– Advertisement –
காலை உணவு என்று பார்க்கும் பொழுது பலரது வீட்டிலும் இட்லி, தோசை, பொங்கல் என்றுதான் இருக்கும். இதை தவிர்த்து ஆரோக்கியமான காலை வேளை உணவாக எதை செய்கிறோம் என்று யோசித்துப் பார்த்தால் பலரது பதிலும் இல்லை என்று தான் வரும். இதற்கு முக்கியமான காரணம் நேரமின்மை. ஆரோக்கியமாக ஏதாவது ஒரு உணவை செய்ய வேண்டும் என்றால் அதற்காக சிறிது நேரம் செலவு செய்ய வேண்டியதாக இருக்கும்.
அப்படி செலவு செய்யாமல் விரைவிலேயே அதே சமயம் ஆரோக்கியமாகவும் ஒரு உணவை தயார் செய்ய முடியும் என்றால் அதை செய்வதில் எந்த தவறும் இல்லை அல்லவா? ஆம். அப்படிப்பட்ட ஆரோக்கியமான ஒரு உணவுப் பொருளாக திகழ்வது தான் சிவப்பு அவல். சிவப்பு அவலை வைத்து குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் புட்டு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
சிவப்பு அவல் – ஒரு கப்,உப்பு – தேவையான அளவு,ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்,சர்க்கரை – 3 ஸ்பூன்,முந்திரி – 5,நெய் – ஒரு ஸ்பூன்,தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் சிவப்பு அவலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நெல் ஏதாவது இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சிறிதளவு மட்டும் உப்பை சேர்த்து ஏலக்காய் தூளையும் சேர்த்து ரவையை விட நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
அரைத்த இந்த பொடியை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இதில் ஒரு கப் அளவிற்கு வெதுவெதுப்பான நீரை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். புட்டு போல் உதிரியாக இருக்க வேண்டும். இப்படி கலந்த பிறகு இதை 10 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விடுங்கள். தண்ணீர் கொதித்த பிறகு இட்லி தட்டை உள்ளே வைத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் புட்டு மாவை அதில் போட்டு நன்றாக பரப்பி மூடி விடுங்கள்.
10 நிமிடம் இது நன்றாக மிதமான தீயில் வேகட்டும். பத்து நிமிடம் கழித்து எடுத்து பார்த்தோம் என்றால் புட்டு தயாராகி இருக்கும். இந்த புட்டை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதை கட்டி இல்லாத அளவிற்கு உதிர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இதில் சர்க்கரையை சேர்க்க வேண்டும். விருப்பம் இருந்தால் நாட்டு சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு சிறிய தாலிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி நெய் காய்ந்ததும் முந்திரி பருப்பை போட்டு சிவக்க வறுத்து அந்த முந்திரிப் பருப்பையும் நெய்யையும் அப்படியே புட்டில் ஊற்றி விடுங்கள்.
இதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து சூடாக இருக்கும் பொழுதே நன்றாக கிளறி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான சிவப்பு அவல் புட்டு தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே:புடலங்காய் மசாலா செய்முறைஇந்த முறையில் நாம் புட்டு செய்து கொடுத்தோம் என்றால் வீட்டில் இருக்கக்கூடிய அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். நீ நான் என்று போட்டி போட்டு சாப்பிட்டு செய்தவருக்கே இல்லாமல் போய்விடும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam