– Advertisement –
நம்மில் பலரும் மாலை நேரத்தில் டீ குடிக்கும் பொழுது ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவோம். இதே போல் குழந்தைகளும் மாலை நேரத்தில் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் பொழுது ஏதாவது ஒன்றை சாப்பிட வேண்டும் என்று வருவார்கள். அப்படி வருபவர்களுக்கு கடையிலிருந்து வாங்கித் தராமல் வீட்டிலேயே ஏதாவது ஒன்றை செய்து கொடுக்க வேண்டும் என்றுதான் விரும்புவோம்.
அப்படி அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மாலை நேர சிற்றுண்டியாக திகழ்வது பஜ்ஜிதான். பஜ்ஜி செய்வதற்கு கடலை மாவு அல்லது பஜ்ஜி மாவு வேண்டும். இவை இரண்டும் இல்லை என்றால் நம்மால் பஜ்ஜி செய்ய முடியாது. ஆனால் இவை இரண்டும் இல்லாமல் சூப்பராக வீட்டிலேயே பஜ்ஜி செய்ய முடியும். அது எப்படி என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – ஒரு கப்,பச்சரிசி – 1/4 கப்,இஞ்சி பூண்டு பேஸ்ட் 3/4 ஸ்பூன்,பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்,மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்,சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்,உப்பு – தேவையான அளவு,எண்ணெய் பஜ்ஜி பொரிப்பதற்கு – தேவையான அளவு
செய்முறை
முதலில் துவரம் பருப்பையும் பச்சரிசியையும் இரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி தண்ணீரை ஊற்றிவிட்டு நல்ல தண்ணீர் ஊற்றி இரண்டரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இரண்டரை மணி நேரம் கழித்து தண்ணீர் இல்லாமல் மிக்ஸி ஜாரில் இந்த பருப்பையும் அரிசியையும் சேர்த்து இதனுடன் கால் டம்ளர் அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
– Advertisement –
இது இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தண்ணீர் ஊற்றும் பொழுது பார்த்து ஊற்றிக் கொள்ளுங்கள். அதிகமாக தண்ணீர் ஊற்றி விட்டால் பஜ்ஜி எண்ணெய் குடித்து விடும். இப்பொழுது இந்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி விடுங்கள். இந்த மாவில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
நன்றாக சிவப்பு நிறமாக பஜ்ஜி வரவேண்டும் என்னும் பட்சத்தில் காஷ்மீரி சில்லி பவுடரையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் பஜ்ஜி மாவு தயாராகிவிட்டது. இந்த மாவை பயன்படுத்தி வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி என்று உங்களுக்கு எந்த பஜ்ஜி போட வேண்டுமோ அந்த காய்கறிகளை மெல்லிசாக நறுக்கி மாவில் நன்றாக இரண்டு புறமும் துவைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடானதும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் வாழைக்காய் பஜ்ஜியை அதில் போட்டு குறைந்த தீயில் வைத்து நன்றாக வேக விடுங்கள். ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு மற்றொரு புறமும் திருப்பிப் போட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சுவையான பஜ்ஜி தயாராகி விட்டது.
இதையும் படிக்கலாமே: சைவ குடல் குழம்பு செய்முறை
இனிமேல் பஜ்ஜி மாவு இல்லை, கடலை மாவு இல்லை என்று சாக்கு போக்கு சொல்லாமல் வீட்டில் இருக்கக் கூடிய இந்த பருப்பை வைத்து சூப்பராகவும் சுவையாகவும் பஜ்ஜி செய்யலாம். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam