
– Advertisement –
எங்கெங்கோ சென்று தெரியாத மூலிகையை கொண்டு வந்து பயன்படுத்த வேண்டும் என்று யோசிப்பதை ஒரு புறம் வைத்துவிட்டு, நம் கண் முன்னே கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் அற்புதம் வாய்ந்த சில மருத்துவ குணங்கள் கொண்டுள்ள செடிகள் பக்கம், நம் உணவு முறையை திருப்பினாலே இந்த உடம்பு நோய்களை எதிர்த்து போராட தயாராகிவிடும். அப்படி ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடிய முருங்கை இலையை பயன்படுத்தி அற்புதமான சூப் எப்படி தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
முருங்கைக்கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள் :
முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி நிறைய
சின்ன வெங்காயம் – ஏழு
தக்காளி – ஒன்று
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – ஒரு இன்ச்
பூண்டு – ஆறு பற்கள்
சீரகம் – ஒரு ஸ்பூன்
தனியா தூள் – அரை ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்
முருங்கைக்கீரை சூப் செய்முறை விளக்கம் :
முருங்கைக்கீரை சூப் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி நிறைய முருங்கைக் கீரையை பிரஷ்ஷாக பறித்து வைத்துக் கொள்ளுங்கள். முருங்கை இலைகள் ரொம்பவும் முதிர்ந்ததாக இல்லாமல் இருப்பது நல்லது. ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கழுவி சுத்தம் செய்த முருங்கை இலைகளை சேர்த்து அதனுடன் சின்ன வெங்காயத்தை தோலுரித்து போட்டுக் கொள்ளுங்கள்.
– Advertisement –
ஒரு தக்காளியை சுத்தம் செய்து 4 நான்கைந்தாக வெட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு உப்பு போட்டு, ரெண்டு கப் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள். பின் இதனுடன் ஒரு துண்டை இஞ்சி, தோல் உரித்த பூண்டு பற்கள், சீரகம், தனியா தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். தனியாவை, தூளாக சேர்ப்பதற்கு பதிலாக தனியா விதைகளை லேசாக வறுத்து சேர்த்தால் நல்ல வாசம் வரும். இப்போது நைசாக அரைத்து எடுத்து கொண்டு வாருங்கள்.
அரைத்த இந்த சூப்பை மீண்டும் அடுப்பில் வைத்து காய விடுங்கள். கொதிக்கும் பொழுது தேவையான அளவிற்கு மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கி, லேசாக ஆறியதும் பொறுக்கும் சூட்டுடன் சுடச்சுட தொண்டைக்கு இதமாக பருகினால் எப்பேர்ப்பட்ட நோய்களும் நம்மை நெருங்குவதற்கு பயப்படும். அந்த அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது இந்த முருங்கை இலை சூப்! இதில் நான்கைந்து முருங்கை இலை காம்புகளையும் சேர்த்தால் நல்லது.
– Advertisement –
இதையும் படிக்கலாமே:
முருங்கை இலையில் ஏராளமான இரும்புச்சத்து காணப்படுகிறது. அடிக்கடி இதை உணவில் சேர்த்து வருவதால் உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும். ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் ஹீமோகுளோபின் அளவு உயரும். கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் பருக வேண்டிய ஒரு அற்புதமான சூப் இது, தவற விடாதீர்கள்! முருங்கை இலை எல்லா இடங்களிலும் சாதாரணமாக கிடைக்கக்கூடியது தான், அதை பயன்படுத்தி இப்படி அருமையான சூப் தயாரித்து வாரம் ஒரு முறையோ, இருமுறையோ பருகுங்கள், ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam