– Advertisement –
விதவிதமான தோசை வகைகளில் முட்டை தோசை என்றால் எல்லோருக்கும் ஒரு தனி பிரியம் தான். தோசையை ஊற்றி அதன் மீது முட்டையை போட்டு சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். இப்படி செய்யாமல் தோசை மாவில் கொஞ்சம் மசாலாக்களையும், இது போல சேர்த்து வித்தியாசமான முறையில் ஒருமுறை வார்த்து பாருங்கள், அவ்வளவுதான்.. வீட்டில் இருக்கும் அனைவரும் இதே தோசை தான் இனி வேண்டும் என்று விரும்பி கேட்பார்கள். அருமையான சுவையுடன் முட்டை கார தோசை எப்படி செய்வது? என்னும் ரகசியத்தை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.
முட்டை கார தோசை செய்ய தேவையான பொருட்கள் :
இட்லி மாவு – 2 கப்
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று
முட்டை – ஒன்று
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் – 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – ஒரு கொத்து
முட்டை கார தோசை செய்முறை விளக்கம் :
இரண்டு கப் அளவிற்கு இட்லி மாவு எடுத்து ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு பச்சை மிளகாயை காம்பு நீக்கி வெட்டி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி போடுங்கள். இவற்றுடன் மஞ்சள் தூள் கால் ஸ்பூன் அளவிற்கும் கொஞ்சம் குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
சில்லி ஃப்ளேக்ஸ் அரை ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். சில்லி ஃபிளேக்ஸ் இல்லை என்றால் வறுத்த வர மிளகாய்களை மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்து வைத்துக் கொள்ளுங்கள், சில்லி ஃபிளக்ஸ் ரெடி! மிளகாய் தூள், தனி மிளகாய் தூள் ஆக சேர்க்க வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
எல்லாவற்றையும் நன்கு ஒருமுறை கலந்து விடுங்கள். இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் கடைசியாக ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு பீட்டர் கொண்டு கலந்து விடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் அப்படியே ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு சூடான தோசை கல்லை அடுப்பில் வைத்து காய விடுங்கள். தோசை கல் காய்ந்ததும் ஒன்றரை கரண்டி மாவை எடுத்து மெல்லியதாக தேய்த்து பரப்பி விடுங்கள்.
– Advertisement –
இதையும் படிக்கலாமே:அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருக வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு.
இது பார்ப்பதற்கு அடை தோசை போலவே தான் இருக்கும். பின் சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக ஒருபுறம் வெந்ததும், மறுபுறம் திருப்பிப் போட்டு வேக விடுங்கள். அவ்வளவுதாங்க, இந்த முட்டை கார தோசைக்கு தொட்டுக்க எதுவுமே வேண்டாம், சட்னி எதுவும் இல்லாமலேயே வெறும் தோசை ரொம்பவே சுவையாக இருக்கும். முட்டை சேர்த்திருப்பதால் ஒரு தோசை சாப்பிட்டாலே வயிறு நிரம்பும் படியாகவும் இருக்கும். இந்த முட்டை கார தோசை நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் பிடிக்கும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam