குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்காக காலையில் கொடுக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான பானம்.

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்காக காலையில் கொடுக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான பானம்.

Qries

– Advertisement –

இந்த காலத்தில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பானத்தை வழங்க வேண்டும் என்பதற்காக தாய்மார்கள் கடைக்கு சென்று ஹார்லிக்ஸ், பூஸ்ட், போன்விடா என்று பல சத்து மாவு பொடிகளை வாங்கி வந்து தருகிறார்கள். அதில் என்னென்ன கலந்து இருக்கிறது அதனால் என்ன பலன் ஏற்படும் என்பதை முழுமையாக அருந்திடாமல் செய்கிறார்கள். அதை தவிர்த்து விட்டு நாமே வீட்டில் இந்த மாதிரி மால்ட் தயார் செய்யலாம். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் ஏபிசி மால்ட் எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.
பொதுவாக ஏபிசி ஜூஸ் என்று அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆப்பிள், பீட்ரூட், கேரட் இது மூன்றையும் சேர்த்து ஜூஸ் செய்து குடித்தால் அதனால் உடம்பிற்கு பல ஆரோக்கியங்கள் மேம்படுகின்றது என்றும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எந்தவித நோய் தாக்குதலும் இன்றி நலமாக வாழ முடியும் என்றும் அனைவருக்கும் தெரியும். இதே ஆப்பிள், கேரட், பீட்ரூட்டை வைத்து அற்புதமான ஒரு மால்ட்டை நாம் தயார் செய்து வைத்துக் கொண்டோம் என்றால் தினமும் நாமும், நம் குழந்தைகளும் டீ, காபி என்பதற்கு பதிலாக இந்த மால்டை அருந்தலாம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்

ஆப்பிள் – 1/4 கிலோ
கேரட் – 1/4 கிலோ
பீட்ரூட் – 1/4 கிலோ
நாட்டு சக்கரை – 3/4 கிலோ
பாதாம் – 25 கிராம்
முந்திரி – 25 கிராம்
ஏலக்காய் – 25 கிராம்

செய்முறை
முதலில் ஆப்பிள், கேரட், பீட்ரூட் இவை மூன்றையும் தோல் உரித்து நன்றாக கழுவி சுத்தம் செய்து துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவை மூன்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு பெரிய கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் பாதாம், ஏலக்காய், முந்திரி போன்றவற்றை சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதே கடாயில் நாம் அரைத்து வைத்திருக்கும் இந்த விழுதை ஊற்ற வேண்டும். அதனுடன் நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். தண்ணீர் சத்து சுத்தமாக குறையும் அளவிற்கு கிண்டி கொண்டே இருக்க வேண்டும். வறுத்து வைத்திருக்கும் பாதாம், முந்திரி, ஏலக்காய் இவை மூன்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

தண்ணீர் வற்றிய பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு கைவிடாமல் நன்றாக அழுத்தி கிளற வேண்டும். எந்த அளவுக்கு அழுத்தி கிளறுகிறோமோ அந்த அளவுக்கு மால்ட் பொடி பொடியாக வரும். அழுத்தி கிளறாமல் விட்டால் பெரிய பெரிய கட்டிகளாக வந்துவிடும்.
இப்பொழுது அதை அரை மணி நேரம் வரை நன்றாக சூடு ஆறும் அளவிற்கு ஆறவிட வேண்டும். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி எடுத்தால் பவுடர் ஆகிவிடும். அவ்வளவுதான் ஏபிசி மால்ட் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: சப்பாத்தி மீந்து போன காய்கறிகள் சேர்த்து குழந்தைகளுக்கு இப்படி சுவையா செஞ்சி குடுங்க.
ஒரு கிளாஸ் பாலிற்கு இரண்டு ஸ்பூன் அளவிற்கு நாம் இதை சேர்த்து பருகலாம். சத்தான ஹெல்த் ட்ரிங்க் தயாராகி விட்டது.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top