
– Advertisement –
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருக்கும். அந்த வகையில் கொங்கு நாட்டின் பிரபலமாக திகழக்கூடியது தான் கொங்கு நாட்டு அடை. இந்த அடையை வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு தனியாக தொட்டுக் கொள்வதற்கு என்று எந்த சட்னியும் செய்ய தேவை இல்லை. இந்த அடையை செய்வதற்கு பெரிதும் பொருட்செலவோ நேரச் செலவோ ஏற்படாது. மிகவும் எளிதில் செய்து முடித்து விடலாம். காலை உணவாகவும் மாலை நேரத்தில் ஒரு ஸ்நாக்ஸ் ஆகவும் இதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படிப்பட்ட கொங்கு நாட்டு அடையை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – ஒரு கப்துவரம் பருப்பு – 1/4 கப்தேங்காய் – 1/2 மூடிசின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவுபூண்டு – 3 பல்இஞ்சி – 1/2 இன்ச்சீரகம் – ஒரு ஸ்பூன்உப்பு – தேவையான அளவுபெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்,கொத்தமல்லி பொடியாக நறுக்கியது – ஒரு கைப்பிடி அளவு
– Advertisement –
செய்முறை
முதலில் புழுங்கல் அரிசியையும் துவரம் பருப்பையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தமான தண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை மூடி தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி இவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் மட்டும் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.
அடுத்ததாக புழுங்கல் அரிசியையும் துவரம் பருப்பையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதற்கும் ஒரு ஸ்பூன் அளவு மட்டுமே தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்து நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் சீரகம், உப்பு, பெருங்காயத்தூள், கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் அடை மாவு தயாராகிவிட்டது.
– Advertisement –
இப்பொழுது அடையை சுடுவதற்கு ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காயட்டும், ஒரு துணியை விரித்து அதில் இந்த அடை மாவை எடுத்து ஒரு உருண்டையாக உருட்டி அந்த துணியில் வைத்து தட்டிக் கொள்ள வேண்டும். ஓட்ட வடை தட்டுவோம் அல்லவா? அப்படி தட்டி அதை எடுத்து அப்படியே எண்ணெயில் போட வேண்டும். பிறகு ஒரு கரண்டியை பயன்படுத்தி எண்ணெயை அந்த அடைக்கு மேல் ஊற்ற வேண்டும். அப்பொழுது இந்த ஆடை பூரி போல உப்பி வரும். இப்பொழுது திருப்பி போட்டு மறுபடியும் எண்ணெயை அதே மாதிரி எடுத்து ஊற்றி பூரி சுடுவது போல் சுட்டு எடுத்து வைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான கொங்கு நாட்டு அடை தயாராகிவிட்டது. சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே:எலுமிச்சை சாதம் ரெசிபி
எளிதில் செய்யக்கூடிய பலவிதமான உணவுப் பொருட்கள் இருக்கின்றன. நம் நேரத்தையும் மிச்சப்படுத்தி அதே சமயம் குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இருக்கக்கூடிய இந்த கொங்கு நாட்டு அடையை ஒரு முறை வீட்டில் செய்து கொடுத்து பாருங்கள்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam