கற்கண்டு சாதம் செய்முறை | Karkandu sadam recipe in tamil

கற்கண்டு சாதம் செய்முறை | Karkandu sadam recipe in tamil

Qries

– Advertisement –

மிகவும் தெய்வீக மாதமாக திகழக்கூடிய மாதம் தான் ஆடி மாதம். அதிலும் குறிப்பாக அம்மன் வழிபாடு என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட அம்மனை வழிபடும் பொழுது அம்மனுக்கு பிடித்த மாதிரி இருக்கக்கூடிய பொருட்களை வைத்து வழிபாடு செய்தால் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் ஆடி மாதம் செய்யக்கூடிய பிரசாதத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
ஆடி மாதத்தில் எப்படி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு விசேஷமும் அதேபோல் ஆடி பௌர்ணமியும் விசேஷம்தான். அப்படிப்பட்ட ஆடி பௌர்ணமி அன்று மகாலட்சுமி தாயாரின் அருளை பெற்று செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் மகாலட்சுமி தாயாருக்கு கற்கண்டு பொங்கலை நெய்வேத்தியமாக படைத்து வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த நெய்வேத்தியத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்

பச்சரிசி – ஒரு கப்
கற்கண்டு – ஒரு கப்
பால் – ஒரு கப்
தண்ணீர் – 2 கப்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 10
திராட்சை – 10
ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்

செய்முறை
முதலில் அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் கற்கண்டையும் அடுப்பில் சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி கற்கண்டு போட்டு பாதி அளவு கரைந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். மீதம் இருக்கும் கற்கண்டு அந்த சூட்டிலேயே கரைந்து விடும்.
இப்பொழுது அடுப்பை குக்கரை வைத்து அதில் பால், ஊற வைத்திருக்கும் அரிசி, தண்ணீர், குங்குமப்பூ, உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி மூன்று விசில் வரும் அளவிற்கு விட வேண்டும். மூன்று விசில் வந்த பிறகு குறைந்த தீயில் வைத்து இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்திருக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
– Advertisement –

குக்கரின் விசில் நன்றாக போனபிறகு அதைத் திறந்து கரண்டியை வைத்து நன்றாக அந்த சாதத்தை வசித்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு நாம் கரைத்து வைத்திருக்கும் கற்கண்டு தண்ணீரையும் அதில் ஊற்றி நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கிண்ட வேண்டும்.
பிறகு ஒரு தாலிக்கும் கரண்டியை எடுத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நெய் உருகியதும் அதில் முந்திரிப் பருப்பு விருப்பம் இருப்பவர்கள் உலர் திராட்சை போன்றவற்றை சேர்த்து நன்றாக வறுத்து அதை கற்கண்டு பொங்கலில் சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கற்கண்டு சாதம் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: சமையல் ருசியாக இருக்க ஒரு சில குறிப்புகள்
விஷயங்களமான நாட்களில் அம்மனுக்கு பிடித்தமான இந்த பொருட்களை நாம் செய்து தருவதன் மூலம் அம்மனின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் அதே சமயம் நமக்கும் ஒரு வித திருப்தி ஏற்படும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top