
– Advertisement –
கொங்கு நாட்டு ஸ்பெஷல் ரெசிபிகளில் இந்த காளான் சிந்தாமணியும் ஒன்று! சூடான சாதம் மற்றும் சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டு சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கக்கூடிய இந்த ரெசிபியை செய்வதற்கு 3 பொருட்கள் முக்கியமாக இருந்தால் போதுமானது. 10 நிமிடத்தில் செய்து அசத்தக்கூடிய இந்த சுவையான காளான் சிந்தாமணி எப்படி நாமும் செய்வது? என்பதை தான் தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்க இருக்கிறோம்.
மஸ்ரூம் சிந்தாமணி செய்ய தேவையான பொருட்கள் :
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்சின்ன வெங்காயம் – 25வரமிளகாய் – 10காளான் – ஒரு கப்மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்சீரகம் – ஒரு டீஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்துஉப்பு – தேவையான அளவு
– Advertisement –
மஸ்ரூம் சிந்தாமணி செய்முறை விளக்கம் :
சுவையான இந்த மஷ்ரூம் சிந்தாமணி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 20 லிருந்து 25 சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த உணவின் சுவைக்கு காரணமே இந்த சின்ன வெங்காயமும், காளானும் தான். சமைக்கும் காளானை நன்கு கழுவி சுத்தம் செய்த பின்பு நான்கு துண்டுகளாக ஒவ்வொன்றையும் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடிகனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். நல்லெண்ணெய் சேர்த்து செய்யும் பொழுது சுவை கூடுதலாக இருக்கும். ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது. எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை முழுதாக அப்படியே சேருங்கள். சின்ன வெங்காயம் சீக்கிரமே வதங்கிவிடும்.
– Advertisement –
சின்ன வெங்காயம் சேர்த்த உடனேயே நீட்டு வர மிளகாய்களை காம்புகள் நீக்கி இரண்டாக கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் காரத்திற்கு வேறு எதுவும் சேர்க்கப் போவதில்லை. வரமிளகாய்களின் சுவை இந்த உணவிற்கு ரொம்பவும் முக்கியமானது. மிளகாயின் காரம் விரும்பாதவர்கள் அதில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு சேர்க்கலாம். இவை நன்கு வதங்கிய பின்பு சுத்தம் செய்து வெட்டி வைத்துள்ள காளான் துண்டுகளையும் சேர்த்து வதக்குங்கள். ரெண்டு நிமிடம் நன்கு வதக்கி விடுங்கள். அதன் பிறகு கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். ஒருமுறை நன்கு வதக்கிய பின்பு, அரை கப் அளவிற்கு தண்ணீர் விட்டு வேக வையுங்கள்.
இதையும் படிக்கலாமே:வரும் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் வரை செய்ய வேண்டிய பரிகாரம்
தண்ணீர் அனைத்தும் வற்றி சுண்டி வர வேண்டும். இந்த தண்ணீரிலேயே காளான் நன்கு வெந்துவிடும். வெந்து திரண்டு கெட்டியாக வந்ததும், நறுக்கிய கொத்தமல்லியை சிறிதளவு தூவி ஒரு பிரட்டு பிரட்டி அப்படியே இறக்க வேண்டியதுதான். ரொம்ப ரொம்ப சிம்பிளாக செய்யக்கூடிய இந்த காளான் சிந்தாமணி, நாட்டுக்கோழி, சிற்பி போன்ற பல்வேறு பொருட்களைக் கொண்டும் செய்யப்படுவது உண்டு. சூடான சாதம், சப்பாத்தி, வெரைட்டி ரைஸ் போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கக்கூடிய இந்த சுவையான காளான் சிந்தாமணியை நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, உங்க வீட்டில் இருக்கும் எல்லோரின் பாராட்டையும் பெறுவீங்க!
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam