கேரட் பால் ரெசிபி | Carrot paal recipe

கேரட் பால் ரெசிபி | Carrot paal recipe

Qries

– Advertisement –

காலையில் எழுந்ததுமே காபி, டீ போன்ற அடிமையாக்கும் பானங்களை தவிர்த்து ஆரோக்கியம் நிறைந்த ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து குடிக்கலாம். அந்த வகையில் இந்த சுடச்சுட சூப்பரான கேரட் பால் நல்ல ரெசிபியாக இருக்கப் போகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே குடித்து ஆரோக்கியமாக இருக்கக்கூடிய இந்த சுவையான கேரட் பால் ரெசிபி சுலபமான முறையில் எப்படி தயார் செய்வது? என்பதைத் தான் தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவை படித்து அறிந்து கொள்ள போகிறோம்.
கேரட் பால் ரெசிபி செய்ய தேவையான பொருட்கள் :
கேரட் – 1/4 கிலோகாய்ச்சிய பால் – இரண்டு டம்ளர்ஊற வைத்த பாதாம் – 10ஏலக்காய் – 4பேரீச்சை – 2நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு
– Advertisement –

கேரட் பால் ரெசிபி செய்முறை விளக்கம் :
முதலில் கால் கிலோ அளவிற்கு கேரட்டை நன்கு மேல் தோல் சீவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்பு அதை இரண்டாக வெட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து ஐந்து நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வேக வைத்துள்ள கேரட்டை துண்டுகளாக வெட்டி ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முந்தைய நாள் இரவே பாதாம் பருப்புகளை ஊற வையுங்கள். காலையில் ஊற வைத்த பாதாம் பருப்புகளை தோல் உரித்து கேரட்டுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கப் அளவிற்கு காய்ச்சிய பால், 2 பேரீச்சை பழங்களையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் காய்ச்சிய பாலுடன் இந்த கலவையையும் சேர்த்து கொதிக்க வையுங்கள். கொதி வந்ததும் உங்கள் இனிப்பிற்கு தகுந்தாற்போல நாட்டு சர்க்கரை சேர்க்கலாம். நாட்டு சர்க்கரைக்கு பதிலாக பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, வெல்லம் போன்றவற்றையும் நீங்கள் விருப்பமானபடி சேர்த்துக் கொள்ளுங்கள். பால் கொதித்து நன்கு கெட்டியான பதத்திற்கு வந்ததும், ஏலக்காய்களை பவுடர் போல இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். ரெண்டு நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைத்து அப்படியே சுடச்சுட டம்ளரில் ஊற்றி பரிமாற வேண்டியதுதான்.
– Advertisement –

ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்த இந்த சூடான சுவையான கேரட் பாலில் அவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. காலையிலேயே இதை எடுத்துக் கொள்ளும் பொழுது உடலுக்கு நல்ல வலுவும், உற்சாகமும் கிடைக்கும். குழந்தைகளுக்கு காலையில் இதை செய்து கொடுக்கும் பொழுது அவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். நல்ல அறிவாற்றலும், கண்பார்வையும் மேம்படும். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதை தினமும் காலையில் எடுத்துக் கொள்வதால் எண்ணற்ற நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:பணக்கஷ்டம் தீர வெற்றிலை தீர்த்தம்
கேரட்டில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். அதனுடன் பாதாம் சேரும் பொழுது சொல்லவே வேண்டாம். எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் தடுக்கும். பாலில் இருக்கும் கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். கேரட்டில் ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை நம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். தினமும் இந்த கேரட் பால் குடிப்பதால் சரும பிரச்சனைகள் நீங்கி முகம் பளபளப்பாக மாறும். உடலையும், சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் இந்த ஆரோக்கிய பானத்தை தினமும் காலையில் முதல் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள், உங்களின் ஆரோக்கியத்தையும் வலுவாக்குங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top