கருப்பு உளுந்து தக்காளி சட்னி செய்முறை

கருப்பு உளுந்து தக்காளி சட்னி செய்முறை

Qries

– Advertisement –

நாம் உண்ணும் உணவுகளில் எந்த அளவிற்கு சத்துக்கள் இருக்கிறதோ அதேபோல்தான் அதை மூடி இருக்கும் தோலின் மீதும் சத்துக்கள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் பலரும் அந்த தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கக்கூடியதை மட்டும்தான் சாப்பிடுகிறார்கள். அது முற்றிலும் தவறு. தோலுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அதிலிருந்து நமக்கு பல வகையான சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. அந்த வகையில் இன்றைய காலத்தில் பலரும் பயன்படுத்த மறந்த ஒரு பொருள்தான் கருப்பு உளுந்து.
உளுந்தில் எந்த அளவிற்கு சத்துக்கள் இருக்கிறதோ அதைவிட பல மடங்கு தோல் நிக்காத கருப்பு உளுந்தில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தங்களுடைய மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு தீர்வாக திகழ்கிறது. மேலும் எலும்புகளின் வலுவை அதிகரிக்கவும் இந்த கருப்பு உளுந்து உதவுகிறது. இந்த கருப்பு உளுந்தை பயன்படுத்தி பல வகையான உணவுப் பொருட்களை தயார் செய்யலாம். இருப்பினும் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு அருமையான தக்காளி சட்னியை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து – 3 டேபிள்ஸ்பூன்எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்கடுகு – ஒரு ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 6பூண்டு – 8 பல்தக்காளி – 3புளி – ஒரு இன்ச் அளவுஉப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் அடுப்பில் கடாயை வைத்துக்கொள்ளுங்கள். கடாய் நன்றாக சூடானதும் அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகை சேர்க்க வேண்டும். கடுகு வெடிக்க ஆரம்பிக்கும் பொழுது உளுந்தை சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
– Advertisement –

உளுந்து நன்றாக சிவந்த பிறகு இதில் தோலுரித்த பூண்டை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பூண்டு நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை அதனுடன் சேர்த்து, புளி, ஒரு இன்ச் அளவிற்கு வெல்லம் சேர்த்து தக்காளி நன்றாக குழையும் வரை வதக்க வேண்டும். தக்காளி நன்றாக குலைந்த பிறகு தேவையான அளவு உப்பையும் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
இது நன்றாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் மாற்றி சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் மாற்றி நமக்குத் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி சட்னியை நன்றாக கரைத்துக் கொள்ளலாம்.
– Advertisement –

இப்பொழுது தாலிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி விட வேண்டும் அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான எளிதில் செய்யக்கூடிய ஒரு அற்புதமான கருப்பு உளுந்து தக்காளி சட்னி தயாராகி விட்டது.
இதையும் படிக்கலாமே:பாசிப்பருப்பு பூரி குஜராத்தி கடி செய்முறை
இந்த சட்னியை இட்லி, தோசை, சப்பாத்தி என்று அனைத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக அரைத்து துவையலாக வைத்தும் நாம் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். கருப்பு உளுந்தை இந்த முறையில் வாரத்திற்கு இரண்டு முறையோ, மூன்று முறையோ சேர்த்துக் கொள்வதன் மூலம் கருப்பு உளுந்தின் பலன்களையும் நம்மால் பெற முடியும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top