ஈஸி ஸ்டஃப்டு பணியாரம் ரெசிபி | Stuffed paniyaram recipe in Tamil

ஈஸி ஸ்டஃப்டு பணியாரம் ரெசிபி | Stuffed paniyaram recipe in Tamil

Qries

– Advertisement –

பாரம்பரியமாக பணியாரம் சாப்பிட்டு வளர்ந்தவர்கள் நம்மில் பலர். பணியாரத்தை இன்று மறந்திருந்தாலும் பார்த்தவுடன் லபக்.. லபக்.. என்று வாயில் அள்ளிப் போட்டுக் கொள்ளும் அளவிற்கு வயிற்றுக்கு திருப்தியான இந்த பணியாரத்தை வித்தியாசமான முறையில் ஸ்டஃப்பிங் செய்து எப்படி ரொம்ப சுலபமாக சுவையாக தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.
ஸ்டஃப்டு பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – தேவையான அளவு
சமையல் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு – அரை ஸ்பூன்
உளுந்து – ஒரு ஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
வர மிளகாய் – ஒன்று
இஞ்சி – சிறு துண்டு
கருவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை – சிறிதளவு
ஸ்டஃப் செய்ய தேவையான பொருட்கள்:
– Advertisement –

தக்காளி – ஒன்று
பெரிய வெங்காயம் – ஒன்று
பூண்டு பல் – நான்கு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வரமிளகாய் – 1
ஸ்டஃப்டு பணியாரம் செய்முறை விளக்கம்:
இந்த பணியாரம் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஸ்டஃப் செய்வதற்கு உரிய கார சட்னியை முதலில் தயார் செய்து கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸர் ஜாரில் ஸ்டஃப் செய்ய கொடுக்கப்பட்டுள்ள வெங்காயம், தக்காளி, பூண்டு கருவேப்பிலை, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு ரொம்பவும் நைசாக இல்லாமல் கொஞ்சம் போல் கொரகொரப்பாக கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். இவை வறுபட்டதும் பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகள் சேர்த்து, ஒரு வரமிளகாயை கிள்ளி சேர்த்து, கொஞ்சம் கருவேப்பிலையை போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் வெட்டி வைத்துள்ள பொடியான வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளுங்கள். கண்ணாடி பதம் வர வதங்கியதும் தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்குங்கள். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து, அரை கைப்பிடி அளவிற்கு மல்லி தழைகளையும் நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி போட்டு ஒருமுறை நன்கு கலந்து விடுங்கள்.
– Advertisement –

இதையும் படிக்கலாமே:தளிகை போடும் வழக்கம் இல்லாதவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு
பின் அடுப்பை அணைத்துவிட்டு தேவையான அளவிற்கு இட்லி மாவு எடுத்து அதில் இவற்றை சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது பணியார சட்டியை எடுத்து சூடேற்றி ஒவ்வொரு குழியிலும் தேவையான அளவிற்கு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். பின்னர் ஒவ்வொரு குழியிலும் பாதி அளவிற்கு மாவை சேர்த்து மேற்பரப்பில் நீங்கள் தயாரித்து வைத்துள்ள சட்னியை அரை ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். பின் கொஞ்சம் போல மாவு சேர்த்து மூடிக் கொள்ளுங்கள். ஒரு புறம் நன்கு வெந்ததும் திருப்பி போடுங்கள். அவ்வளவுதான் சுவையான ஸ்டஃப்டு பணியாரம் வித்தியாசமான முறையில் சூப்பரான டேஸ்டில் இப்பொழுது தயார்! இப்படி மட்டும் சுட சுட சாப்பிட்டால் வயிறு வேண்டாம் வேண்டாம் என்றாலும், வாய் கேட்டுக் கொண்டே இருக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top