நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

ஜவ்வரிசி சாக்லேட் பாயசம் | Javvarisi chocolate payasam

ஜவ்வரிசி சாக்லேட் பாயசம் | Javvarisi chocolate payasam


– Advertisement –

எவ்வளவோ விதமான பாயாசம் குடித்து பார்த்திருப்போம் ஆனால் இந்த முறையில் ஜவ்வரிசியை பயன்படுத்தி அசத்தலான சாக்லேட் பாயாசத்தை 1 முறை செய்து பாருங்கள், அப்புறம் அடிக்கடி நீங்களும் செய்வீங்க! குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும் இந்த டேஸ்டியான பாயாசம் செய்வதற்கு பெரிதாக எந்த பொருளும் தேவையில்லை. 4 பொருளில் சுவையான ஜவ்வரிசி சாக்லேட் பாயாசம் எப்படி தயாரிக்க போகிறோம்? என்பதை தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் அறிவோம் வாருங்கள்.
ஜவ்வரிசி சாக்லேட் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள் :1. ஜவ்வரிசி – ஒரு கப்2. கோக்கோ பவுடர் – இரண்டு டேபிள் ஸ்பூன்3. கெட்டியான பால் – ஒரு கப்4. சர்க்கரை – ஒரு கப்
– Advertisement –

ஜவ்வரிசி சாக்லேட் பாயசம் செய்முறை விளக்கம் :இந்த ஜவ்வரிசி சாக்லேட் பாயாசம் செய்வதற்கு தேவையான பொருட்களை முதலில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கோக்கோ பவுடர் இல்லாதவர்கள், டைரி மில்க் சாக்லேட்டை டபுள் பாய்லிங் முறையில் கரைத்து வைத்து பயன்படுத்தலாம். முதலில் ஒரு கப் அளவிற்கு ஜவ்வரிசியை நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வையுங்கள்.
ஜவ்வரிசி ஊறியதும் அடுப்பை பற்ற வைத்து அதில் அடிகனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் ஜவ்வரிசியை சேர்த்து ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி முக்கால் பதம் வெந்து வரும் அளவிற்கு நன்கு கொதிக்க வையுங்கள். ஜவ்வரிசி வெந்து வந்ததும், அதனுடன் கெட்டியான பால் ஒரு கப் அளவிற்கு சேர்க்க வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்த பாலை எடுத்துக் கொள்ளுங்கள். பால் கொதிக்க ஆரம்பித்ததும் கோக்கோ பவுடர் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். சாக்லேட் கட்டி தட்டாமல் நன்கு கரைந்து வர வேண்டும், எனவே கரண்டியை பயன்படுத்தி கிளறி விட்டுக் கொண்டே இருங்கள்.
– Advertisement –

ஜவ்வரிசி முழுவதுமாக நன்கு வெந்து, திக்கான கன்சிஸ்டன்ஸிக்கு வந்த பிறகு ஒரு கப் அளவிற்கு சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை கரைந்து திக்காக வெந்து வந்ததும், அடுப்பை அணைத்து விடுங்கள். சர்க்கரை கூடுதலாக தேவைப்படுபவர்கள், இனிப்பு பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இதனை நன்கு ஆற வைக்க வேண்டும். ஆறியதும் பிரிட்ஜில் கொண்டு போய் மூடி போட்டு வையுங்கள். ஒரு மணி நேரம் கழித்து ஜில்லென்று எடுத்து பருகினால் சுவையான ஜவ்வரிசி சாக்லேட் பாயாசம் குளு குளுன்னு ரெடி!
இதையும் படிக்கலாமே:கல் உப்பு வாங்கும்போது செய்ய வேண்டிய சில்லறை பரிகாரம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே ரொம்பவே விரும்பி சாப்பிடக் கூடிய இந்த ரெசிபி வித்தியாசமான சுவையுடன் அசத்தலான சாக்லேட் ஃபிளேவரில், ரிச் டேஸ்டில் நிச்சயம் இருக்கப் போகிறது. நீங்களும் வீட்டில் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, உங்க வீட்டில் இருக்கும் எல்லோரும் உங்களை நிச்சயம் பாராட்டி விடுவாங்க! அடிக்கும் வெயிலுக்கு குளிரூட்டி பருகினால் வயிறும், மனமும் சில்லென்று குளிர்ந்து போகும். இதனை குளிர வைக்காமல் இளஞ்சூடாக அப்படியேவும் நீங்கள் பருகலாம் பாயாசம் போல நன்றாக இருக்கும்.

– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
    0
    Your Cart
    Empty CartYour cart is emptyReturn to Shop
    Secure Checkout
    Fast Shipping
    Easy Returns
    I am Online
    I am Online