இன்ஸ்டன்ட் தயிர் சட்னி | Instant curd chutney

இன்ஸ்டன்ட் தயிர் சட்னி | Instant curd chutney

Qries

– Advertisement –

தயிர் என்றாலே சாதத்துக்கு தான் சரியான காம்பினேஷன் என்று பலரும் நினைப்பதுண்டு, ஆனால் தயிரில் இப்படி ஒரு ரெசிபி இருக்கிறதா? என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். இட்லி, தோசை, சப்பாத்தி என்று எல்லா விதமான டிபன் ஐட்டங்களுக்கும் தொட்டுக்க சட்னி இல்லாத சமயத்தில் சட்டுன்னு கை கொடுக்கக் கூடிய இந்த பிரமாதமான தயிர் சட்னி ரெசிபி எப்படி தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
தயிர் சட்னி செய்ய தேவையான பொருட்கள் :

புளிக்காத தயிர் – ஒரு கப்
சமையல் எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று
வரமிளகாய் – ஒன்று
சின்ன வெங்காயம் – 6
பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – ஒரு கொத்து
தக்காளி – ஒன்று
மல்லித்தழை – சிறிதளவு

தயிர் சட்னி செய்முறை விளக்கம் :
தயிர் சட்னி செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். புளிக்காத தயிர் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். தயிர் புளித்தால் சுவை நன்றாக இருக்காது. உங்களுக்கு தேவையான அளவிற்கு கெட்டியான தயிராக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். இரண்டு ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.
– Advertisement –

எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு படபடவென்று பொரிந்து வந்ததும், கடலை பருப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். லேசாக வறுபட்ட பின்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் காரத்திற்கு பச்சை மிளகாய் மற்றும் சுவைக்கு வர மிளகாய் இரண்டையும் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை, வாசனைக்கு பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து, கண்ணாடி பதம் வர நன்கு வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் இல்லை என்றால் ஒரு மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கிய பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு மீடியம் சைஸ் அளவிற்கு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் போல தக்காளியை அதிகம் வதக்க வேண்டிய அவசியமில்லை. லேசாக வதங்கியதும் கொஞ்சம் கொத்தமல்லி இலைகளை நறுக்கி போட்டு ஒரு பிரட்டு பிரட்டி விடுங்கள்.
– Advertisement –

இதையும் படிக்கலாமே:தை மாத தேய்பிறை பஞ்சமி திதி பரிகாரம்
இதை நீங்கள் எடுத்து வைத்துள்ள கெட்டி தயிருடன் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து வையுங்கள். அவ்வளவுதான், இந்த சட்னியை சாதத்துடன் அப்படியே பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டால் அதை விட அருமையாக இருக்கும். தயிர் எப்படி இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும் என்று யோசிப்பவர்கள் ஒரு முறை தொட்டு சாப்பிட்டு பாருங்கள், அதன் பிறகு அடிக்கடி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். அந்த அளவிற்கு ஈஸியான மற்றும் சுவையான இந்த தயிர் சட்னி இதே முறையில் நீங்களும் ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top