
– Advertisement –
தைப்பூசம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. பலரும் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்து கொண்டு இருக்கிறார்கள். தைப்பூச நாளன்று முருகப்பெருமானுக்கு என்று சிறப்பான சமையலை செய்து படையலாக இட்டு வழிபாடு செய்யும் வழக்கம் என்பது பலருக்கும் இருக்கும். அப்படி பல விதமான பொருட்களை செய்ய இயலாவிட்டாலும் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொருளாக திகழும் தினை மாவை மட்டும் வைத்துக் கூட வழிபாடு செய்யலாம் என்று பலரும் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட தினையை வைத்து பாயாசம் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
தினை – ஒரு கப்வெல்லம் – ஒரு கப்பாசிப்பருப்பு – 1/4 கப்தேங்காய் பால் – ஒரு கப்முந்திரி – 20திராட்சை -15ஏலக்காய் – 3நெய் – 6 ஸ்பூன்தேங்காய் பொடியாக நறுக்கியது – 1/4 கப்உப்பு – 1/2 ஸ்பூன்
– Advertisement –
செய்முறை
முதலில் ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். கடாய் சூடானதும் அதில் ஒன்றரை ஸ்பூன் நெய்யை ஊற்றி நெய் உருகியதும் தினை அரிசியை அதில் போட்டு வாசம் வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். தினை அரிசி நன்றாக வறுபட்ட பிறகு அதை ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளுங்கள். அதே கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து அரை ஸ்பூன் நெய் ஊற்றி பாசிப்பருப்பையும் போட்டு பச்சை வாடை போகும் வரை வறுத்துக்கொள்ளுங்கள். அதையும் எடுத்து தினை அரிசியுடன் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் ஆறு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரை கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்த பிறகு நாம் வறுத்து வைத்திருக்கும் தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பை அதில் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை அடுப்பில் வைத்திருங்கள். மூன்று விசில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தை சேர்த்து வெல்லம் கரைவதற்காக அரைக்கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். வெல்லம் கரைந்தால் போதும். பாகு பதம் தேவையில்லை. வெல்லம் கரைந்த பிறகு அதை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி நெய் உருகியதும் முந்திரிப்பருப்பு, திராட்சை இவற்றை சேர்த்து நன்றாக சிவந்ததும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் நெய்யில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தேங்காயையும் சேர்த்து அது நன்றாக சிவக்க வறுத்து அதையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். குக்கர் விசில் போன பிறகு குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து கரண்டியை வைத்து நன்றாக கலந்து விட வேண்டும். அப்பொழுதுதான் பாசிப்பருப்பும் தினை அரிசியும் நன்றாக குலைந்து வரும்.
இவற்றை நன்றாக கிண்டி விட்ட பிறகு இதில் நாம் கரைத்து வைத்திருக்கும் வெல்லக் கரைசலை ஊற்றி கலக்க வேண்டும். பிறகு இதில் ஏலக்காய் தூள் உப்பு இவற்றையும் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். இது நன்றாக கொதிக்க ஆரம்பித்த பிறகு தேங்காய் பாலையும் இதில் ஊற்றி ஒருமுறை நன்றாக கலந்து விட்டு ஒரு கொதி வரும் அளவிற்கு அடுப்பில் வைத்திருங்கள். ஒரு கொதி வந்ததும் நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை, தேங்காய் இவற்றையும் சேர்த்து மீதம் இருக்கக்கூடிய நெய்யையும் ஊற்றி ஒரு முறை நன்றாக கலந்து அடுப்பை அணைத்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான தினை பாயாசம் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே:பாசிப்பருப்பு தக்காளி தோசை செய்முறை
முருகப்பெருமானுக்காக விரதம் இருக்கக்கூடிய நாட்களில் முருகப்பெருமானுக்கு பிடித்தமான செயல்களை தான் நாம் செய்வோம். அந்த வகையில் முருகப்பெருமானுக்கு பிடித்தமான தினை அரிசியை பயன்படுத்தி இப்படி பாயாசம் செய்து தைப்பூச நாளில் வழிபாடு செய்து முருகனின் அருளை பரிபூரணமாக பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam