
– Advertisement –
கொங்கு நாட்டு ஸ்டைலில் அருமையான இந்த ரசம் அடிக்கடி செய்து சாப்பிட்டால் சளி பிடிக்காது என்பார்கள். உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடிய இந்த ரசம் செய்வதற்கு புளி மற்றும் தக்காளி எதுவுமே தேவையில்லை. ரொம்பவே சுலபமாக செய்து அசத்தக் கூடிய இந்த செலவு ரசம் நீங்களும் ஒருமுறை வைத்து பாருங்கள், ரசம்ன்னா இது தான் ரசம் என்று சப்புக்கட்டி சாப்பிடுவீர்கள். மணக்க மணக்க இந்த ரசம் செய்து, இதனுடன் அப்பளம் வைத்து சாப்பிட்டாலே அம்புட்டு ருசியாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. செலவு ரசம் செய்வது எப்படி? என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து காணலாம் வாங்க.
செலவு ரசம் செய்ய தேவையான பொருட்கள் :
தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்தனியா – ஒரு டேபிள் ஸ்பூன்பூண்டு – எட்டு பற்கள்வரமிளகாய் – 2சின்ன வெங்காயம் – 8தாளிக்க :தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்கடுகு – 1/2 ஸ்பூன்வரமிளகாய் – 2கருவேப்பிலை – ஒரு கொத்துமஞ்சள் தூள் – கால் ஸ்பூன்பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்உப்பு- தேவையான அளவுகொத்தமல்லி தழை – அரை கைப்பிடி
– Advertisement –
செலவு ரசம் செய்முறை விளக்கம் :
அருமையான இந்த கொங்கு நாட்டு ஸ்டைல் செலவு ரசம் செய்ய தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடிகனமான வாணலி ஒன்றை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் விட்டு காய விடுங்கள்.
எண்ணெய் காய்ந்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு, ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம், ஒரு டேபிள் ஸ்பூன் தனியா ஆகியவற்றை சம அளவில் சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். இதனுடன் பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்து, ரெண்டு சிறிய வரமிளகாய்களை கிள்ளி போட்டு பொன்னிறமாக வதக்கி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.
– Advertisement –
வதக்கிய பொருட்கள் ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் அதிலேயே ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிய வந்ததும், ஒரு கொத்து கருவேப்பிலையை தாளித்து, இரண்டு வரமிளகாயை கிள்ளி போட்டு வதக்கி விடுங்கள். பின்னர் மஞ்சள் தூள் சேர்த்து, சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக நறுக்கி சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:
வெங்காயம் வறுபட்டதும், நீங்கள் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து, தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். கொதி வந்ததும் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி, புளி சேர்க்காத ரசம் என்பதால் இதனை நன்கு கொதிக்க விட வேண்டும். ஒரு நிமிடம் நன்கு கொதித்த பின்பு நறுக்கி வைத்துள்ள மல்லி தழையை தூவி சுடச்சுட சாதத்துடன் பரிமாறினால் அடடா.. அட்டகாசமாக இருக்கும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam