
கருப்பு கவுனி அரிசி என்பது நம்முடைய பாரம்பரியமான அரிசி வகைகளுள் ஒன்றாக திகழ்கிறது. இதில் பலவிதமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. கேன்சரை சரி செய்யும் அளவிற்கு மருத்துவ குணம் நிறைந்ததாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கருப்பு கவனி அரிசியை வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் விரும்பி சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த முறையில் புட்டு மாவு தயார் செய்து புட்டு தயார் செய்து கொடுக்கலாம். மிகவும் எளிமையான கருப்பு கவுனி அரிசி புட்டு செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.தேவையான பொருட்கள்கருப்பு கவுனி அரிசி – 1/2 கிலோபச்சரிசி – 200 கிராம்நாட்டுச் சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை – தேவையான அளவுதுருவிய தேங்காய் – ஒரு கப்,உப்பு – ஒரு சிட்டிகை – Advertisement -செய்முறைமுதலில் கருப்பு கவுனி அரிசியை தண்ணீர் ஊற்றி இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக கழுவ வேண்டும். பிறகு அதை ஆறு மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஆறு மணி நேரம் கழித்து தண்ணீரை முற்றிலுமாக வடிகட்டியை பயன்படுத்தி வடித்து விடுங்கள். 10 நிமிடம் வடிகட்டியிலேயே அப்படியே இருக்கட்டும். தண்ணீர் சுத்தமாக வடிந்த பிறகு சுத்தமான ஒரு துணியை விரித்து அதன் மேல் கருப்பு கவுனி அரிசியை பரப்பி நிழல் காய்ச்சலில் காய வைக்க வேண்டும்.லேசாக ஈரப்பதம் இருக்கும் பொழுது அந்த கருப்பு கவுனி அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு முறைக்கு இரண்டு முறை நன்றாக சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த மாவை அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் போட்டு அதன் வாசனை வரும் வரை நன்றாக குறைந்த தீயில் வைத்து வறுக்க வேண்டும். அரிசி மாவில் ஈரப்பதம் முற்றிலும் நீங்கிய பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இப்பொழுது இதனுடன் நாம் பச்சரிசி மாவையும் சேர்த்து நன்றாக கலந்து காற்று புகாத அளவு ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். – Advertisement – எப்பொழுது எல்லாம் புட்டு தயார் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்பொழுது இந்த மாவை எடுத்து அதில் வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய தண்ணீரை தெளித்து புட்டு மாவு பதத்திற்கு பிணைந்து கொள்ள வேண்டும். இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு இட்லி தட்டில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் புட்டு மாவை வைத்து 10 நிமிடம் குறைந்த தீயில் நன்றாக வேக விட வேண்டும். பிறகு அதை எடுத்து வைத்து அதற்கு தேவையான அளவு இனிப்பு மற்றும் தேங்காய் பூ திருவல், விருப்பம் இருப்பவர்கள் நல்லெண்ணெய் போன்றவற்றை கலந்தால் கருப்பு கவுனி புட்டு தயாராகிவிடும்.இதையும் படிக்கலாமே: டபுள் பீன்ஸ் கிரேவிபலவிதமான மருத்துவ குணம் நிறைந்த கருப்பு கவுனி அரிசியை இப்படி புட்டாக தயார் செய்யும் பொழுது வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam