
– Advertisement –
நமக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனால் தான் உணவே மருந்து என்று அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்திருந்தார்கள். அதை மறந்ததால் தான் இன்றைய காலத்தில் பலரும் மருந்து மாத்திரைகளை உணவாக எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உணவுப் பொருட்களில் ஒன்றாக திகழ்வதுதான் சுண்டைக்காய்.
சுண்டைக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகமாக இருக்கிறது. மேலும் இதில் இரும்பு சத்து, விட்டமின் சி போன்ற சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இதை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது வயிற்றில் இருக்கக்கூடிய பூச்சிகள் நீங்கும். மூட்டி வலி, மூலம், வாய் புண் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சுண்டைக்காய் சாப்பிடும் போது விரைவிலேயே இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். மேலும் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சுண்டைக்காயை வீட்டில் இருக்கக்கூடிய நபர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் எப்படி பொடியாக தயார் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
பச்சை சுண்டைக்காய் – 300 கிராம்காய்ந்த மிளகாய் – 12தனியா – ஒரு டேபிள் ஸ்பூன்கடலைப்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்கருப்பு உளுந்து – 4 டேபிள் ஸ்பூன்சீரகம் – 1/2 டேபிள்ஸ்பூன்உப்பு – தேவையான அளவுகருப்பு எள் – 2 டேபிள் ஸ்பூன்நெய் – 2 டேபிள் ஸ்பூன்கட்டிப் பெருங்காயம் – 4 துண்டுபுளி – ஒரு நெல்லிக்காய் அளவுவெல்லம் – சிறிதளவுபூண்டு – 8 பல்கருவேப்பிலை – 2 கொத்து.
செய்முறை
முதலில் சுண்டைக்காயை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு இடி கல்லை வைத்து ஒவ்வொரு சுண்டை காயாக லேசாக இடித்து தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பூண்டை போட்டு நன்றாக வதக்க வேண்டும். எண்ணெய் எதுவும் சேர்க்கக்கூடாது. பூண்டு வதங்கிய பிறகு அதை அப்படியே எடுத்து வைத்துவிட்டு கருப்பு உளுந்தை சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், புளி, கட்டி பெருங்காயம் போன்றவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
– Advertisement –
பிறகு உப்பை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கருப்பு உளுந்தும், கடலைப்பருப்பும், தனியாவும் நிறம் மாறிய பிறகு இதில் கடைசியாக சீரகத்தையும், கருப்பு எள்ளையும் சேர்த்து நன்றாக வறுத்து அதை எடுத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதே கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி நெய் உருகியதும் அதில் நாம் இடித்து வைத்திருக்கும் சுண்டைக்காயை தண்ணீரில் இருந்து வடிகட்டி எடுத்து போட்டு நன்றாக நிறம் மாறும் வரை குறைந்த தீயில் வைத்து வறுக்க வேண்டும். நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிட்டு அதையும் ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது மிக்ஸி ஜாரை எடுத்து அதில் முதலில் நாம் வறுத்து வைத்திருக்கும் பருப்பை போட்டு ஒருமுறை சுற்றிக் கொள்ளுங்கள். பிறகு சுண்டைக்காய் சேர்த்து அதனுடன் ஒரு சிறிய துண்டு வெல்லத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் பச்சை சுண்டைக்காய் பொடி தயாராகி விட்டது. இதை வடித்த சாதத்தில் போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடலாம். விருப்பம் இருப்பவர்கள் இட்லி தோசைக்கும் இந்த பொடியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே:ரசம் வைக்க தெரியாதவர்களுக்கு டிப்ஸ்
நாட்டு காய்கறிகள் வரிசையில் வரக்கூடிய இந்த சுண்டைக்காயை இன்றைய காலத்தில் பலரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. பல மருத்துவ குணம் மிகுந்த இந்த சுண்டை காயை இப்படி அவர்களே அறியாத வண்ணம் சமையலில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சுண்டைக்காயின் அனைத்து விதமான சத்துக்களையும் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பெற முடியும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam