
– Advertisement –
நம்முடைய முன்னோர்கள் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய பல பொருட்களை அன்றைய காலத்தில் உண்டு வாழ்ந்ததால் தான் அவர்கள் ஆரோக்கியமாக திகழ்ந்தார்கள். அப்படி அவர்கள் உண்ட பொருட்களில் ஒன்றாக திகழ்வதுதான் சோளம். சோளம் அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்த பொருளாக திகழ்கிறது. இதில் புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து ,கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.
இந்த சோளத்தை நாம் தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது. கண், இதயம் போன்ற உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கிறது. மூட்டு வலி தொடர்பான பிரச்சனைகள் எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிறது என்று கூறிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட சோளத்தை வைத்து செய்யக்கூடிய ஒரு கேக்கை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
சோளம் – 2கோதுமை மாவு – 1/2 கப்கார்ன்ஃப்ளவர் மாவு – 1/4 கப்சர்க்கரை – 1/4 கப்உப்பு – 1/2 ஸ்பூன்ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்பேக்கிங் சோடா – 1/4 ஸ்பூன்துருவிய தேங்காய் – 1/4 கப்
செய்முறை
முதலில் சோளத்தின் மேலே இருக்கக்கூடிய இதழ்களை கிழியாமல் தனியாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது சோளத்தை உதிர்த்து அதில் ஒரு கால் கப் அளவு மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு மீதம் இருக்கும் சோளம் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு மட்டும் தண்ணீரூற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை ஒரு பாகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
இப்பொழுது இதனுடன் கோதுமை மாவு, கான்பிளவர் மாவு, சர்க்கரை, உப்பு, ஏலக்காய் தூள், பேக்கிங் சோடா, துருவிய தேங்காய், நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த அந்த கால் கப் அளவிற்கு சோளம் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் இதை மூடி போட்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் ஆரம்பத்தில் அந்த சோளத்தின் மேலிருக்கக் கூடிய இதழ்களை தனியாக எடுத்து வைத்தமல்லவா? அதை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும்.
அதில் ஒரு கரண்டி அளவு நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த சோளமாவை ஊற்றி அந்த இதழை நன்றாக மடித்து இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் வைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு இதழிலும் ஒரு ஒரு கரண்டி மாவை ஊற்றி அதை மடித்து வைத்து விட வேண்டும். குறைந்தது 20 நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் 25 நிமிடம் வரை இது நீராவிலேயே வேகட்டும். அவ்வளவுதான் சுவையான கான்கேக் தயாராகி விட்டது.
இதையும் படிக்கலாமே: கொண்டைக்கடலை சாலட் ரெசிபி
பலவிதமான உயிர்ச்சத்துக்கள் கொண்ட சோளத்தை சாப்பிடுவதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியமாக திகழும். சாப்பிட விருப்பம் இல்லாதவர்களுக்கு இந்த முறையில் கேக்காக செய்து கொடுக்க அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மீண்டும் வேண்டும் என்று கேட்கவும் செய்வார்கள்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam