
– Advertisement –
நமக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு காய்கறிகளிலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் இருக்கிறது. அந்த சத்துக்கள் அனைத்தும் நமக்கு தேவைப்படக்கூடிய சத்துக்களாகவே திகழ்கின்றன. அதனால் எந்த ஒரு காய்கறியையும் ஒதுக்காமல் நம்மால் இயன்ற அளவு சாப்பிட வேண்டும். அப்படி நாம் ஒதுக்காமல் சாப்பிடக்கூடிய ஒரு முக்கியமான காய்கறி என்றால் அதுதான் பீன்ஸ். பொதுவாக கிட்னியில் கல் இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு பீன்சை வேகவைத்து சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட பீன்ஸை வாரத்திற்கு ஒருமுறையாவது நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொண்டோம் என்றால் நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். ஆனால் பலரும் இந்த பீன்சை விரும்பி சாப்பிடுவது கிடையாது. அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் பீன்ஸ் மசாலா எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
பீன்ஸ் – ஒரு கப்பூண்டு – 3 பல்வெங்காயம் – ஒன்றுஇஞ்சி – ஒரு சிறிய துண்டுகொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவுபுதினா – ஒரு கைப்பிடி அளவுபச்சை மிளகாய் – ஒன்றுஎண்ணெய் – 2 டீஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்துமஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்சீரகம் – ஒரு ஸ்பூன்,தனியா தூள் – ஒரு ஸ்பூன்,உப்பு – தேவையான அளவு
– Advertisement –
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பூண்டு, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் இவை அனைத்தையும் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கருவேப்பிலையை சேர்க்க வேண்டும்.
பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் பூண்டு வெங்காய விழுதை அதில் சேர்த்து அதன் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாடை போன பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், உப்பு, தனியாத்தூள் போன்றவற்றை சேர்த்து சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக வதக்க வேண்டும். இந்த மசாலாக்களின் பச்சை வாடை போன பிறகு இதில் ஒரு இன்ச் அளவு நறுக்கிய பீன்ஸை அதில் சேர்த்து நன்றாக ஒரு முறை கலந்து பீன்ஸ் வேக தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி வைத்து குறைந்த தீயில் வைத்து வேகவிட வேண்டும்.
– Advertisement –
பீன்ஸ் நன்றாக வெந்து மசாலா நன்றாக பீன்ஸ் உடன் சேர்ந்து வரும் பொழுது அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பீன்ஸ் மசாலா தயாராகிவிட்டது. இந்த பீன்ஸ் மசாலாவை சப்பாத்தி, புரோட்டா, புலாவ் போன்றவற்றிற்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே:கொங்கு நாட்டு அடை செய்முறைஎந்த ஒரு காய்கறியாக இருந்தாலும் அந்த காய்கறியை விருப்பத்துடன் சாப்பிட வேண்டும். அப்படி விரும்பாத சமயத்தில் அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் நாம் செய்து கொடுத்தோம் என்றால் கண்டிப்பான முறையில் அந்த காய்கறிகளை சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். ஒரு முறை இந்த பீன்ஸ் மசாலாவையும் செய்து பாருங்கள். பீன்ஸ் பிடிக்காதவர்களும் சாப்பிட்டு விடுவார்கள்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam