கடலை சட்னி ரெசிபி | Kadalai chutney recipe

கடலை சட்னி ரெசிபி | Kadalai chutney recipe


– Advertisement –

காலையில் எழுந்ததுமே முதல் வேலையாக இட்லி, தோசைக்கு என்ன சட்னி அரைப்பது? என்று யோசிக்க ஆரம்பிக்கும் இல்லத்தரசிகளுக்கு வித்தியாசமான சுவையுடன் கூடிய சுலபமான சட்னி ரெசிபிகள் கைவசம் இருந்தால் எப்படி இருக்கும்? அருமையான ஹோட்டல் சுவை கடலை சட்னி இப்படி 10 நிமிடத்தில் செஞ்சு பாருங்க ரொம்பவே வித்தியாசமான சுவையுடன் டேஸ்டாக இருக்கும். கடலை சட்னி எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து காண இருக்கிறோம்.
கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடிபச்சை மிளகாய் – ஒன்றுவேர்க்கடலை – அரை கப்கடலைப்பருப்பு – கால் கப்இஞ்சி – ஒரு இன்ச்சீரகம் – ஒரு ஸ்பூன்எலுமிச்சைச்சாறு – அரை மூடிஉப்பு – தேவையான அளவுதாளிக்க :சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன்கடுகு – 1/2 ஸ்பூன்உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்வரமிளகாய் – ஒன்றுகருவேப்பிலை – ஒரு கொத்து
– Advertisement –

கடலை சட்னி செய்முறை விளக்கம் :
முதலில் இந்த சட்னியை அரைப்பதற்கு தேவையான எல்லா பொருட்களையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே வறுத்த கடலையாக இருந்தாலும், ஒருமுறை வறுத்து செய்தால் சுவை அதிகம். தேங்காயை சிறுசிறு துண்டுகளாகவோ அல்லது துருவியோ ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
பின் ஒரு மிக்ஸர் ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் எடுத்து வைத்துள்ள தேங்காய் துண்டுகளை போடுங்கள். அதனுடன் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை, கடலை பருப்பு ஆகியவற்றையும் சேர்த்து ஒரு ஸ்பூன் சீரகம் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு பெரிய பச்சை மிளகாயை சுத்தம் செய்து காம்பு நீக்கி இரண்டாக வெட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் ஒரு இன்ச் அளவிற்கு இஞ்சி துண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து போடுங்கள்.
– Advertisement –

கடைசியாக அரை மூடி எலுமிச்சை சாறு சேர்த்து, தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ள வேண்டும். எலுமிச்சை சாறு சேர்க்க விரும்பாதவர்கள், அதற்கு பதிலாக ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். இப்பொழுது இந்த சட்னிக்கு தேவையான தாளிப்பு தயார் செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே:காரடையான் நோன்பு 2025 மந்திரம்
தாளிப்புக்கு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டி ஒன்றை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு வரமிளகாயை இரண்டாக கிள்ளி தாளித்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையை கழுவி உருவி போட்டு படபடவென பொரிந்து வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு தாளிப்பை சட்னியில் கொட்டுங்கள். இப்பொழுது கலந்து வைத்து இட்லி, தோசை, உப்புமா, கிச்சடி, ஊத்தாப்பம் போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். ரொம்பவே வித்தியாசமான சுவை தரக்கூடிய இந்த கடலை சட்னி எல்லோரும் விரும்பும் வகையில் நிச்சயம் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top