இன்ஸ்டன்ட் தோசை ரெசிபி | instant dosa recipe in tamil

இன்ஸ்டன்ட் தோசை ரெசிபி | instant dosa recipe in tamil

Qries

– Advertisement –

காலையிலும் மாலையிலும் ஏதாவது ஒரு டிபனை செய்து சாப்பிடுவதுதான் பலருது வீடுகளிலும் வழக்கமாக இருக்கிறது. அப்படி நாம் செய்யும்பொழுது ஒரு சில நேரங்களில் வீட்டில் மாவு இல்லாமல் போய்விடும். கடைக்கு சென்று மாவு வாங்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் மாவு வாங்குவதை மறந்தும் விடுவோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டின் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து தோசை மாவு தயார் செய்து உடனடியாக ஊற்றி சாப்பிட முடியும்.
அப்படி ஊற்றும் தோசையானது ஹோட்டல் தோசை விட மிகவும் சுவையாக இருக்கும். இதற்காக நாம் பெரிதும் மெனக்கிட வேண்டியது இல்லை. மிகவும் சுலபமான முறையில் தோசை மாவு தயார் செய்து உடனடியாக தோசை ஊற்றி விடலாம். அப்படி இன்ஸ்டன்ட் தோசை செய்வதற்கு எந்த முறையில் மாவு அரைக்க வேண்டும்? எந்தெந்த பொருட்களை அதில் சேர்க்க வேண்டும் என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்
அரிசி மாவு – ஒரு கப்கடலைமாவு – 1/4 கப்தயிர் – 1/2 கப்உருளைக்கிழங்கு – 1உப்பு – தேவையான அளவுபேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அளவு அரிசி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் கடலை மாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தயிர், உப்பு இவற்றையும் சேர்த்து ஒரு உருளைக்கிழங்கை எடுத்து தோலை சீவி விட்டு அதையும் நறுக்கி போட்டு அரைக்க வேண்டும்.
– Advertisement –

சிறிதளவு மட்டுமே தண்ணீர் ஊற்ற வேண்டும். ஏனென்றால் உருளைக்கிழங்கில் தண்ணீர் சத்து இருக்கும் என்பதால் அதிக அளவில் தண்ணீர் ஊற்றி மாவை அரைக்கக்கூடாது. தேவைப்பட்டால் மறுபடியும் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம் என்பதால் சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த இந்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் பேக்கிங் சோடாவை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இதை நாம் உடனடியாக ஊற்றுகிறோம் என்பதால்தான் பேக்கிங் சோடாவை நாம் சேர்க்கிறோம். எப்போதும் போல் அடுப்பில் தோசை கல்லில் வைத்து தோசை ஊற்ற வேண்டும்.
– Advertisement –

தோசை ஊற்றும் பொழுது தோசை நன்றாக சிவந்து வர வேண்டும் என்பவர்கள் தோசை ஊற்றியதும் எண்ணையை ஊற்றாமல் சிறிது நேரம் கழித்து எண்ணெய் ஊற்றும் பொழுது தோசையானது முறுகலாக வரும். தோசை தயாராகிவிட்டது. இதற்கு எப்பொழுதும் போல் தேங்காய் சட்னியோ, தக்காளி சட்னியோ, கார சட்னியோ ஏதாவது ஒரு சட்னியை அரைத்து வீட்டில் இருப்பவர்களுக்கு தரலாம்.
இதையும் படிக்கலாமே:கோவக்காய் சட்னி செய்முறை
மாவில்லாத சூழ்நிலையில் இந்த முறையில் மாவு தயார் செய்து தோசை ஊற்றும் பொழுது அந்த தோசையின் சுவையானது அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் மொறுகளாக ஹோட்டலில் இருக்கும் தோசையை விட சுவையாக இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top