ஆரோக்கியமான வாழைத் தண்டு சட்னி செய்முறை

ஆரோக்கியமான வாழைத் தண்டு சட்னி செய்முறை

Qries

– Advertisement –

இயற்கையிலேயே நமக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு பொருட்களும் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய பல நோய்களை தீர்க்கக் கூடிய அற்புதமான பொருட்களாக திகழ்கின்றன. அவற்றில் இருக்கக்கூடிய சத்துக்கள் ஒவ்வொன்றும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட சத்து மிகுந்த பொருட்களில் ஒன்றாக திகழ்வது தான் வாழைத்தண்டு. வாழைத்தண்டை வைத்து எப்படி சட்னி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் இருக்கிறது. இதனால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். மேலும் வாழைத்தண்டில் விட்டமின் பி6, இரும்புச்சத்து போன்றவை இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதயம் மற்றும் உடல் தசைகள் வலுப்பெறவும் உதவுகிறது. மேலும் வாழைத்தண்டை ஜூஸாக செய்து சாப்பிடும் பொழுது சிறுநீரக கற்கள் கரையும் என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது. சர்க்கரை நோயை ஏற்படுத்தக்கூடிய இன்சுலினின் அளவை சீராக வைத்துக் கொள்வதற்கு வாழைத்தண்டு உதவுகிறது.
– Advertisement –

தேவையான பொருட்கள்

வாழைத்தண்டு – 250 கிராம்
வேர்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்
தனியா – ஒரு டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 75 கிராம்
பச்சை மிளகாய் – 4
கொத்தமல்லி – அரைக்கட்டு
துருவிய தேங்காய் – ஒரு கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு
புளி – எலுமிச்சை அளவு

செய்முறை
முதலில் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கக்கூடிய நாரை நீக்குவதற்கு இரண்டு மூன்று குச்சிகளை ஒன்றாக சேர்த்து அந்த வாழைத்தண்டு இருக்கும் தண்ணீரில் சுழற்சி பொழுது அதில் இருக்கக்கூடிய நாறுகள் அனைத்தையும் எளிதில் எடுத்து விடலாம்.
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து தோல் நீக்கப்பட்ட வேர்க்கடலை, தனியா, பொட்டுக்கடலை இவை மூன்றையும் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதே கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வாழைத்தண்டு இவை மூன்றையும் சேர்த்து குறைந்த தீயில் வைத்து ஏழு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.
– Advertisement –

தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். வாழைத்தண்டில் இருக்கக்கூடிய தண்ணியை வைத்து வாழைத்தண்டை நன்றாக வேக விட வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வெந்த பிறகு இதில் சுத்தம் செய்யப்பட்ட கொத்தமல்லி, துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு இவை மூன்றையும் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விட்டு பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.
பிறகு இதில் எலுமிச்சை அளவு புளியை சேர்த்து நன்றாக ஒரு கிளறி இதை ஆறவிட வேண்டும். இது நன்றாக ஆறிய பிறகு நாம் ஏற்கனவே மிக்ஸி ஜாரில் போட்டு வைத்திருக்கும் வேர்க்கடலை தனியா பொட்டுக்கடலை இது மூன்றையும் நன்றாக அரைத்து விட்டு இதனுடன் நாம் வதக்கி வைத்திருக்கும் வாழைத்தண்டையும் சேர்த்து கால் டம்ளர் மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
– Advertisement –

இப்பொழுது வாழைத்தண்டு சட்னி தயாராகி விட்டது. இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி விட்டு தாளிப்பதற்கு தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து சட்னியில் கொட்டி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான வாழைத்தண்டு சட்னி தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே கேரளா ஸ்டைலில் நெய் பாயாசத்தை சுவையா இப்படி செஞ்சு குடுங்க.
பல மருத்துவ குணம் மிகுந்த வாழைத்தண்டை கூட்டாகவோ பொறியலாகவோ செய்து தரும் பொழுது சாப்பிடாதவர்கள் கூட இப்படி சட்னியாக செய்து தரும்பொழுது விரும்பி சாப்பிடுவார்கள். முயற்சி செய்து பாருங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top