கத்திரிக்காய் கடைசல் ரெசிபி | Kathirikai kadaisal recipe

கத்திரிக்காய் கடைசல் ரெசிபி | Kathirikai kadaisal recipe

Qries

– Advertisement –

காலையில் எழுந்ததுமே இட்லி, தோசை, பொங்கல் என்று எதையாவது ஒன்றை செய்துவிடலாம், ஆனால் அதற்கு தொட்டுக் கொள்ள என்னதான் செய்வது? என்று யோசிப்பது தான் ரொம்பவும் கஷ்டமாக இருக்கும். சாம்பார், சட்னி என்று இல்லாமல் வித்தியாசமான முறையில் ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த அருமையான சுவையிலுள்ள கத்திரிக்காய் கடைசல் எப்படி நாமும் தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.
கத்திரிக்காய் கடைசல் செய்ய தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு – இரண்டு டீஸ்பூன்பெரிய வெங்காயம் – இரண்டுதக்காளி – இரண்டுபூண்டு பல் – நான்குபச்சை மிளகாய் – இரண்டுபுளி – ஒரு இன்ச்உருளைக்கிழங்கு – இரண்டுகத்திரிக்காய் – இரண்டுவரமிளகாய் – இரண்டுமஞ்சள் தூள் – கால் ஸ்பூன்பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகைமிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்உப்பு – தேவையான அளவு
– Advertisement –

தாளிக்க :சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்கடுகு – அரை ஸ்பூன்உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்வரமிளகாய் – ஒன்றுகருவேப்பிலை – ஒரு கொத்து
கத்திரிக்காய் கடைசல் செய்முறை விளக்கம் :
அருமையான சுவையில் உள்ள இந்த கத்திரிக்காய் கடைசல் செய்வதற்கு ரொம்ப நேரம் எடுக்காது. தேவையான எல்லா பொருட்களையும் தயாராக முதலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பூண்டு ஆகியவற்றை எல்லாம் தோல் நீக்கி சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி வையுங்கள். ருசி கூடுவதற்கு இரண்டு டீஸ்பூன் அளவிற்கு மட்டும் பாசிப்பருப்பை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள்.
– Advertisement –

இப்போது ஒரு குக்கரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை வடிகட்டி விட்டு பருப்பை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் நறுக்கி வைத்துள்ள இரண்டு வெங்காயம், தக்காளி, 4 பூண்டு பற்கள் மற்றும் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகள், கத்திரிக்காய் துண்டுகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் இவற்றுடன் ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள் எதுவும் இல்லாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய்கள், இரண்டு வரமிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை மேற்கூறிய அளவின்படி சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து, பொருட்கள் மூழ்கும் அளவிற்கு மட்டும் அரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வையுங்கள்.
– Advertisement –

ஐந்து விசில் விட்டால் நன்கு குழைய வெந்துவிடும். பிரஷர் அடங்கியதும் மூடியை திறந்து, அதிகம் தண்ணீர் இருந்தால் அதனை தனியாக எடுத்துவிட்டு மத்து போட்டு கடையுங்கள். இல்லையென்றால் அப்படியே மத்து போட்டு மசிய கடைந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் தாளிப்பு கரண்டி ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.
இதையும் படிக்கலாமே:
கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு வரமிளகாயை கிள்ளி போட்டு, ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போட்டு தாளித்து கடைசலில் கொட்டுங்கள். அவ்வளவுதான் அருமையான கத்திரிக்காய் கடைசல் தயார்! இந்த கடைசல் இட்லி, தோசை, ஊத்தாப்பம், பொங்கல், சப்பாத்தி, பூரி என்று எதற்கு வேண்டுமானாலும் தொட்டு சாப்பிடலாம், அருமையாக இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top