
– Advertisement –
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான குழம்பு வைக்க வேண்டும், காய்கறி வைக்க வேண்டும், அது நாம் செய்யக்கூடிய டிபன் ஐட்டத்திற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று யோசித்து யோசித்து பல விதங்களில் பல குழம்புகளை செய்திருப்போம். அப்படி செய்யக்கூடிய ஒரு குழம்பை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம். அதுதான் காளான் குழம்பு.
காளானை வைத்து கிரேவி செய்வதை போலவே காளானை வைத்து இந்த முறையில் குழம்பு செய்தோம் என்றால் அதை சாதத்திலும் ஊற்றி சாப்பிடலாம், இட்லி, தோசை சப்பாத்தி என்று அனைத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். கிட்டத்தட்ட கறி குழம்பு சுவையும் மனமும் மிகுந்ததாக இந்த காளான் குழம்பை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
காளான் – ஒரு பாக்கெட்,சின்ன வெங்காயம் – 15,இஞ்சி – ஒரு இன்ச்,பூண்டு – 5 பல்,சீரகம் – 1/2 டீஸ்பூன்,மிளகு – 1/2 டீஸ்பூன்,கிராம்பு – 4,பட்டை – 2,சோம்பு – 1/2 டீஸ்பூன்,தக்காளி – 2,மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,குழம்பு மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்,உப்பு – தேவையான அளவு,தேங்காய் பால் – ஒரு கப்,கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் கிடைக்காத பட்சத்தில் பெரிய வெங்காயமாக இரண்டு வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது தண்ணீர் ஊற்றாமல் இதை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கிராம்பு, பட்டை, சோம்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். பிறகு இதில் நாம் அரைத்து வைத்திருக்கும் வெங்காய விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு இதனுடன் இரண்டு தக்காளியை மிக்ஸி ஜாரில் அரைத்து ஊற்றிக் கொள்ளுங்கள். இதன் பச்சை வாடையும் முற்றிலும் நீங்க வேண்டும். அந்த அளவிற்கு வதக்க வேண்டும்.
பிறகு இதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், தனி மிளகாய் தூள், கரம் மசாலா போன்றவற்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இப்பொழுது காளானை இரண்டாக நறுக்கி இதனுடன் சேர்த்து மசாலா அனைத்தும் காளானில் சேரும் வரை நன்றாக வதக்க வேண்டும். மசாலா அனைத்தும் சேர்ந்த பிறகு இதில் ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பையும் சேர்த்து மூடி போட்டு குறைந்த தீயில் 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பத்து நிமிடம் கழித்து இதில் ஒரு கப் அளவிற்கு தேங்காய் பாலை சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கொதிக்க விட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழையை தூவி அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கமகமக்கும் காளான் குழம்பு தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே:பிரியாணி சுவையில் கொத்தமல்லி புலாவ் செய்முறை
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல காலையில் இட்லி தோசைக்கும் இதை ஊற்றிக் கொள்ளலாம், மதிய சாதத்திற்கும் ஊற்றிக் கொள்ளலாம், இரவு சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம். மிகவும் சுவையான மணமான காளான் குழம்பை இப்படி ஒரு முறை செய்து உங்கள் வேலையை குறைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam