கேரளா கலத்தப்பம் ரெசிபி | Kerala kalathappam recipe

கேரளா கலத்தப்பம் ரெசிபி | Kerala kalathappam recipe

Qries

– Advertisement –

கேரளா, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் அதிகம் விரும்பி உண்ணப்படும் இந்த கலத்தப்பம் ரெசிபி செய்வதற்கு ரொம்பவே சுலபமானது தான். பச்சரிசியை வைத்து செய்யும் இந்த கலத்தப்பம் கேக் போல ஸ்பான்ஜியாக மிருதுவான தன்மையுடன் இருக்கும். வாய்க்கு ருசியாக இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்க தூண்டும் இந்த கலத்தப்பம் எப்படி நாமும் சுலபமாக தயார் செய்வது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் அறிந்து கொள்ள போகிறோம்.
கலத்தப்பம் ரெசிபி செய்ய தேவையான பொருட்கள் :
பச்சரிசி – ஒரு கப்வடித்த சாதம் – அரை கப்ஏலக்காய் பவுடர் – ஒரு ஸ்பூன்சீரகம் – ஒரு ஸ்பூன்உப்பு – ஒரு ஸ்பூன் தேவையான அளவுதண்ணீர் – அரை கப்பேக்கிங் சோடா – கால் ஸ்பூன்தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்தேங்காய் துண்டுகள் – அரை கப்பாகு:வெல்லம் – ஒரு கப்தண்ணீர் – அரை கப்
– Advertisement –

கலத்தப்பம் ரெசிபி செய்முறை விளக்கம் :
கலத்தப்பம் ரெசிபி செய்ய முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அளவிற்கு பச்சரிசி மாவை சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும். 4 லிருந்து 5 மணி நேரம் நன்கு ஊற விடுங்கள். அதன் பின்பு ஊறிய பச்சரிசியை தண்ணீர் வடித்து விட்டு ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதனுடன் வடித்த சாதம் அரை கப் அளவிற்கு சேர்த்து, ஏலக்காய் தூள், சீரகம், கொஞ்சம் போல உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவுடன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு பேன் ஒன்றை வைத்து பற்ற வையுங்கள். பேன் சூடானதும் அதில் ஒரு கப் அளவிற்கு வெல்லம் சேர்த்து அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
– Advertisement –

வெல்லம் கொதித்து, பாகு கம்பி பதம் வந்ததும், அடுப்பை அணைத்து விடுங்கள். சூடு ஆறாமல் அப்படியே நீங்கள் தயார் செய்து வைத்துள்ள மாவில் ஒரு வடிகட்டியை வைத்து வடித்து வெல்லத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இதை அப்படியே ஓரமாக வையுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கர் ஒன்றை வையுங்கள். குக்கரில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை சேர்த்து லேசாக காய விடுங்கள்.
இதையும் படிக்கலாமே:திதிகளுக்கு உண்டான தெய்வ வழிபாடு
நெய் காய்ந்து வரும் பொழுது பொடி பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்க்க வேண்டும். தேங்காய் துண்டுகள் சேர்க்கும் பொழுது சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும், வாயில் துண்டுகள் தடடுப்படும். தேங்காய் துண்டுகள் பொன்னிறமாக வறுபட்டதும், நீங்கள் தயார் செய்து வைத்துள்ள மாவை அதில் ஊற்றி விடுங்கள். குக்கரின் மூடியில் இருக்கும் கேஸ்கட்டை எடுத்து விடுங்கள். அதே போல விசில் போடக் கூடாது. சாதாரணமாக மூடியை மட்டும் மூடி 10 இருந்து 12 நிமிடம் வரை குறைந்த தீயில் வைத்து வேக விட வேண்டும். மாவு வெந்து உப்பி வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். மிருதுவான அருமையான சுவையில் கலத்தப்பம் தயார்! நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க பாக்கலாம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top