல்வி தோல்வி என்று பார்த்தவர்கள் கூட இந்த வாரம் வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினமும் பைரவரை நினைத்து வழிபாடு செய்தால் நல்லது நடக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் நிறைந்த வாரமாக இருக்கும். எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். கையில் இருக்கும் சேமிப்பு கரையும். சில பேர் தனிமையின் மூலம் நிறைய விஷயங்களை சிந்தித்து, செய்த தவறுகளை உணர்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும். கட்டுமான தொழில் சிறப்பாக இருக்கும். சொத்து சுகம் வாங்கக்கூடிய ஆசை உள்ளவர்களுக்கு, அந்த ஆசை நிறைவேறவும் வாய்ப்பு உள்ளது. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஒரு குறிப்பிட்ட தொகை கையை வந்து சேரும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மையை தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சோம்பேறித்தனமான வாரமாக இருக்கும். அதே போல தேவையற்ற பிரச்சனைகளும் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மன குழப்பம் இருக்கும். சில விஷயங்களை வெளிப்படையாக பேச மாட்டீர்கள். எல்லா பிரச்சனைகளையும் மனதிற்குள் போட்டு குழப்பிக் கொண்டே இருப்பதால், அன்றாட வேலை சரியாக நடக்காது. நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுங்கள். வாயுள்ள பிள்ளை தான் பிழைத்துக் கொள்ளும். இந்த வாரம் உங்களுக்கு இந்த பழமொழி மட்டும் தான் வேலை செய்யும். பிரஷர் உடல் உபாதைகளை உண்டு பண்ணும். ஜாக்கிரதை, தினம் தோறும் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்வது நல்லது.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் திறமையோடு செயல்படுவீர்கள். வேகத்தை விட விவேகம் தான் உங்களிடம் அதிகமாக இருக்கும். அடுத்தவர்களை பார்த்து ஒரு துளியும் பயம் இருக்காது. எல்லா விஷயத்தையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். உங்களைப் பார்த்து சில பேர் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொள்வார்கள். அடுத்தவர்களுக்கு முன் உதாரணமாக நீங்கள் இருப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். இதனால் கொஞ்சம் தலைகனம் வெளிப்படும். ஜாக்கிரதை, அடக்கத்தோடு இருந்தால் நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். கொஞ்சம் தலைகனம் வரும்போது பிரச்சனைகள் தலை தூக்கும். இந்த வாரம் பிள்ளையார் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் லாபகரமான வாரமாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகள் செய்யலாம். வங்கி கடனுக்கு முயற்சி செய்யலாம். அனுபவசாலிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு, முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் வெற்றி அடைவீர்கள். முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து கொஞ்சம் ஒதுங்கி இருந்து கொள்ளவும். வேலையில் மேல் அதிகாரிகளோடு சில வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. எதுவாக இருந்தாலும் முன்கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும். வேலை முக்கியம். இருக்கும் வேலையை விடுவது புத்திசாலித்தனம் கிடையாது. தினம் தோறும் பசு மாட்டிற்கு இரண்டு வாழைப்பழம் வாங்கி கொடுத்தால் இந்த வாரம் வரும் பிரச்சனைகள் சரியாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பங்கள் தெளிவு பெறும். தேவையற்ற டென்ஷனில் இருந்து வெளி வருவீர்கள். உங்களுடைய வேலையில் ஆர்வம் காட்டுவீர்கள். தேவையற்ற மனிதர்கள் பேசும் பேச்சுக்கு, செவி சாய்க்க மாட்டீர்கள். உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான விஷயங்களை செய்வீர்கள். இருப்பினும் பிரச்சனை கொடுக்க உங்களை சுற்றி நான்கு பேர் இருப்பார்கள். அவர்களை சமாளிப்பதில் தான் இந்த வாரம் உங்கள் திறமையை அடங்கி இருக்கிறது. சின்ன சின்ன மருத்துவ செலவுகள் வந்து போகும். தினமும் பிரத்தியங்கரா அங்காளம்மன் வாராஹி இது போன்ற தெய்வங்களை வழிபட்டால் எதிரி தொல்லை விலகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எவ்வளவு வருமானம் வந்தாலும் எவ்வளவு நல்லது நடந்தாலும் மன நிறைவே இருக்காது. உங்களுக்கு நிறைய பேராசை வரும். தன்னை விட உயர்ந்தவர்களை பார்த்து அவர்களைப் போல வாழ வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். ஆடம்பர செலவு ஆபத்தானது. ஜாக்கிரதை, அவரவர் தகுதிக்கான செலவு செய்து, அவரவர் தகுதிப்படி வாழ்வதுதான் வாழ்க்கைக்கு நல்லது. புலியைப் பார்த்து எப்போதும் பூனை சூடு போட்டுக் கொள்ளக் கூடாது. இந்த வாரம் நீங்கள் அடுத்தவர்களை பார்த்து எந்த பொருளையும் வாங்கக்கூடாது. வேலை செய்யும் இடத்தில், தொழிலில் எதுவாக இருந்தாலும் உங்களுடைய தகுதிக்கு மட்டுமே சிந்திக்க வேண்டும். மன அமைதிக்கு ஏதாவது ஒரு குருவை மனதில் நினைத்து தியானம் செய்யுங்கள். சாய்பாபா அல்லது காஞ்சி மகா பெரியவா, சித்தர்களை நினைத்து தியானம் செய்யலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் சந்தோஷமாக இருப்பீர்கள். பிரச்சனையாக இருந்தாலும் சரி, கவலையாக இருந்தாலும் சரி, உங்களுடைய முகத்தில் சிரிப்பு ஒருபோதும் குறையாது. எல்லாம் விதிப்படி நடக்கும், எல்லா பிரச்சினையையும் இறைவன் பார்த்துக்கொள்வான் என்று பாரத்தை அவன் தலை மேல் இறக்கிவிட்டு, உங்களுடைய கடமைகளை சரிவர செய்வீர்கள். நிதி நிலைமை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும். அடுத்தவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அகல கால் வைக்காதீங்க. உங்களால் முடிந்தால் ஏழை குழந்தைகளுக்கு முடிந்த உதவியை செய்யுங்கள் மேலும் நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி நிலைமை சீராக இருக்கும். மனதில் நிம்மதி இருக்கும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதிகமாக கலந்து கொள்வீர்கள். ஆன்மீக சுற்றுலா பயணம் இனிதே அமையும். பிள்ளைகளோடு அதிக நேரத்தை செலவு செய்வீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வேலையை பொருத்தவரை பெரிசாக பிரச்சனை இல்லை. வியாபாரத்தை பொருத்தவரை கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கணக்கு வழக்குகளை எல்லாம் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நேரத்தை சரியாக செலவு செய்தால், நீங்கள் நிச்சயம் வெற்றியாளராக மாறலாம். தினமும் முருகர் வழிபாடு நன்மையை தரும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam