
– Advertisement –
சின்ன வெங்காய சட்னி ஆரோக்கியத்திற்கு ரொம்பவும் நல்லது. சின்ன வெங்காயத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. அதை உரித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் பொழுது சுலபமாக எடுத்து சமைக்க பயன்படுத்தலாம். அந்த வகையில் அருமையான இந்த சின்ன வெங்காய சட்னி ரெண்டே பொருளை வைத்து எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.
சின்ன வெங்காய சட்னி செய்ய தேவையான பொருட்கள் :
வரமிளகாய் – 10சின்ன வெங்காயம் – 30புளி – நெல்லிக்காய் அளவுகல் உப்பு – தேவையான அளவுதாளிக்க :நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்கடுகு – அரை ஸ்பூன்உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்து
– Advertisement –
சின்ன வெங்காய சட்னி செய்முறை விளக்கம் :
சின்ன வெங்காய சட்னி செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு பொருள் என்று சொல்லிவிட்டு, இவ்வளவு பொருட்கள் இருக்கிறதே என்று யோசிக்க வேண்டாம். இதில் பிரதான பொருள் இரண்டு தான். சின்ன வெங்காயமும் வரமிளகாயும்! முதலில் வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அவற்றை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு, அந்த எண்ணெயில் உங்கள் காரத்திற்கு தேவையான அளவிற்கு வர மிளகாய்களை காம்போடு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இவை ஆறிய பின்பு காம்பை நீக்கி கொள்ளலாம். முதலிலேயே காம்பை நீக்கி சேர்த்தால், விதைகள் வெளியேறிவிடும். இப்போது நன்கு ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து அதனுடன் நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள் எல்லாம் நீக்கி போட்டு சட்னிக்கு தேவையான அளவிற்கு கல் உப்பு சேர்த்து நைஸ் ஆக அரைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
அரைத்த இந்த விழுதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அதே வாணலியில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். கடைசியாக ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போட்டு தாளிப்பு செய்ததும் நீங்கள் தயாராக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:21 நாளில் பலன் கிடைக்க மகா சிவராத்திரி வழிபாடு
ஒன்றும் பாதியாக நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள வர மிளகாய் பேஸ்டையும் சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்கி விடுங்கள். வதங்கி சுருண்டு வந்து, எண்ணெய் பிரிந்ததும், அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் அருமையான சுவையான சின்ன வெங்காய சட்னி ஆரோக்கியமான முறையில் இப்போது தயார்! இதை செய்வதும் ரொம்ப சுலபமானது தான். இட்லி, தோசை, சப்பாத்தி, ஊத்தாப்பம் என்று எல்லாவற்றுக்கும் தொட்டு சாப்பிட ரொம்பவே ருசியாக இருக்கும். நீங்களும் உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க, அதுக்கு அப்புறம் இந்த சட்னியை விடவே மாட்டீங்க, அடிக்கடி செய்ய ஆரம்பிப்பீங்க. குழந்தைகளுக்கும் பிடிக்கும், விரும்பி சாப்பிட அடம் பிடிப்பாங்க.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam