
– Advertisement –
இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய குழந்தைகளும் சரி வேலைக்கு செல்லக்கூடிய இளம் வயதினரும் சரி தனியாக குழம்பு காய்கறி என்று எடுத்துச் செல்ல விரும்புவது கிடையாது. அதற்கு பதிலாக கலவை சாதம் என்று சொல்லக்கூடிய வெரைட்டீரைஸை தான் அதிகளவில் விரும்புகிறார்கள். மேலும் இது சமைப்பவர்களுக்கும் வேலை குறைவாக இருப்பதால் அவர்களும் விரும்பி செய்வார்கள். இப்படி நாம் பலவிதமான வெரைட்டி ரைஸுகளை செய்வோம்.
அவற்றில் ஒன்றாக திகழ்வதுதான் கொத்தமல்லி புலாவ். கொத்தமல்லி தழையை வைத்து இந்த முறையில் நாம் புலாவ் செய்து கொடுத்தோம் என்றால் பிரியாணிக்கு இணையான சுவை கிடைப்பதோடு பிரியாணியை போலவே இதையும் விரும்பி சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். அவ்வளவு சுவை மிகுந்த கொத்தமல்லி புலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி இலை – 2 கப்,பூண்டு – 2 பல்,இஞ்சி – ஒரு இன்ச்,பச்சை மிளகாய் – 4,எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,பிரியாணி இலை – 1,கிராம்பு – 3,ஏலக்காய் – 2,பட்டை – ஒரு துண்டு,வெங்காயம் – 1,உருளைக்கிழங்கு நறுக்கியது – ஒரு கப்,கேரட் நறுக்கியது – ஒரு கப்,உப்பு – தேவையான அளவு,சர்க்கரை – 1/2 டீஸ்பூன்,பாஸ்மதி அரிசி – 1 1/2 கப்
செய்முறை
முதலில் பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து அரை மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் கொத்தமல்லியை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தோலுரித்த பூண்டு, தோல் நீக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து இதனுடன் அரைக்கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
– Advertisement –
இப்பொழுது அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அந்த குக்கர் நன்றாக சூடானதும் அதில் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். விருப்பம் இருப்பவர்கள் இதனுடன் நெய்யை சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெய் நன்றாக சூடானதும் இதில் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை போன்றவற்றை போட வேண்டும். பிறகு நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து அந்த வெங்காயம் வேகும் அளவிற்கு உப்பை சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள்.
வெங்காயம் வதங்கிய பிறகு நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட் இவை இரண்டையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கலந்து விட்டு வேக விடுங்கள். பிறகு நாம் அரைத்து வைத்த கொத்தமல்லி விழுதை அதில் ஊற்றி நன்றாக கலந்து இரண்டு நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு இதில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி இந்த புலாவிற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து இதனுடன் அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
– Advertisement –
ஒரு நிமிடம் கொதித்த பிறகு நாம் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை இதில் போட்டு ஒரு முறை கலந்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு பிறகு மூடி போட்டு மூடி விட வேண்டும். இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். விசில் முற்றிலும் நீங்கே பிறகு குக்கரை திறந்து லேசாக கரண்டியின் நுனியை வைத்து கலந்து விட்டால் சுவையான கொத்தமல்லி புலாவ் தயாராகிவிடும்.
இதையும் படிக்கலாமே:கோதுமை ரவை கேசரி செய்முறை
இன்றைய காலத்தில் கொத்தமல்லி, கருவேப்பிலை புதினா போன்றவற்றை தனியாக எடுத்து வைத்து சாப்பிடக்கூடிய தலைமுறையினர் தான் அதிகமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த முறையில் நாம் செய்து தருவதன் மூலம் அந்த கீரை வகைகளை தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam