உங்க குட்டீஸ்க்கு ஒரு முறை இப்படி வித்தியாசமா கேரட் சிப்ஸ் பண்ணி குடுங்க

உங்க குட்டீஸ்க்கு ஒரு முறை இப்படி வித்தியாசமா கேரட் சிப்ஸ் பண்ணி குடுங்க

Qries

– Advertisement –

வீட்டில் நாம் என்ன தான் வகை வகையாக சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகளுக்கென தனியாக ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து வைத்தே ஆக வேண்டும். இல்லை என்றால் அவர்கள் கடைகளில் கிடைக்கும் நொறுக்கு தீனிகளை வாங்கி ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்வார்கள். இந்த விஷயத்தில் நாம் நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும்.
அப்படி குட்டீஸ்க்கு கொடுக்க ரொம்பவே சுலபமான அதே நேரத்தில் அவர்களின் ஆரோக்கியத்திற்கு எந்த கேடும் விளைவிக்காத வகையில் ஒரு அருமையான ஸ்நாக்ஸ் ரெசிபியான கேரட் சிப்ஸ் பற்றி தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்
கேரட் – 1/4 கிலோகடலை மாவு – 2 ஸ்பூன்அரிசி மாவு – 2 ஸ்பூன்கான்ஃபிளவர் மாவு – 1 ஸ்பூன்கரம் மசாலா – 1/2 ஸ்பூன்மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்உப்பு – 1/2 ஸ்பூன்எண்ணெய் பொறிக்க – தேவையான அளவு
செய்முறை
இந்த சிப்ஸ் செய்ய முதலில் கேரட்டை இரண்டு புறமும் நறுக்கி தோல் சீவி ஒரு முறை தண்ணீரில் நன்றாக அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வாழைக்காய் சீவும் செய்வதில் கேரட்டை நீளமாக சீவிக் கொள்ளுங்கள். இதை அப்படியே பொறித்தால் நன்றாக இருக்காது. அதனால் கத்தி வைத்து இதை மெலிதாக துண்டு போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

அடுத்து இதை ஒரு பவுலில் போட்ட பிறகு கடலை மாவு அரிசி மாவு கான்ஃபிளவர், கரம் மசாலா, மிளகாய்த்தூள் , உப்பு என அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் முதலில் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதில் காஷ்மீரி சில்லி சேர்த்து இருப்பதால் தனியாக ஃபுட் கலர் சேர்க்க தேவையில்லை.
இவையெல்லாம் நன்றாக கலந்த பிறகு லேசாக தண்ணீர் தெளித்து ஒரு முறை கலந்து அப்படியே வைத்து விடுங்கள். இது ஊற வேண்டிய அவசியம் கிடையாது. இந்த சமயத்தில் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அடுப்பை மிதமான தீக்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் தயார் செய்து வைத்த சிப்சிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து நன்றாக உதிர்த்துப் போட்டு விடுங்கள் அப்படியே போட்டு விட்டால் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும். எண்ணெய்யின் சலசலப்பு அடங்கிய பிறகு எடுத்தால் நல்ல மொறு மொறு கேரட் ஸ்நாக்ஸ் சூப்பராக தயார்.
இதையும் படிக்கலாமே: சோள ரவா இட்லி செய்முறைகேரட்டில் இது வரை பலவகையான டிஷ்களை கேள்விப்பட்டிருப்போம். இந்த கேரட் சிப்ஸ் என்பது கொஞ்சம் வித்தியாசமான டிஷ் ஆக இருக்கும். இது சாப்பிட ரொம்ப சுவையாக இருப்பதுடன், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது இதை நீங்க ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top