– Advertisement –
நம்முடைய உணவில் அறுசுவைகளும் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு சுவையிலும் ஒவ்வொரு விதமான தன்மைகள் இருக்கிறது. அதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் பலரும் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளாத சுவை என்றால் அது கசப்பு சுவைதான். பொதுவாக கசப்பு சுவை என்றதும் நம் நினைவிற்கு வருவது பாவக்காய் தான். பாவக்காயை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடலில் பல நன்மைகள் உண்டாகிறது என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது.
குறிப்பாக சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கும், தேவையில்லாத கொழுப்புகளை கரைப்பதற்கும், ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வதற்கும் பாவக்காய் உதவுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த பாவக்காய் யாரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. பலரும் மருந்தாக நினைத்து சாப்பிடுகிறார்களே தவிர்த்து ருசித்து சாப்பிடுவது கிடையாது. சிறு குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை பாகற்காயை ருசித்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இந்த முறையில் பக்கோடா செய்து கொடுக்க வேண்டும். அந்த பக்கோடாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
பாவக்காய் – ஒரு கிலோஉப்பு – ஒரு ஸ்பூன்பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்சோம்பு – ஒரு ஸ்பூன்சிக்கன் 65 மசாலா – ஒரு ஸ்பூன்மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்இஞ்சி – 50 கிராம்பூண்டு – 50 கிராம்பச்சை மிளகாய் – 8கருவேப்பிலை, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவுசோள மாவு – 150 கிராம்கடலை மாவு – 300 கிராம்அரிசி மாவு – 50 கிராம்எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் பாவக்காய் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரே அளவில் இருப்பது போல் நறுக்கிக் கொள்ள வேண்டும். பழுத்த பாவக்காய் இதற்கு உபயோகப்படுத்தக் கூடாது. இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தில் உப்பு, பெருங்காயத்தூள், சோம்பு, சிக்கன் 65 மசாலா, மிளகாய் தூள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவை மூன்றையும் சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை கொத்தமல்லியையும் சேர்க்க வேண்டும்.
– Advertisement –
பிறகு சோளமாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதில் அரை டம்ளர் அளவிற்கு தண்ணீரை ஊற்றி கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும். நறுக்கிய பாவற்காயை தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடம் வைத்திருந்து பிறகு அதை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் முற்றிலும் வடிந்த பிறகு இந்த பாவற்காயை நாம் தயார் செய்து வைத்திருக்கும் சோளமாவில் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். சோள மாவு ஒவ்வொரு பாவற்காயிலும் நன்றாக சேரும் அளவிற்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக இதில் கால் கிலோ அளவிற்கு கடலை மாவை தூவி கடலைமாவும் பாகற்காயோடு சேரும் அளவிற்கு நன்றாக பிரட்ட வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீரை தெளித்துக் கொள்ளுங்கள். கடைசியாக மீதம் இருக்கக்கூடிய 50 கிராம் கடலை மாவையும், அரிசி மாவையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
– Advertisement –
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பக்கோடாவை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் பாவற்காயை எடுத்து ஒவ்வொன்றாக பொறுமையாக எண்ணையில் போட வேண்டும். இரண்டு நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு ஒரு கரண்டியை பயன்படுத்தி இதை நன்றாக திருப்பி போட்டு சிவக்க வரும் வரை நன்றாக வேக வைத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் மொறுமொறுப்பான பாகற்காய் பக்கோடா தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே:சிகப்பு அவல் லட்டு ரெசிபி
கசப்பு சுவை மிகுந்த பாவற்காயை கசப்பு சுவையே இல்லாத அளவிற்கு குழந்தைகள் முதற் கொண்டு அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை இப்படி முயற்சி செய்து பாருங்கள்.பாவற்காய் வாங்கினாலே பக்கோடா தான் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள்
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam