– Advertisement –
நம்முடைய தமிழர்கள் பண்பாட்டில் ஏதாவது ஒரு நல்ல காரியம் நடக்கிறது என்றால் உடனே ஏதாவது ஒரு இனிப்பை செய்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தரும் பழக்கம் இருக்கும். அதே போல் ஏதாவது ஒரு விசேஷமான நாளாக இருக்கும் பொழுதும் வீட்டில் எளிதில் செய்யக்கூடிய இனிப்பு வகைகளை செய்து வைத்து பூஜை செய்யும் முறையும் இருக்கும். அப்படி செய்யக்கூடிய இனிப்பு பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் கேசரி.
விரைவிலேயே செய்து முடிக்கக்கூடிய கேசரியை எப்படி செய்தாலும் கல்யாண வீட்டில் சாப்பிடக்கூடிய கேசரி அளவிற்கு இல்லை என்பவர்கள் இந்த முறையில் கேசரி செய்தால் அல்வா போல தொட்டாலும் கையில் ஒட்டாமல் சுவையாக இருக்கும். திடீரென்று வீட்டிற்கு விருந்தாடி வந்து விட்டார்கள் அவர்களுக்கு கொடுப்பதற்கு எதுவுமே இல்லை என்று நினைக்கும் பொழுது நமக்கு ஆபத் பாண்டவனாக உதவக்கூடியது இந்த கேசரி தான். இந்த கேசரியை கல்யாண வீட்டு கேசரியாக சுவை மிகுந்ததாக மாற்றுவதற்கு எப்படி செய்ய வேண்டும் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
ரவை – 1/2 கப்
சர்க்கரை – ஒரு கப்,
உப்பு – 2 சிட்டிகை
தண்ணீர் – 1 1/2 கப்
எண்ணெய் – 1/4 கப்
நெய் – 1/4 கப்
ஏலக்காய் – 4
குங்குமப்பூ – 2 சிட்டிகை
செய்முறை
முதலில் 10 டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெயை கடாயில் ஊற்றிக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவு நெய்யையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ரவையை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். குறைந்த தீயில் வைத்துக் கொள்ளுங்கள். ரவை எந்த அளவிற்கு சிவந்து அந்த எண்ணெயில் பொரிந்து வர வேண்டுமோ அந்த அளவிற்கு வறுக்க வேண்டும்.
அப்படி வறுத்தால்தான் கேசரி ஆரிய பிறகும் கையில் ஒட்டாமல் மிருதுவாக இருக்கும். அதே சமயம் ரவையை கருக விடக்கூடாது. இப்படி நாம் வறுத்துக் கொண்டிருக்கும் பொழுது பக்கத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். ரவை நன்றாக வறுபட்ட பிறகு இதில் சர்க்கரை, உப்பு, ஏலக்காய் தூள், குங்குமப்பூ இவற்றை சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு கொதிக்க வைத்திருக்கும் தண்ணீரிலிருந்து ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீரை அதில் ஊற்றி மூடி போட்டு குறைந்த தீயில் வைத்து வேகவிட வேண்டும்.
– Advertisement –
குறைந்தது ஐந்து நிமிடம் நன்றாக வேகட்டும். இப்பொழுது மூடியை திறந்து பார்க்கும் பொழுது நாம் ஊற்றிய எண்ணெயும் நெயும் மேலே பிரிந்து வந்திருக்கும். இதுதான் சரியான பதம். இப்பொழுது பக்கத்து அடுப்பில் தாளிக்கும் கரண்டியை வைத்து அதில் மீதம் இருக்கும் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய பருப்பு வகைகளை அதில் சேர்த்து அது பொன்னிறமாக சிவக்கும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும்.
பொன் நிறமாக சிவந்த பிறகு அதை எடுத்து கேசரியில் சேர்த்து விட வேண்டும். இதில் நாம் குங்குமப்பூ சேர்த்து இருப்பதால் எந்தவித கலரும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. குங்குமப்பூ இல்லாத பட்சத்தில் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் ஃபுட் கலரை சேர்த்துக் கொள்ளலாம். விருப்பம் இருப்பவர்கள் இதில் எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம். உலர் பழங்கள் இருக்கும் பட்சத்தில் அந்த பழங்களையும் நெய்யில் வறுத்து இதில் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் சுவையான கல்யாண வீட்டு கேசரி தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே மஸ்ரூம் சுக்கா செய்முறை
இந்த முறையில் வீட்டில் ஒரு முறையாவது கேசரி செய்து பாருங்கள். உங்களுடைய கேசரிக்கு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அடிமையாகி விடுவார்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam