– Advertisement –
வெங்காயம் இல்லாத சமையலை நம்மால் யோசித்துக் கூட பார்க்க முடியாது. அந்த வெங்காயம் மலிவான விலையில் கிடைக்கும் பொழுது அதை நாம் உபயோகப்படுத்திக் கொண்டோம் என்றால் இல்லத்தரசிகளுக்கு அது மிகப்பெரிய உதவியாக இருக்கும். சட்னி செய்ய முடியாத நேரத்தில் இந்த ஊறுகாயை வைத்து சாப்பிடலாம். குழம்பு செய்யாத நேரத்தில் சாப்பாட்டுடன் சேர்த்து பிணைந்து சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள எதுவும் இல்லை என்னும் பட்சத்தில் இந்த வெங்காய ஊறுகாயை வைத்து சாப்பிடலாம். இவ்வளவு அற்புதம் நிறைந்த இந்த வெங்காய ஊறுகாயை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
வெங்காயத்தில் குறைந்த அளவு கலோரி தான் இருக்கிறது. ஆனால் விட்டமின்கள், தாதுக்கள், ஆன்ட்டிஆக்சைடுகள் போன்றவை அதிகமாக இருக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், ஃபோலிக் அமிலம், மக்னீசியம், பாஸ்பரஸ், சல்பர் போன்ற சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. வெங்காயத்தை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு போன்றவை நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
கடுகு – 50 கிராம்
வெந்தயம் – 15 கிராம்
வெங்காயம் – ஒரு கிலோ
புளி – 50 கிராம்
பெருங்காயம் – 15 கிராம்
மிளகாய்த்தூள் – 100 கிராம்
வெல்லம் – ஒரு துண்டு
நல்லெண்ணெய் – 200 எம்எல்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் 25 கிராம் கடுகு மற்றும் 15 கிராம் வெந்தயத்தை சேர்த்து இவை இரண்டும் நன்றாக பொரிந்த பிறகு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்துவிட்டு வாழைக்காய் சீவுவது போல் சீவிக்கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணையை ஊற்றுங்கள். நல்லெண்ணெய் காய்ந்ததும் சீவி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் லேசாக நிறம் மாறியதும் அதில் புளியை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக சிவக்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
– Advertisement –
பிறகு இந்த வெங்காயத்தை எண்ணெய் இல்லாமல் தனியாக எடுத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். ஆரிய வெங்காயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸ் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் எண்ணையை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து கடுகு பொரிந்ததும் நாம் அரைத்து வைத்து வைத்திருக்கும் வெங்காய விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு இதற்கு தேவையான அளவு உப்பு, ஒரு துண்டு வெள்ளம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து வந்த பிறகு நாம் ஏற்கனவே கடுகு வெந்தயம் பொடி செய்து வைத்திருக்கிறோம் அல்லவா அந்த பொடியை முழுவதுமாக கொட்டி இரண்டு முறை பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். மிகவும் சுவையான வெங்காய கிரேவி ஊறுகாய் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: உளுந்து மசாலா பூரி செய்முறை
உடல்நிலை சரியில்லாத போதும் சமைப்பதற்கு காய்கறிகள் இல்லாத பொழுதும் இந்த ஒரு ஊறுகாய் இருந்தால் போதும் நம்மால் எளிதில் சமைத்து முடித்து விட முடியும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam