கோதுமை ரவை கேசரி செய்முறை | wheat rava kesari preparation in tamil

கோதுமை ரவை கேசரி செய்முறை | wheat rava kesari preparation in tamil

Qries

– Advertisement –

வீட்டில் விசேஷமான நாட்கள் வரும் பொழுது நமக்கு தெரிந்த ஏதாவது ஒரு இனிப்பு பொருளை செய்து வைத்து தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் வழக்கம் என்பது நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்தே இருக்கிறது. அதிலும் குறிப்பாக இது தை மாதம் அல்லவா? தை வெள்ளி, செவ்வாய் போன்ற விசேஷமான நாட்களிலும் தைப்பூசம் போன்ற சிறப்பு மிகுந்த நாட்களிலும் வீட்டில் ஏதாவது ஒரு இனிப்பை செய்து வைத்து தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோம்.
அவ்வாறு தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதற்கு செய்யக்கூடிய இனிப்பை சற்று வித்தியாசமாகவும் அதே சமயம் ஆரோக்கியமான முறையிலும் செய்தோம் என்றால் அதற்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் அல்லவா? அந்த வகையில் தான் ஆரோக்கியம் மிகுந்த கோதுமை ரவையை வைத்து அல்வாவை மிஞ்சும் சுவையில் கோதுமை ரவை கேசரி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்
கோதுமை ரவை – ஒரு கப்,நெய் – 5 டேபிள் ஸ்பூன்,முந்திரி பருப்பு – தேவையான அளவு,ஏலக்காய் – 3,பச்சை கற்பூரம் – ஒரு சிட்டிகை,உப்பு – ஒரு சிட்டிகை,வெல்லம் – 1 1/2 கப்,சர்க்கரை – 1/2 கப்
செய்முறை
முதலில் கேசரி செய்யப்போகும் பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் மூன்று கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும். மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி அதில் கோதுமை ரவையை போட்டு வறுக்க வேண்டும். இரண்டு நிமிடம் வறுத்த பிறகு திரும்பவும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாக வாசனை வந்து ரவை பொரியும் அளவிற்கு குறைந்த தீயில் வைத்து வறுக்க வேண்டும். இது நன்றாக வறுபடுவதற்கு குறைந்தது நான்கு ஐந்து நிமிடம் ஆகும்.
– Advertisement –

ரவை பொரிந்து வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் இந்த ரவையை சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும். மூடி போட்டு குறைந்த தீயில் வைத்து ரவை நன்றாக வேக விட வேண்டும். அவ்வப்பொழுது மூடியை திறந்து கிண்டி விட வேண்டும். தண்ணீர் முழுவதும் வற்றிய பிறகு அரை கப் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு மறுபடியும் சர்க்கரையும் கோதுமை ரவையும் நன்றாக சேரும் வரை வேக விட வேண்டும்.
சர்க்கரை நன்றாக கரைந்து கோதுமை ரவையுடன் சேர்ந்த பிறகு இதில் பொடித்து வைத்திருக்கும் வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். மறுபடியும் மூடி போட்டு அந்த வெல்லமும் கோதுமை ரவையும் நன்றாக கலக்கும் படி வேக விட வேண்டும். அவ்வப்பொழுது கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்து கோதுமை ரவையுடன் கலந்து வரும் வரை மூடி போட்டு வேக விடுங்கள். அவ்வப்பொழுது கிண்டி விடுங்கள். வெல்லம் கரைந்து கோதுமை ரவையுடன் நன்றாக சேர்ந்த பிறகு இதில் ஏலக்காயை இடித்து பொடி செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
– Advertisement –

பிறகு பச்சை கற்பூரத்தையும் உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்பொழுது மற்றொரு அடுப்பில் ஒரு சிறிய கடாயை வைத்து அதில் மீதும் இருக்கக்கூடிய நெய்யை ஊற்றி அதில் நமது விருப்பத்திற்கு ஏற்றளவு முந்திரிப்பருப்பையும் சேர்த்து நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். முந்திரிப் பருப்பு நன்றாக சிவந்த பிறகு கோதுமை ரவை கேசரியில் நெய்யுடன் இந்த முந்திரி பருப்பையும் சேர்த்து நன்றாக ஒரு முறை கலந்து மூடி போட்டு வேக விட வேண்டும்.
கோதுமை ரவை கேசரியில் நெய் முற்றிலும் உறிஞ்சப்படும். கோதுமை ரவை வென்ற பிறகு அந்த நெய் பிரிந்து மேலே வரும் அதுவரை அடுப்பில் இருக்க வேண்டும். அவ்வப்பொழுது கிண்டி விட வேண்டும். நெய் பிரிந்த பிறகு அடிப்பில் இருந்து இறக்கிவிடலாம். மிகவும் சுவையான கோதுமை ரவை கேசரி தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே:கேரட் சிப்ஸ் ரெசிபி
கோதுமை ரவையை சேர்த்து இந்த முறையில் நாம் ஆரோக்கியமான கேசரியை செய்து தருவதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதன் சுவை அல்வாவை விட அருமையாக இருக்கும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top