இதமான வெள்ளரிக்காய் குளிர்பானம் செய்முறை | cucumber cool drink preparation in tamil

இதமான வெள்ளரிக்காய் குளிர்பானம் செய்முறை | cucumber cool drink preparation in tamil


இது கோடை காலம். அதிலும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் நடக்கக்கூடிய இந்த காலத்தில் வெயிலின் தாக்கத்தை குறைத்து அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பொருட்களை சேர்த்து குளிர்பானம் போல் தயார் செய்தோம் என்றால் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் வெள்ளரிக்காயை வைத்து செய்யக்கூடிய ஒரு குளிர்பானத்தை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் – ஒன்றுகேரட் – 2பேரிச்சம்பழம் – 10சியா விதைகள் – ஒரு டேபிள் ஸ்பூன்ஆளி விதை – ஒரு டேபிள் ஸ்பூன்காய்ச்சிய பால் – 1/2 லிட்டர்ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்
– Advertisement –

செய்முறை
முதலில் சியா விதைகளை ஒரு கிண்ணத்தில் போட்டு அது ஊரும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதே போல் பேரிச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு அதையும் ஒரு கிண்ணத்தில் போட்டு சுடுதண்ணீரை ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இரண்டு கேரட்டை எடுத்து அதன் தோலை சீவி விட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு மூன்று கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூன்று விசில் வைத்து எடுத்து விடுங்கள்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஆளி விதையை போட்டு ஆளி விதை வெடித்து வரும் வரை குறைந்த தீயில் வைத்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக சாலிட்க்கு பயன்படுத்தக்கூடிய வெள்ளரிக்காயை எடுத்து அதன் தோலை சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இதை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதுடன் பேரிச்சம்பழம், ஆளி விதை, வேகவைத்த கேரட் இவற்றையும் இதில் இருக்கக்கூடிய தண்ணீரையும் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
– Advertisement –

பிறகு இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி இதனுடன் பால் மற்றும் ஏலக்காய் தூள் மற்றும் ஊற வைத்திருக்கும் சியா விதைகளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். விருப்பம் இருப்பவர்கள் இதை அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்தும் கொடுக்கலாம் அல்லது ஐஸ்க்கட்டிகளை போட்டும் பருக கொடுக்கலாம். இதில் இருக்கக்கூடிய அனைத்து பொருட்களும் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடிய பொருட்களாகவும் அதேசமயம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதாகவும் திகழ்கிறது.
இதையும் படிக்கலாமே:சத்தான வெஜிடபிள் ஆம்லெட் செய்யும் முறை
வெயில் காலத்திற்கு இதமாக ஏதாவது பருக வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த முறையில் ஆரோக்கியமான குளிர்பானத்தை வீட்டிலேயே தயார் செய்து பருக்கலாம். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். வெயிலுக்கு இதமாகவும் இருக்கும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top