
– Advertisement –
தினமும் காலையில் என்ன குழம்பு வைப்பது அதற்கு தொட்டுக்கொள்ள என்ன காய்கறி செய்வது என்பதுதான் பலரது இல்லத்திலும் பெரிய விஷயமாக இருக்கும். காய்கறிகள் இல்லாத சமயத்தில் கலவை சாதமாக ஏதாவது ஒன்றை செய்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி கலவை சாதம் செய்தாலும் அதற்கு தொட்டுக் கொள்வதற்காக ஏதாவது ஒன்றை தேட வேண்டும். இப்படி எந்தவித காய்கறியுமே வீட்டில் இல்லாத சமயம் தக்காளி வெங்காயத்தை மட்டும் வைத்து மிகவும் எளிமையான முறையில் பிரியாணி சுவையில் தக்காளி புலாவ் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
தக்காளி – 3பச்சை மிளகாய் – 2வெங்காயம் – 3புதினா – 10 இலைகள்பிரியாணி இலை – ஒன்றுபட்டை – ஒரு சிறிய துண்டுகிராம்பு – 3முந்திரி பருப்பு – 10பாஸ்மதி அரிசி – 3/4 கப்எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு ஸ்பூன்மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்,மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்பட்டாணி – 1/4 கப்கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவு
– Advertisement –
செய்முறை
முதலில் தக்காளியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதன் தோல் நீங்கும் வரை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முந்திரிப் பருப்பை தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசியையும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பச்சை பட்டாணியாக இருக்கும் பட்சத்தில் அதை நேரடியாக சேர்த்துக் கொள்ளலாம். காய்ந்த பட்டாணியாக இருக்கும் பட்சத்தில் அதையும் ஊற வைத்து வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
வேக வைத்த தக்காளியின் தோலை நீக்கிவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் முந்திரி பருப்பையும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் குக்கரை வைத்து குக்கர் நன்றாக சூடானதும் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும்.
– Advertisement –
பிறகு இதில் நீளவாக்கில் நறுக்க வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்த பிறகு இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு நன்றாக வதக்க வேண்டும். இஞ்சி பூண்டின் பச்சை வாடை போன பிறகு அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை அதில் சேர்த்து அதனுடன் பச்சை மிளகாய், புதினா இலை இவற்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
தக்காளி நன்றாக வற்றி கெட்டியாகும் வரை வதக்க வேண்டும். பிறகு இதில் அரைத்து வைத்திருக்கும் முந்திரி விழுதையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த சமயத்தில் பட்டாணியையும் சேர்த்து நன்றாக வதக்குங்கள். இப்பொழுது இதில் மிளகாய் தூள், மல்லித்தூள் இரண்டையும் சேர்த்து இதன் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாடை அனைத்தும் நீங்கிய பிறகு இதில் ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலந்துவிட்டுக் கொள்ளுங்கள்.
– Advertisement –
பிறகு ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை இதில் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து தேவையான அளவு உப்பு, கரம் மசாலா போன்றவற்றை சேர்த்து குக்கரை மூடி விட வேண்டும். மூன்று விசில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். விசில் முற்றிலும் நீங்கிய பிறகு குக்கர் மூடியை திறந்து ஒருமுறை நன்றாக கலந்து விட்டு மறுபடியும் குக்கரை மூடி விடுங்கள். பத்து நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் உதிரி உதிரியான பிரியாணி சுவையில் இருக்கக்கூடிய தக்காளி புலாவ் தயாராக இருக்கும்.
இதையும் படிக்கலாமே:கேரட் பால் ரெசிபி
மிகவும் எளிதில் செய்யக்கூடிய இந்த தக்காளிப் புலாவை ஒரு முறை செய்து கொடுக்க இது பிரியாணி தானே என்று வீட்டிலிருக்கக் கூடிய அனைவரும் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam