கஸ்டர்ட் பிரெட் ரெசிபி | Custard bread recipe

கஸ்டர்ட் பிரெட் ரெசிபி | Custard bread recipe

Qries

– Advertisement –

குழந்தைகளுக்கு விருப்பமானவற்றையும், ஆரோக்கியமானவற்றையும் கொடுத்தால் அவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் மிகவும் பலமானவர்களாக இருப்பார்கள். அசத்தலான சுவையில் கஸ்டர்ட் பிரெட் இந்த முறையில் செய்து கொடுத்து பாருங்க, நீங்கள் தான் அவர்களுக்கு சூப்பர் ஸ்டாராக தெரிவீர்கள்! புதிது புதிதாக செய்து கொடுக்க நினைக்கும் தாய்மார்களுக்கு, இந்த கஸ்டர்ட் பிரெட் ரெசிபி ரொம்பவே சுலபமானதாகவும் அமைந்திருக்கிறது. அருமையான சுவையில் எப்படி கஸ்டர்ட் பிரெட் தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி நாம் தொடர்ந்து காண இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
கஸ்டர்ட் பிரெட் ரெசிபி செய்ய தேவையான பொருட்கள் :பிரெட் துண்டுகள் – நான்குவெண்ணெய் அல்லது நெய் – 2 ஸ்பூன்காய்ச்சிய பால் – ரெண்டு டம்ளர்கஸ்டர்ட் பவுடர் – இரண்டு டேபிள் ஸ்பூன்சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன்நட்ஸ் வகைகள் – உங்கள் தேவைக்கேற்ப
– Advertisement –

கஸ்டர்ட் பிரெட் ரெசிபி செய்முறை விளக்கம் :கஸ்டர்ட் பிரெட் செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ரெண்டு கிளாஸ் அளவிற்கு பாலை தண்ணீர் எதுவும் சேர்க்காமல் காய்ச்சி ஆற வைத்து கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் பேன் ஒன்றை வையுங்கள். பேனில் நெய் அல்லது வெண்ணெய் ரெண்டு ஸ்பூன் அளவுக்கு ஊற்றி, அதில் நீங்கள் வாங்கி வைத்துள்ள பிரெட் துண்டுகளை இரண்டு புறமும் பொன்னிறமாக சிவக்குமாறு டோஸ்ட் செய்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அதே பேனில் நீங்கள் காய்ச்சி ஆற வைத்துள்ள பால் ஒரு கிளாஸ் அளவிற்கு சேர்த்து, அதனுடன் சர்க்கரை ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து விடுங்கள். பால் கொஞ்சம் திரண்டு கெட்டியான பதத்திற்கு வந்ததும், டோஸ்ட் செய்து வைத்துள்ள பிரெட் துண்டுகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வையுங்கள். நான்கு பிரெட் துண்டுகளையும் ஒரே அடுக்காகவும் அல்லது இரண்டு இரண்டாகவும் அடுக்கலாம்.
– Advertisement –

பின்னர் மீதம் இருக்கும் ஒரு கிளாஸ் பாலில் கால் கப் பாலை மட்டும் தனியாக ஒரு கப்பில் எடுத்து அதனுடன் கஸ்டர்ட் பவுடரை சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின் மீதம் இருக்கும் எல்லா பாலையும் பிரெட்டின் மீது ஊற்றி ஊற விடுங்கள். பிரெட் எல்லாவற்றையும் உறிஞ்சிக் கொண்டு வந்ததும், கலந்து வைத்துள்ள கஸ்டர்ட் பாலையும் பிரெட்டின் மீது எல்லா பக்கமும் படும்படி ஊற்றி விடுங்கள். பின்பு உங்களுக்கு தேவையான அளவிற்கு நட்ஸ் வகைகளை பொடி பொடியாக மிகவும் மெல்லியதாக நறுக்கி பிரெட்டின் மீது தூவுங்கள்.
இதையும் படிக்கலாமே:24/3/2025 சீதாதேவி விரதம்
பாதாம், பிஸ்தா, முந்திரி, பூசணி விதைகள் போன்ற நட்ஸ் வகைகளை சேர்த்தால் சுவையாக இருக்கும். அவ்வளவுதாங்க, கஸ்டர்ட் பாலில் ஊறிய இந்த வறுத்து வைத்துள்ள பிரெட் துண்டுகளை நட்ஸ் உடன் சேர்த்து சுவைக்கும் பொழுது, அப்படியே நாவில் கரைந்து போய்விடும். ரொம்பவே ருசியான இந்த கஸ்டர்ட் பிரெட் ரெசிபி இதே முறையில் சுலபமாக உங்க வீட்டு குழந்தைகளுக்கு செய்து கொடுத்து நீங்களும் இப்போதே கிச்சன் கில்லாடி ஆகலாமே!

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top