
– Advertisement –
நாம் அனைவரும் நம்முடைய வீட்டில் ஏதாவது ஒரு விசேஷ நாட்களிலோ அல்லது விரத நாட்களிலோ இனிப்பு செய்யும் பழக்கம் வைத்திருப்போம். அப்படி செய்யக்கூடிய இனிப்பு வகைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் பாயாசம். பாயாசம் வகைகளில் வைக்கலாம். ஜவ்வரிசி பாயாசம், பால் பாயாசம், சேமியா பாயாசம், பாசிப்பருப்பு பாயாசம் என்று கூறிக் கொண்டே செல்லலாம். இப்படி செய்யக்கூடிய பாயாசங்களை இன்னும் சற்று சுவை கூடுதலாகவும் அதேசமயம் ஆரோக்கியமாகவும் செய்தால் எப்படி இருக்கும்? ஆம் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பாசிப்பருப்புடன் கேரட்டை சேர்த்து பாயாசம் எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – ஒரு கப்துருவிய கேரட் – ஒரு கப்நெய் – 2 டேபிள் ஸ்பூன்பாஸ்மதி அரிசி – 1/4 கப்முந்திரி – 20தேங்காய் துருவியது – 1/4 கப்ஏலக்காய் – 2பால் – 2 கப்வெல்லம் – ஒரு கப்கிஸ்முஸ் முந்திரி – விருப்பத்திற்கு ஏற்ப
– Advertisement –
செய்முறை
முதலில் பாசிப்பருப்பை ஒரு கடாயில் போட்டு சிவக்க வறுத்து க்கொள்ளுங்கள். பிறகு அதில் தண்ணீர் ஊற்றி அதை சுத்தம் செய்து ஒரு குக்கரில் பாசிப்பருப்பை போட்டு ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி அது மலர வேகவிட்டு இறக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு பவுலில் கால் கப் பாஸ்மதி அரிசி மற்றும் 20 முந்திரி பருப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து அதில் கால் கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நெய்யை சேர்த்து துருவிய கேரட்டை அதில் சேர்த்து வதக்க வேண்டும் கேரட்டின் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். கேரட் நன்றாக வதங்கிய பிறகு இதில் நாம் வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்பொழுது இதில் ஒரு கப் அளவிற்கு காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்துக் கொள்ளுங்கள். நாம் ஏற்கனவே பாஸ்மதி அரிசியையும் முந்திரிப் பருப்பையும் ஊற வைத்திருந்தோம் அல்லவா? அந்த ஊற வைத்த தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் துருவிய தேங்காய், ஏலக்காய் இவற்றையும் சேர்த்து நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
கேரட் நன்றாக வெந்த பிறகு இதில் நாம் அறைத்து வைத்திருக்கும் பாஸ்மதி அரிசி விழுதையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். மூடி போட்டு பத்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து கொதிக்க விடுங்கள். 10 நிமிடம் கழித்து மூடியை திறந்து பார்க்கும் பொழுது இது கெட்டியாகி இருக்கும். இப்பொழுது மறுபடியும் ஒரு கப் அளவிற்கு பாலை ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள்.
கேரட் நன்றாக வெந்து குலைந்த பிறகு இதில் ஒரு கப் அளவிற்கு வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். வெல்லம் கரைந்த பிறகு ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் முந்திரி, கிஸ்முஸ், பாதாம் போன்றவற்றை வருத்து அந்த நெய்யோடு கொதித்துக் கொண்டிருக்கும் பாயாசத்தில் ஊற்றி ஒரு முறை நன்றாக கலந்து அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான கேரட் பாசிப்பருப்பு பாயாசம் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே:அரைத்த தக்காளி சட்னி ரெசிபி
எப்பொழுதும் செய்யக்கூடிய பாயாசத்தையே செய்து தராமல் இப்படி சற்று வித்தியாசமான அதே சமயம் ஆரோக்கியமான பாயாசத்தை செய்து கொடுப்பதன் மூலம் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam