
– Advertisement –
கோடை காலம் வந்து விட்டாலே வீட்டில் ஐஸ் மோல்டுகள் தன் வேலைக்கு தயாராகிவிடும். கொளுத்தும் இந்த சம்மர் வெயிலில் குளு குளு குல்ஃபி ஐஸ் தரமான முறையில் சுவையாக எப்படி நாமே தயார் செய்வது? அரை லிட்டர் பால் இருந்தாலே அருமையான குல்ஃபி ஐஸ் தயார் செய்து வைத்துவிடலாம். குல்ஃபி ஐஸ் செய்வதற்கு என்னென்ன பொருட்கள் தேவை? குல்ஃபி ஐஸ் செய்முறை விளக்கம்? போன்ற சமையல் குறிப்பு சார்ந்த தகவல்களை இனி இப்பதிவில் தொடர்ந்து காண்போம் வாருங்கள்.
குல்ஃபி ஐஸ் செய்ய தேவையான பொருட்கள் :
முழு கிரீம் பால் – அரை லிட்டர்சர்க்கரை – ஒரு கப்ஏலக்காய் – ஐந்துபாதாம், முந்திரி, பிஸ்தா – அரை கப்பிரட் கிரம்ஸ் – அரை கப்குங்குமப்பூ – சிறிதளவு
– Advertisement –
குல்ஃபி ஐஸ் செய்முறை விளக்கம் :
குல்ஃபி ஐஸ் செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அரை லிட்டர் அளவிற்கு புல் க்ரீம் மில்க் எடுத்து ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி நன்கு காய விடுங்கள். பால் காய்ந்து கெட்டியாக வர வேண்டும். 20 லிருந்து 25 நிமிடம் வரை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கிண்டி விட வேண்டும். பாலில் ஏடு கட்ட ஆரம்பிக்கும் பொழுது அதை தனியாக எடுத்து ஓரங்கட்டுங்கள். இப்போது பால் நன்கு கெட்டியான பதத்திற்கு வந்ததும் சிறிதளவு குங்கும பூவை சேர்த்துக் கொள்ளுங்கள். குங்குமப்பூ இல்லை என்றால் அதனை தவிர்க்கலாம் பிரச்சனை இல்லை.
பின்னர் ஒரு மிக்ஸர் ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து, அதனுடன் ஐந்து ஏலக்காய்களை போட்டு ஒரு முறை மிக்ஸியை இயக்கி அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதிலேயே முந்திரி, பாதாம், பிஸ்தா உங்களுக்கு வேண்டிய அளவில் நட்ஸ் வகைகளை போட்டு, அரை கப் அளவிற்கு வறுத்த பிரட் கிரம்ஸ்களை போட்டு மீண்டும் மிக்ஸியை ஒரு சுற்று சுற்றி ஆப் செய்யுங்கள். நட்ஸ் வகைகள் ரொம்பவும் நைசாக அரைபட வேண்டாம்.
– Advertisement –
பிரட் கிரம்ஸ் சேர்த்தால் குல்ஃபி ஐஸ் கெட்டியாக இருக்கும் என்பதால் அதனை சேர்க்கிறோம். பிரட் கிரம்ஸ் இல்லாதவர்கள், அதனை தவிர்த்து செய்யலாம். அரைத்த இந்த பவுடரை கெட்டியாக திரண்டு வந்த பாலுடன் சேர்த்து ஒரு முறை நன்கு கொதிக்க விடுங்கள். பால் கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடுங்கள். இந்தப் பால் நண்டு குளிர ஆறவிட வேண்டும். கொஞ்சம் கூட சூடு இருக்கக் கூடாது. பால் ஆறியதும் அதனை குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து எட்டு மணி நேரம் விட்டு விடுங்கள்.
இதையும் படிக்கலாமே:பங்குனி மாத வசந்த பஞ்சமி
குல்ஃபி மோல்ட் இல்லாதவர்கள் சிறுசிறு டம்ளர்களில் ஊற்றி அதில் ஒரு ஐஸ்கிரீம் குச்சி அல்லது ஸ்பூனின் பின் பாகத்தை சொருகி வையுங்கள். எட்டு மணி நேரம் கழித்து குல்ஃபி மோல்டுகளை 10 செகண்ட் சாதாரண தண்ணீரில் வைத்து குச்சியை எடுத்தால் குல்ஃபி ஐஸ் தனியா பிரிந்து வந்துவிடும். ரொம்பவும் ஆரோக்கியம் நிறைந்த இந்த சுவையான குல்ஃபி ஐஸ் குளு குளுவென்று இந்த கோடை வெயிலுக்கு இதமாக இப்பொழுது தயாராகி விட்டது. நீங்களும் இதே முறையில் செய்து சுவைத்து பாருங்கள், ருசி ரிச்சாக அட்டகாசமாக இருக்கும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam