கம்பு பால் பாயாசம் செய்முறை | kambu pal payasam seimurai in tamil

கம்பு பால் பாயாசம் செய்முறை | kambu pal payasam seimurai in tamil

Qries

– Advertisement –

இன்றைய காலத்தில் பலரும் ஆரோக்கியமற்ற உணவு முறைகளை பின்பற்றி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக துரித உணவுகள் என்ற பெயரில் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய உணவுப் பொருட்களையே உண்கிறார்கள். இதனால் பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார்கள். மேலும் சத்துக் குறைபாடுகளாலும் வளரும் பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து விதமான உயிர்சத்துகளையும் இரும்புச்சத்தையும் நாச்சத்தையும் பெறுவதற்கு கம்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கம்பை வைத்து இந்த முறையில் கம்பு பால் பாயாசம் செய்து கொடுக்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்தவித தயக்கமும் இன்றி விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட கம்பு பால் பாயாசத்தை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
கம்பு – ஒரு கப்பசும்பால் – ஒரு கப்வெல்லம் – 1 1/2 கப்ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்சுக்குத்தூள் – 1/4 ஸ்பூன்நெய் – 2 டேபிள் ஸ்பூன்முந்திரி – 10திராட்சை – 10உப்பு – ஒரு சிட்டிகை
– Advertisement –

செய்முறை
முதலில் கம்பை எட்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இந்த கம்பை முளைகட்டியும் இந்த பாயாசத்தை செய்யலாம் முளை கட்டாமலும் பாயசம் செய்யலாம். ஊறவைத்த கம்பை தண்ணீர் வடித்து மறுபடியும் ஒரு எட்டு மணி நேரம் வைத்து விட்டால் அது நன்றாக முளை கட்டிவிடும். கம்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வடிகட்டியை பயன்படுத்தி கம்பின் பாலை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு அதில் ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரை கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்ததும் நாம் எடுத்து வைத்திருக்கும் கம்பு பாலை அதில் ஊற்றி நன்றாக கைவிடாமல் கிண்ட வேண்டும். கம்புப்பால் அடுப்பில் கொதிக்க கொதிக்க சற்று கெட்டியாக மாறும். இந்த சமயத்தில் காய்ச்சி வைத்திருக்கும் பசும்பாலை அதில் ஊற்றி நன்றாக கலந்து கொதிக்க விட வேண்டும்.
– Advertisement –

அடிக்கடி கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் அடி பிடித்து விடும். மற்றொரு அடுப்பில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்திருந்து வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது கம்பு பாலும் பசும்பாலும் நன்றாக கொதித்து கெட்டியாக ஆன பிறகு நாம் வடிகட்டி வைத்திருக்கும் வெல்லக் கரைசலை அதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்பொழுது உப்பு, ஏலக்காய் தூள், சுக்குத்தூள் இவற்றையும் சேர்த்து நன்றாக ஒரு முறை கலந்து விடுங்கள்.
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து மீதமிருக்கக்கூடிய நெய்யை ஊற்றி நெய் உருகியதும் முந்திரி, திராட்சை போன்றவற்றை போட்டு சிவக்க வறுத்து அந்த நெய்யுடன் இந்த பாயாசத்தில் ஊற்றி ஒரு முறை நன்றாக கலந்து விட்டுக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான் சுவையான கம்பு பால் பாயாசம் தயாராகிவிட்டது. சாதாரண பசும்பாலுக்கு பதிலாக தேங்காய் பாலும் இதில் நாம் சேர்த்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:பாலக்கீரை உள்ளி காரம் ரெசிபி
எளிமையாக செய்யக்கூடிய இந்த கம்பு பால் பாயாசத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்திருக்கிறது. கூலாக செய்து தரும்பொழுது சாப்பிடாதவர்கள் கூட இப்படி பாயாசம் செய்து தரும்பொழுது விரும்பி சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top