குலோப் ஜாமுன் உடையாமல் செய்யும் முறை

குலோப் ஜாமுன் உடையாமல் செய்யும் முறை

Qries

– Advertisement –

பண்டிகை என்றாலே பலகாரங்கள் இருந்தால் தான் அமர்க்களமாக இருக்கும். அந்த வகையில் தீபாவளி வந்து விட்டாலே ரொம்பவும் ஈசியாக வீட்டிலேயே நாம் தயாரிப்பது குலோப் ஜாமுன், அதிரசம், முறுக்கு போன்றவை தான். இந்த காலத்து தாய்மார்கள் அனைவரும் குழந்தைகளுக்கு விரும்பி தீபாவளிக்கு செய்யும் குலோப் ஜாமுன், விரிசல் விழுகிறது சரியாக வருவதில்லை உடைந்து போகிறது என்று புலம்புகிறார்கள். குலோப் ஜாமுன் விரிசல் விழாமல் தயாரிப்பது எப்படி? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
குலோப் ஜாமுன் விரிசல் வராமல் இருக்க:
முதலில் நாம் தேர்ந்தெடுக்கும் குலாப் ஜாமுன் மாவு சரியானதாக இருக்க வேண்டும். பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் குலோப் ஜாமுன் மாவு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எம்.டி.ஆர் குலோப் ஜாமுன் மாவு ஆரம்பத்தில் புதிதாக செய்பவர்களுக்கு மிகச் சரியான தேர்வாக இருக்கும். இதில் ரொம்பவே சுவையாக உடையாமல் உருண்டையாக தயாரிக்க முடியும்.
– Advertisement –

முதலில் குலாப் ஜாமுன் மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டியவுடன் தண்ணீரை அப்படியே முழுவதுமாக பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள அளவின்படி ஊற்றக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பிசைய வேண்டும். நீங்கள் தண்ணீரை தெளித்து பிசையும் பொழுதே கைகளில் மாவு ஒட்டக் கூடாது. அந்த அளவிற்கு குறைவான தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.
மாவு ஒட்டாமல் ஈரப்பதம் ஆனதும், தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட்டு பிசைய ஆரம்பியுங்கள். நன்கு மிருதுவாக ஒரு பத்து நிமிடம் பிசைந்தால் சரியாக வரும். மாவு பிசைந்து தயாரித்த உடன் கைகளில் ஒட்டக் கூடாது. குலோப் ஜாமுன் மாவை பொதுவாக சிலர் ஊற விடுவார்கள். அப்படி ஊற வைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. மாவு தயார் ஆனதும் சிறு சிறு உருண்டைகளாக கைகளில் உருட்டி கொள்ள வேண்டும். உங்களுடைய இரு கைகளிலும் லேசாக எண்ணெயை தடவிக் கொள்ளுங்கள்.
– Advertisement –

பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டும் பொழுது முதலில் அதிகம் அழுத்தம் கொடுத்தும், உருட்டிய பின்பு லேசாக உள்ளங்கையில் வைத்து உருண்டையின் தலை மேல் ஒரு விரலை மட்டும் வைத்து எல்லா இடங்களும் உள்ளங்கையில் அழுத்தும் படி மென்மையாக உருட்டி விட வேண்டும். இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு மாவில் விரிசல் விழாது. பிறகு சூடான எண்ணெயை காயவைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து உருண்டைகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். இந்த முறையில் நீங்கள் மாவு தயாரிக்கும் பொழுது அதிக எண்ணெய் குடிக்காது.
இதையும் படிக்கலாமே:சகல நன்மைகளையும் வசியம் செய்யும் மந்திரம்
பிறகு பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள அளவின்படி தயாரிக்க வேண்டிய அவசியம் இல்லை, அதில் சற்று அதிக இனிப்பு சுவையை கொடுக்கும்படி அளவு இருக்கும், எனவே ஒரு பாக்கெட்டுக்கு அரை கிலோ சர்க்கரைக்கு, சரி சமமான தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க வைத்து கம்பி பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து ஐந்து நிமிடம் அப்படியே விடுங்கள். அதன் பிறகு நீங்கள் தயாரித்து வைத்துள்ள உருண்டைகளை போட்டு காற்று புகும்படி மூடி வையுங்கள். அவ்வளவுதாங்க நாள் முழுக்க காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை, அரைமணியில் குலோப் ஜாமுன் பாகை நன்கு உறுஞ்சி உப்பி வந்துவிடும். இந்த தீபாவளிக்கு குண்டு குண்டு குலோப் ஜாமுனை விரிசல் இல்லாமல் உடைந்து போகாமல் அப்படியே முழுதாக வாயில் போட்டு சுவைக்கலாமே!

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top