
– Advertisement –
நம்முடைய தமிழர்களின் பண்பாட்டில் ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தத்தை வைத்திருப்பார்கள். அந்த வகையில் நம்முடைய வீட்டில் ஒரு நல்ல விஷயம் நடைபெறுகிறது என்றால் உடனே இனிப்பு சுவை மிகுந்த ஏதாவது ஒன்றை செய்து அனைவருக்கும் கொடுப்பார்கள். இனிப்பை கொடுத்து விட்டு தான் நல்ல செய்தியை சொல்வார்கள். இப்படி பல விதங்களில் இனிப்பு சுவையை நம்முடைய வீட்டில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய வகையில் செய்வார்கள்.
அந்த வகையில் பலரும் தங்கள் வீட்டில் அடிக்கடி செய்யக்கூடிய ஒன்றாக திகழ்வதுதான் பாயாசம், கேசரி போன்ற இனிப்பு வகைகள். இதில் அல்வாவும் இடம்பெறும். பலரும் பல விதங்களில் பல பொருட்களை வைத்து அல்வா செய்வார்கள். கோதுமை அல்வா, பிரட் அல்வா, கேரட் அல்வா என்று செய்வார்கள். அதை விட மிகவும் சுவையான அல்வாவாக திகழக்கூடியது தான் ஜவ்வரிசியை வைத்து செய்யக்கூடிய அல்வா. இதை ஒரு முறை செய்தால் மீண்டும் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வரும். அதை சுவைக்க வேண்டும் என்ற ஆசையும் வரும். அந்த ஜவ்வரிசி அல்வாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி – 100 கிராம்,சோள மாவு – 50 கிராம்,சர்க்கரை – 200 கிராம்,ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை,நெய் – 2 டேபிள் ஸ்பூன்,முந்திரி, பாதாம், பிஸ்தா – விருப்பத்திற்கு ஏற்ப
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஜவ்வரிசியை போட்டு வாசம் வரும் வரை நன்றாக வறுக்க வேண்டும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி அதை ஆற வைத்துக் கொள்ளுங்கள். ஆரிய ஜவ்வரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். நைசாக மாவாக அரைத்திருக்க வேண்டும். பிறகு இதை ஒரு சல்லடையை பயன்படுத்தி ஜலித்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நன்றாக நைசான மாவு கிடைத்துவிடும்.
– Advertisement –
இதை ஒரு முறை அளந்து கொள்ளுங்கள். எவ்வளவு இருக்கிறதோ அதே அளவு கான்பிளவர் மாவு என்று சொல்லக்கூடிய சோளமாவையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள். இது ரவா தோசைக்கு மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். இப்பொழுது அடுப்பில் அடிகனமான ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நன்றாக கரைய வேண்டும். அது நன்றாக கரைந்த பிறகு அதில் ஏலக்காய் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த அல்வாவில் நிறம் வேண்டும் என்றால் அந்த நிறத்தையும் இந்த நேரத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
சர்க்கரை நன்றாக கரைந்த பிறகு நாம் கரைத்து வைத்திருக்கும் ஜவ்வரிசி மாவை இதில் ஊற்றி கைவிடாமல் நன்றாக கலக்க வேண்டும். இதில் கட்டி விழுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கைவிடாமல் கிண்ட வேண்டும். தண்ணீர் வற்றி கெட்டியாகும் சமயத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய்யை சேர்த்து மறுபடியும் நன்றாக கைவிடாமல் கிளறி விடுங்கள். இதில் வேலையே கைவிடாமல் கிளறுவதுதான். ஒரு நிலையில் நமக்கு கிண்டுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். அப்பொழுது மறுபடியும் இன்னொரு ஸ்பூன் நெய்யை அதில் சேர்த்து நன்றாக கிண்டி கொண்டே இருக்க வேண்டும்.
– Advertisement –
இந்த ஜவ்வரிசி அல்வா ஒட்டாமல் வரும்வரை கிண்டிக்கொண்டே இருங்கள். எப்பொழுது அது ஒட்டாமல் வருகிறதோ அந்த நேரத்தில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் முந்திரிமுந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவற்றையும் அதில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்பொழுது ஒரு தட்டில் நெய்யை தடவி தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இங்கு அல்வா தயாரான உடன் அந்த அல்வாவை எடுத்து அந்த தட்டில் போட்டு சரிசமமாக்கிக் கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் கழித்து இதை அப்படியே மற்றொரு தட்டில் மாற்றி கத்தியை பயன்படுத்தி நமக்கு விரும்பிய வடிவத்தில் நறுக்கி வைத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் சுவையான தித்திக்கும் ஜவ்வரிசி அல்வா தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே:பூசணி புளி கறி செய்முறை
மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும் பொழுது எப்பொழுதும் போல் ஒரே மாதிரி இனிப்பை செய்யாமல் இப்படி ஒரு முறை ஜவ்வரிசி அல்வாவை தயார் செய்து பாருங்கள். மிகவும் அருமையான சுவையில் நாவில் எச்சில் ஊரும் அளவிற்கு பிரமாதமாக இருக்கும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam