இனிப்பு இட்லி செய்முறை | inippu idly preparation in tamil

இனிப்பு இட்லி செய்முறை | inippu idly preparation in tamil

Qries

– Advertisement –

வீட்டில் இருக்கக்கூடிய குடும்ப தலைவிகள் பலரும் இட்லி, தோசைக்கு மாவு அரைத்து விட்டு அதை பயன்படுத்திய காலை மற்றும் இரவு நேரங்களில் சிற்றுன்றியை முடித்துக் கொள்ள முயற்சி செய்வார்கள். இதில் அவர்களுக்கு வசதியானது இட்லி தான் என்றாலும், வீட்டில் இருப்பவர்கள் பலரும் இட்லியை விரும்பி சாப்பிட மாட்டார்கள் என்பதற்காக கால் கடுக்க நின்று தோசை ஊற்றி கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். அந்த கவலை இனிமேல் இல்லை.
இட்லி மாவு அரைத்த பிறகு அந்த இட்லி மாவை வைத்து அதில் சிறிது மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தி இட்லி ஊத்தி கொடுத்தோம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இது மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவாகவும் திகழும். அப்படிப்பட்ட ஒரு இட்லியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்
– Advertisement –

தேவையான பொருட்கள்
இட்லி மாவு – ஒரு கப்,பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்,தேங்காய் – ஒரு மூடி,வெல்லம் – 1 கப்,ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்,தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்,நெய் – ஒரு டீஸ்பூன்
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் நெய் ஊற்றி நெய் உருகியதும் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு பாசிப்பருப்பை போட்டு லேசாக சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே கடாயில் 2 டேபிள் ஸ்பூன் அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் வெல்லத்தையும் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ள வேண்டும். அனைத்து வெல்லமும் நன்றாக கரைந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதை எடுத்து வடிகட்டி இட்லி மாவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

பிறகு அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காயை போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். ஒருவேளை இது இட்லி மாவு பதத்திற்கு இல்லாமல் சற்று தண்ணீராகிவிட்டது என்றால் இதனுடன் பச்சரிசி மாவை சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளலாம். இப்பொழுது அடுப்பில் இட்லி சட்டியை வைத்துக் கொள்ளுங்கள்.
இட்லி ஊத்தும் ஒவ்வொரு பள்ளத்திலும் முதலில் தேங்காய் துருவலை சிறிதளவு போட்டு அதற்கு மேல் நாம் தயார் செய்த இட்லி மாவை ஊற்றி அதற்கு மேல் நாம் வறுத்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு சிறிது மற்றும் சிறிது தேங்காய் துருவல் போட்டு மூடி போட்டு எப்பொழுதும் இட்லியை வேக வைப்பது போல் வேக வைத்துக் கொள்ளுங்கள். 5 யிருந்து 10 நிமிடத்தில் இட்லி வெநதுவிடும். இட்லி வெந்ததும் அதை எடுத்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பரிமாறி பாருங்கள். பாசிப்பருப்பின் சுவையும் தேங்காயின் சுவையும் வெல்லத்தின் சுவையும் அந்த இட்லியின் சுவையை முற்றிலுமாக மாற்றும். அதோடு மட்டுமல்லாமல் இது நல்ல ஆரோக்கியமான சிற்றுண்டியாகவும் அமையும்.
இதையும் படிக்கலாமே:பட்டாணி புதினா சாதம் செய்முறை
இட்லியா வேண்டாம் என்று கூறுபவர்களுக்கும் இந்த முறையில் இட்லி செய்து கொடுக்க, வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஆரோக்கியமான இந்த இட்லியை ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top