
– Advertisement –
மாறிவரும் உலகில் எதையும் கஷ்டப்பட்டு இப்பொழுதெல்லாம் நம் தாய்மார்கள் தன் பிள்ளைகளுக்கு செய்து கொடுப்பதில்லை. காசு கொடுத்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் ஸ்னாக்ஸ் வகைகளை வாங்கிக் கொடுத்து குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தெரியாமலேயே விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ரொம்பவும் சிரமப்படாமல் ஆரோக்கியம் நிறைந்த இந்த கொண்டைக்கடலை சாலட் எப்படி தயார் செய்வது? என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவை படித்து செய்து கொடுங்கள், குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கொண்டைக்கடலை சாலட் தேவையான பொருட்கள் :
கொண்டைக்கடலை – 1 கப்வெள்ளரிக்காய் – 1கேரட் – பாதி அளவுவெங்காயம் – 1தக்காளி – 1குடைமிளகாய் – பாதி அளவுபச்சை மிளகாய் – 1சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்கொத்தமல்லி தழை – சிறிதுதேங்காய் எண்ணெய் – அரை ஸ்பூன்எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்உப்பு – தேவையான அளவு
– Advertisement –
கொண்டைக்கடலை சாலட் செய்முறை விளக்கம் :
கொண்டைக்கடலை சாலட் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு கொண்டைக் கடலையை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து இரவில் ஊற வையுங்கள். இரவு முழுவதும் ஊறிய பின்பு காலையில் எழுந்ததும், ஒரு முறை கழுவி குக்கரில் போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நான்கு விசில் விட்டுக் கொள்ளுங்கள். பின் அடுப்பை அணைத்து விடுங்கள்.
குக்கரில் இருக்கும் பிரஷர் முழுவதுமாக அடங்கியதும் தண்ணீரை வடிகட்டி விட்டு வேக வைத்த கொண்டைக் கடலையை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை சுத்தம் செய்து பின் பொடி பொடியாக மெல்லியதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் சீரகத்தை லேசாக வாணலியில் போட்டு வறுத்து பொடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே வறுத்து அரைத்த சீரகத்தூள் இருந்தால் அதை போடலாம். பின் அதனுடன் அரை ஸ்பூன் மிளகுத்தூள், கொஞ்சம் போல் உப்பு தூவி கலந்து விடுங்கள்.
– Advertisement –
பின்னர் வாணலியில் அரை ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரு சிறிய பச்சை மிளகாயை பொடி பொடியாக வட்ட வடிவில் நறுக்கி சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் தயார் செய்து வைத்துள்ள கொண்டைக்கடலை கலவையை இதனுடன் சேருங்கள். பச்சை மிளகாயை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து வறுக்கும் பொழுது அதன் காரத்தன்மை குறையும், சாப்பிடுவதற்கும் நன்றாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே:சொந்த நிலம் வீடு வாங்க செவ்வாய்க்கிழமை பரிகாரம்
பின்னர் அரைமுடி எலுமிச்சைச் சாறை பிழிந்து பொடி பொடியாக கொத்தமல்லி தழையை நன்கு கழுவி சுத்தம் செய்து நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பிரட்டு பிரட்டி அப்படியே ஒரு கிண்ணத்தில் போட்டு கொடுத்தால், வேண்டாம் என்று எந்த குழந்தையும் சொல்லாது, அவ்வளவு ருசியாக இருக்கும். இதை பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அடிக்கடி புரத சத்துள்ள பயறு வகைகளை இது போல சுண்டல் செய்து வெறுமனே தாளித்துக் கொடுக்காமல், சாலட் செய்து கொடுத்தால் சாப்பிடுவதற்கோ நன்றாக இருக்கும், ஆரோக்கியமும் கூடும். நீங்களும் வீட்டில் இதே முறையில் ட்ரை பண்ணி பாருங்க, உங்க குழந்தைகளின் ஆரோக்கியம் இனி உங்கள் கையில்!
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam