கேரட் சிப்ஸ் ரெசிபி | Carrot chipt recipe

கேரட் சிப்ஸ் ரெசிபி | Carrot chipt recipe

Qries

– Advertisement –

சிப்ஸ் வகைகளில் அதிகம் விரும்பி சாப்பிடப்படுவது உருளைக்கிழங்கு சிப்ஸ் தான். விதவிதமான சிப்ஸ் வகைகளில் குழந்தைகள் அதிகம் விரும்புவது இந்த கேரட் சிப்ஸ் ஆகும். கேரட்டில் கால்சியம், பாஸ்பரஸ், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, வைட்டமின் கே ஆகிய சத்துக்களுடன், நார் சத்தும் நிறைந்துள்ளது. இதிலுள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் செய்யும், இந்த கேரட்டை கொண்டு சிப்ஸ் செய்து கொடுத்தால் ஆரோக்கியத்துடன் சேர்ந்து நாவிற்கும் இனிமை கிடைக்கும். குழந்தைகள் விரும்பும் கேரட் சிப்ஸ் எப்படி சுலபமான முறையில் தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.
கேரட் சிப்ஸ் செய்ய தேவையான பொருட்கள் :
கேரட் – கால் கிலோமிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன்கான்பிளவர் மாவு – அரை டீஸ்பூன்அரிசி மாவு – அரை டீஸ்பூன்கடலை மாவு – அரை டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுசமையல் எண்ணெய் – தேவையான அளவு.
– Advertisement –

கேரட் சிப்ஸ் செய்முறை விளக்கம் :
முதலில் கால் கிலோ அளவிற்கு கேரட்டை தோல் சீவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கேரட்டை வட்ட வட்ட துண்டுகளாகவும் அல்லது குச்சி போல நீள நீளமாகவும் உங்கள் குழந்தைகளின் விருப்பம் போல மெல்லியதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். வெட்டி வைத்த கேரட் துண்டுகளை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நறுக்கி வைத்துள்ள கேரட் துண்டுகளுடன் மிளகு மற்றும் சீரகத்தை நைசான தூளாக பொடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் மிளகாய் தூள், கான்பிளவர் மாவு, கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை மேற்க்கூறிய அளவின்படி சேர்த்துக் கொள்ள வேண்டும். கடைசியாக இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன் அளவிற்கு மட்டும் சேர்த்து, கொஞ்சம் போல உப்பு போட்டு நன்றாக பிசறி விடுங்கள். ஒரு பத்திலிருந்து பதினைந்து நிமிடம் அப்படியே ஊற விட்டு விட வேண்டும்.
– Advertisement –

பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் அடிகனமான வாணலி ஒன்றை வையுங்கள். சிப்ஸ் பொரிக்க தேவையான அளவிற்கு சமையல் எண்ணெய் சேர்த்து காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்து வந்ததும், அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு துண்டுகளாக எடுத்து சேர்க்க வேண்டும். மொறு மொறு என்று பொரிந்து வந்ததும், எல்லா புறமும் ஒன்று போல சிவக்க பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:25-01-2025 கடன் தீர தேய்பிறை ஏகாதசி மந்திரம்
பின்னர் ஒரு தட்டில் டிஷ்யூ அல்லது நியூஸ் பேப்பர் வைத்து அதில் போடுங்கள். கடைசியாக கொஞ்சம் கருவேப்பிலையை எண்ணெயில் போட்டு மொறு மொறுவென்று பொரித்து எடுத்து நொறுக்கி தயார் செய்து வைத்துள்ள சிப்ஸ் உடன் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி பரிமாறினால் அருமையான கேரட் சிப்ஸ் ரெடி! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கக்கூடிய இந்த ஆரோக்கியம் நிறைந்த கேரட் சிப்ஸ் நீங்களும் இதே முறையில் ட்ரை பண்ணி பாருங்க, எல்லோரும் உங்களை நிச்சயம் பாராட்டுவாங்க.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top